அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

காய்கறிகளுக்கான விதைநேர்த்தி தொழில்நுட்பங்கள்

  • விதைப்பதற்கு முன் எல்லா விதமான காய்கறி விதைகளையும் உயிர் வாயு குழம்பில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் காய்கறி விதைகளை 2 சதவிகித பஞ்சகாவ்யா (20 மிலி பஞ்சகாவ்யா/ 980 மிலி தண்ணீர்) 30 நிமிடங்கள் ஊற வைப்பதால் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.

வெண்டைக்காய்

  • விதைகளை 15 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் பசும்பாலில் (150 மிலி பால்/ 850 மிலி தண்ணீர்) அல்லது (250 மிலி பால் /750 மிலி தண்ணீர்) 6 மணி நேரம் வைத்து பின் விதைக்க வேண்டும். இது நாற்றுகளின் வீரிய மற்றும் முளைப்பு விகிதத்தினை அதிகரிக்கும். மேலும் இது நரம்பு வெளுத்தல் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கும்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை மாட்டுக் கோமியத்தில் 5 சதவிகிதம் அல்லது 10 சதவிகிதம் செறிவில் 12 மணி நேரம் ஊற வைத்து விதைப்பதால் நல்ல விதை நேர்த்தியை பெறலாம்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை 1-2 சதவிகிதம் பஞ்சகாவ்யாவில் (10-20 மிலி பஞ்சகாவ்யா/990/980 மிலி தண்ணீர்) 6 மணி நேரம் வைக்கவும். இதனால் விதை நேர்த்தியையும் வீரிய நாற்றுகளையும் அதிகரிக்கலாம்.
  • விதைகளை டிரைகோடெர்மா விரிடி (4 கிராம் / 1 கிலோ கிராம் விதை) யுடன் கலந்து விதைக்க வேண்டும்.
seed treatment in paddy
  • விதைப்பதற்கு முன் விதைகளை உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா (ஒவ்வொன்றையும் 60 கிராம் கலந்து 60 மிலி அரிசிக் கஞ்சி/ 1 கிலோ விதை)யில் கலந்து பின் 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
  • கோவைப் பயிர்களுக்கு, விதைப்பதற்கு முன் விதைகளை தண்ணீரில் 12 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை இனிப்புக்கொடி கிழங்கு சாற்றில் அல்லது மாட்டுக் கோமியத்தில் (1:5 விகிதம் – 1 பகுதி சாறு அல்லது மாட்டுக் கோமியம் 5 பகுதி தண்ணீர்) 30 நிமிடங்கள் ஊற வைத்து விதைக்க வேண்டும். இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கத்தரிக்காய்

  • நல்ல முளைப்புத் தன்மை விகிதம் மற்றும் வீரிய நாற்றுகளை பெற விதைகளை 12 சதவிகித பசும்பாலில் ஊற வைத்து விதைக்க வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை மாட்டுக் கோமியத்தில் (1 பகுதி மாட்டுக் கோமியம் + 5 பகுதி தண்ணீர்) 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இம்முறை விதைகளின் மூலம் பரவக்கூடிய பழ அழுகல் நோய் மற்றும் நுனிக்கருகல் நோயை தடுக்கவல்லது.
  • விதைகளை மெல்லிய பருத்தி துணியில் கட்டி அதனை உயர் வாயு குழம்பில் விதைக்க வேண்டும். இது நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிப்பதோடு விதை வீரியத்தை அதிகரிக்கிறது.
  • விதைகளை 4 கிராம்/1கிலோ டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம்/1 கிலோ சூடோமோனாஸ் உடன் விதை நேர்த்தி செய்து 24 மணிநேரம் ஊறவைத்து பின் விதைக்க வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை ரைசோபியம் (5 கி/ 1 கிலோ விதை) மற்றும் ஆரிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும். விதையுறை கிழிய வாய்ப்பு உள்ளதால், இந்த விதை நேர்த்தியை கவனமாக புரியவும்.

பாகற்காய்

  •  விதைப்பதற்கு முன் விதைகளை நீர்த்த மாட்டு கோமியத்தில் (1:1 – 1 பகுதி மாட்டு கோமியம் அல்லது 1 பகுதி பசும்பால் மற்றும் தண்ணீர்) 12 மணி நேரம் ஊறவைத்து பின்னர் நீர்த்த பசும்பாலில் 6 மணிநேரம் ஊறவைத்து விதைப்பதால் நல்ல முளைப்புத் திறன் அதிகரிக்கும்.
  • விதைப்பதற்கு 24 நேரத்திற்கு முன்பு விதைகளை கரந்த பாலில் ஊற வைத்து விதைப்பதால் நல்ல முளைப்புத்தன்மையும், மகசூலையும் பெறலாம்.

