கடலை
நன்கு புளித்த மோரில் விதைகளை கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இந்த அமிலத் தன்மை கொண்ட மோர் வாடல் மற்றும் வேர் அழுகல் நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது.
உளுந்து மற்றும் பச்சைப் பயறு
விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி (4 கிராம்/ 1 கிலோ விதை) அல்லது சூடோமோனாஸ் (10 கிராம் / 1கிலோ விதை) கொண்டு விதை நேர்த்தி செய்வதால் நோயை உண்டாக்கும் நுண்ணுயிர்களிலிருந்து பாதுகாக்கலாம்.
பச்சைப்பயறு விதைகளை சிற்றுருண்டையாக்கல்
பிளாஸ்டிக் தட்டில் விதைகளை எடுத்து அதில் சிறிய அளவு மைதா கலக்க வேண்டும். இதனை மெதுவாக குலுக்கி மைதா விதைகளின் மேல் ஒரு சீராக ஒட்டும்படி செய்ய வேண்டும். இதனுடன் அரப்புத்தூள் கலந்து மேற்கூறியபடி குலுக்க வேண்டும். இந்த விதை உருண்டைகளை நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும் . இந்த செயல்முறை சிறிய மற்றும் ஒழுங்கற்ற விதைகளை கையாள உதவுகிறது. இது துல்லிய விதைப்பு மற்றும் விதையின் தோற்றத்தை உறுதிபடுத்துகிறது. |