அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

தாவர மற்றும் விலங்குப் பொருட்களை தயாரிக்கும் முறைகள்

பஞ்சகாவ்யா


தேவையான பொருட்கள் : பிளாஸ்டிக் பீப்பாய், அளவு உருளை, காடாத்துணி

மூலப்பொருட்கள் : மாட்டுசாணம் – 5 கி; மாட்டுக்கோமியம் – 3 லி; மாட்டுப்பால் – 2 லி; தயிர் – 2 லி; நெய் – 1 லி;

செய்முறை

  1. பிளாஸ்டிக் பீப்பாயில் பசுஞ்சாணம் மற்றும் நெய் கலந்து 3 நாட்கள் வைத்திருக்கு வேண்டும்.
  2. அதே நாளில் மற்றொரு பீப்பாயில் மற்ற பொருட்களை கலந்து வைக்க வேண்டும். (மாட்டுச் சாணம், பசும்பால், பசுந்தயிர்)
  3. மூன்றாம் நாளில், பீப்பாயில் உள்ள கலவையை நன்கு கலக்கி திறந்த நிலையில் 7 நாட்கள் வைத்திருக்க வேண்டும். மரக்குச்சியை கொண்டு இந்த கலவையை ஒரு நாளுக்கு 2 முறை கலக்கி விட வேண்டும்.
  4. பீப்பாயின் வாயை காடாத்துணி கொண்டு மூடி வைக்க வேண்டும்.
  5. 7 நாட்களுக்கு பிறகு, இந்த கலவையை காடாதுணி கொண்டு வடிகட்டி பீப்பாயில் மூடி வைக்க வேண்டும்.
  6. இதனால் 10 லி பஞ்சகாவ்யா கிடைக்கும்.

கவனிக்க வேண்டியவை

நிறம் – பழுப்பு நிறம், மிகவும் அடர்த்தியான திரவம், நறுமணம் – புளித்த நாற்றம்

குறிப்பு

  1. காற்றுப்புகாத பாட்டில்களில் அடைத்து வைக்க கூடாது.
  2. பாட்டில்களை 3 நாட்களுக்கு ஒரு முறை குலுக்கி விடுவதால் மேற்பரப்பில் வளரும் பூஞ்சைகளை தவிர்க்கலாம்.
  3. மரக்குச்சிகளை கொண்டு கலவையை கிளறி விடவும்.
  4. குழாய் தண்ணீரை உபயோகப்படுத்தலாம்.
  5. கொதிக்க வைத்த பாலை குளிர வைத்து அதன்பின் மற்ற பொருட்களுடன் கலக்க வேண்டும்.
panchagavya

இனிப்புக்கொடி சாறு


இனிப்புக்கொடி கிழங்கு பவுடர் 500 கி எடுத்து, 2.52 லி தண்ணீரில் கலந்து சாறு எடுக்க வேண்டும். விதைகளை காடாதுணியில் கட்டி இந்த சாற்றில் அரை மணி நேரம்  ஊற வைக்க வேண்டும். பின் நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.

sweet flag

வேலமர கசாயம்


  1. வேர்களை விடுத்து வேல மர இலைகளை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
  2. இதை அகன்ற வாயுடைய பித்தளை கிண்ணத்தில் பரிமாற்றம் செய்து 8 லி தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  3. இதனை குறைந்த சுடரில் ¼ பங்கு குறையும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  4. பின் குளிர வைக்க வேண்டும்.
  5. காடாதுணி கொண்டு வடிகட்டி வெள்ளை நிற குடுவைகளில் சேகரித்து வைக்க வேண்டும்.
  6. இதிலிருந்து நமக்கு உலி கலவை கிடைக்கிறது.
 

அமிர்தக் கரைசல்


ஒரு சிமெண்ட் தொட்டியில் மாட்டுச்சாணம் (10 கி), மாட்டுக்கோமியம் (10 லி), நாட்டு வெல்லம் (1கி), தண்ணீர் (100லி) எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இந்த சாற்றை விதை நேர்த்திக்காக அடுத்த நாளில் பயன்படுத்தலாம்.

amirthakaraisal

ஜீவாமிர்தம்


மாட்டுச்சாணம் (10கி), மாட்டு கோமியம் (10 கி), பழைய வெல்லம் (2கி), கடலை மாவு, துவரை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, உளுந்தம் பருப்பு (2கி), மண் (1கி) மற்றும் தண்ணீர் (200 லி)

பீப்பாயில் 100 லி தண்ணீர் எடுத்து அதனுடன் மாட்டுச்சாணம் (10 கி) மற்றும் மாட்டுக்கோமியம் (10 லி) சேர்த்து கலக்க வேண்டும். மரக்குச்சி கொண்டு நன்கு கலக்கி பழைய வெல்லம் 2 கி மற்றும் 2 கி மாவு சேர்க்க வேண்டும். மறுபடியும் நன்கு கலக்க வேண்டும். பின் 2-7 நாட்களில் எவ்வித இடையூறுமின்றி நொதிக்க விட வேண்டும். தொடர்ச்சியாக ஒரு நாளுக்கு ஒருமுறை கலக்கி விட வேண்டும்.

1 2 3
       
6 5 4

அமிர்த பானி


தேன் (500 கி), மாட்டுச்சாணம் (10 கி) இரண்டையும் கலந்து ஒரு பசை போன்று மாற்ற வேண்டும். அதனுடன் நெய் (250 கி) சேர்த்து அதிவேகத்துடன் கலக்க வேண்டும். பின்னர் தண்ணீர் (200 லி) சேர்த்து நீர்த்த வேண்டும்.

amrit pani

Updated on : Feb 2016

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16