தக்காளி

  • விதைகளை வசம்பு மற்றும் வைவிடங்கா பவுடர் கொண்டு புகைமூட்ட வேண்டும். உலோக சல்லடையில் விதைகளை எடுத்துக்கொண்டு அதன் மேல் வசம்பு (அ) வைவிடங்கா பவுடரை தூவி அதை நிலக்கரி சூட்டிற்கு எதிராக 2-3 நிமிடங்கள் வைக்க வேண்டும். இம்முறை முளைப்புத்தன்மை அதிகரிக்கவும் பூஞ்சான நோயிலிருந்து நாற்றுகளை பாதுகாக்கவும் உதவுகிறது. 100 கிராம் விதையை விதை நேர்த்தி செய்ய 5கி வசம்பு (அ) இனிப்புக்கொடி பவுடர் மற்றும் 5 கி வைவிடங்கா பவுடர் தேவைப்படுகிறது.
  • விதைகளை காடாதுணியில் கட்டி அதனை பாலில் (75 மிலி பால் மற்றும் 425 மிலி தண்ணீர்) ஆறு மணி நேரம் ஊற வைத்து பின் விதைக்க வேண்டும். இம்முறை விதை மூலம் பரவும் நோய்களைத் தடுத்து முளைப்புத் திறனை அதிகரிக்கிறது.
  • விதைகளை புளித்த மோர் (3 நாள்) மற்றும் தண்ணீர் (1:4) விகிதத்தில் கலந்து 6 மணி நேரம் நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும். இம்முறையில் புளித்த மோருக்கு பதிலாக தென்னங்கள் அல்லது பனங்கள் உபயோகிக்கலாம்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை இனிப்புக்கொடி கிழங்கு சாற்றில் அல்லது மாட்டுக் கோமியத்தில் (1:5 விகிதம் – 1 பகுதி சாறு அல்லது மாட்டுக் கோமியம் 5 பகுதி தண்ணீர்) 30 நிமிடங்கள் ஊற வைத்து விதைக்க வேண்டும். இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • விதைகளை டிரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ்/ 5கி/ 100 கி விதை) கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்பருவ இலைக் கருகல் மற்றும் மற்ற நோய் கிருமிகளை கட்டுப்படுத்தலாம்.

மிளகாய்

  • விதைப்பதற்கு முன் விதைகளை இனிப்புக்கொடி கிழங்கு சாற்றில் அல்லது மாட்டுக் கோமியத்தில் (1:5 விகிதம் – 1 பகுதி சாறு அல்லது மாட்டுக் கோமியம் 5 பகுதி தண்ணீர்) 30 நிமிடங்கள் ஊற வைத்து விதைக்க வேண்டும். இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • விதைகளை மெல்லிய பருத்தி துணியில் கட்டி அதனை உயர் வாயு குழம்பில் விதைக்க வேண்டும். இது நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிப்பதோடு விதை வீரியத்தை அதிகரிக்கிறது.
  • விதைப்பதற்கு முன் விதைகளை இனிப்புக்கொடி கிழங்கு சாற்றில் அல்லது மாட்டுக் கோமியத்தில் (1:5 விகிதம் – 1 பகுதி சாறு அல்லது மாட்டுக் கோமியம் 5 பகுதி தண்ணீர்) 30 நிமிடங்கள் ஊற வைத்து விதைக்க வேண்டும். இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • விதைகளை மெல்லிய பருத்தி துணியில் கட்டி அதனை உயர் வாயு குழம்பில் விதைக்க வேண்டும். இது நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிப்பதோடு விதை வீரியத்தை அதிகரிக்கிறது.
  • விதைகளை டிரைகோடெர்மா விரிடி (4 கிராம்/1கி விதை) கொண்டு விதை நேர்த்தி செய்து பின் 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும்.

சுரைக்காய்

  • விதைகளை விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பதால் விதை முளைக்காத் தன்மையை தடுத்து முளைப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
  • விதைகளை இளம்சூடு தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து விதைக்க வேண்டும். இம்முறை கடினமான விதையுறையை மெல்லியதாக மாற்ற உதவுகிறது.
  • விதைகளை மாட்டுக் கோமியத்தில் (1 பகுதி மாட்டுக் கோமியம் மற்றும் 5 பகுதி தண்ணீர்) கொண்டு 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் விதைக்க வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம்.
  • விதைகளை டிரைகோடெர்மா விரிடி (4 கிராம்/1கி விதை) கொண்டு விதை நேர்த்தி செய்து பின் 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும்.

புடலங்காய்

  • 1 கிலோ விதைக்கு 1 கி மாட்டுச்சாணம் எடுத்து விதை நேர்த்தி செய்து 30 நிமிடங்கள் வைக்க வேண்டும். இம்முறை வறட்சியை தடுப்பதுடன் விதைகளை எளிதாக முளைக்க செய்கிறது.

பீன்ஸ்

  • விதைகளை விதைப்பதற்கு முன் கரந்த பாலில் 24 மணி நேரம் ஊற வைப்பதால் முளைப்புத்தன்மை அதிகரித்து மகசூலும் அதிகரிக்கும்.
  • விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு விதைகளை டிரைகோடெர்மா விரிடி (4 கிராம்/ 1 கிலோ விதை)  உடன் கலந்து விதைக்க வேண்டும்.

இந்த விதை நேர்த்தி பயிர்களை நுண்ணுயிர்கள் மூலம் பரவும் நோய்களிலிருந்து தடுக்கிறது.

Updated on : Feb 2015

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16