செய்முறை
புதிய மாட்டுச் சாணம் ½ கிலோ மற்றும் 2 லிட்டர் மாட்டு கோமியம் எடுத்து அதை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அடுத்து, 10-15 கிலோ விதையை 10-12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் அதனை மாட்டுச் சாண கரைசலில் 5-6 மணி ஊற வைக்க வேண்டும். அதன்பின் விதையை நிழலில் உலர்த்தி விட்டு நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.
- நெருக்கிப் பின்னிய மூங்கில் கூடையில் நூல்வடோரா பெர்சிகா இலையை அடியில் பரப்பி விட்டு அதன் மேல் நெல் விதைகளை இட்டு, 10-12 லிட்டர் தண்ணீரை கூடையில் நிரப்ப வேண்டும். மீண்டும் கூடையை சல்வடோரா இலைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும். இந்த அமைப்பை அசைவின்றி விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்பு வரை வைத்திருக்க வேண்டும். இம்முறை விதைகள் நன்கு முளைக்க உதவுகிறது.
- உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம்/ பாஸ்போ பாக்டீரியா / சூடோமோனாஸ் (1.25 கிராம்/ 60-70 கிலோ விதைகள்) ஆகியவற்றை 1 லிட்டர் அரிசி கஞ்சியில் கலந்து அதனுடன் முளை கட்டிய விதைகளை இட்டு 30 நமிடங்கள் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.
|