மக்காச்சோளம்
சோளம்
- விதைப்பதற்கு முன் விதைகளை பெருங்காய கரைசலுடன் (75-100 கிராம்/ 1 லி தண்ணீர்) கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். இந்த முறை சோளத்தை சோள காளான் நோயிலிருந்து பாதுகாக்கிறது.
- விதைப்பதற்கு முன் விதைகளை அமுக்கராங்கிழங்கு மற்றும் ஊமத்தை வேர் சாற்றில் கலந்து (1 கிலோ கிராம் விதை மற்றும் 250 கிராம் அமுக்கிராங்கிழங்கு) 50 கிராம் ஊமத்தை இலையுடன் தண்ணீர் கலந்து அரைக்கவும். நிழலில் உலர்த்த வேண்டும். இந்த முறை தரமான மற்றும் நோயில்லா நாற்றுகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.
|
|
- உலர்ந்த மாட்டுச் சாண தூள் மற்றும் மாட்டுக் கோமியம் (100 கிராம் மாட்டு சாண தூள் மற்றும் 250 மிலி மாட்டுக் கோமியம்/ 1 கிலோ விதை) கொண்டு விதை நேர்த்தி செய்வதால் விதைப்பின் செயலற்ற தன்மையை நீக்கி முளைப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
- விதைகளை எலுமிச்சை நீரில் (1கிலோ எலுமிச்சை + 120 லிட்டர் தண்ணீர் கலந்து 10 நாள் வைத்து மேலோட்டமான நீரை மட்டும் எடுத்து உபயோகிக்க வேண்டும்.) இரவு முழுவதும் ஊற வைக்க வெண்டும். பின் உலா்த்தி விதைக்க வேண்டும்.
|
கம்பு மற்றும் ராகி
- விதைப்பதற்கு முன் கம்பு மற்றும் ராகி விதைகளை பஞ்சகாவ்யாவில் (35 மிலி தண்ணீரில்) 7-8 மணிநேரம் ஊறவைப்பதால் நோயில்லா நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.
- விதைப்பதற்கு முன் விதைகளை அமுக்கராங்கிழங்கு மற்றும் ஊமத்தை வேர் சாற்றில் கலந்து (1 கிலோ கிராம் விதை மற்றும் 250 கிராம் அமுக்கிராங்கிழங்கு) 50 கிராம் ஊமத்தை இலையுடன் தண்ணீர் கலந்து அரைக்கவும். நிழலில் உலர்த்த வேண்டும். இந்த முறை தரமான மற்றும் நோயில்லா நாற்றுகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.
Updated on : Feb 2015 |