பிரஞ்சு பீன்ஸ் - அங்கக பயிர் சாகுபடி
இரகங்கள்
மலைப்பகுதி: ஏற்காடு 1, ஊட்டி 1, அர்கா கோமல் (தேர்வு 9)
சமவெளிப் பகுதி: அர்கா கோமல் (தேர்வு 9), ப்ரிமியர் மண்
நன்கு நீர் வடியக் கூடிய வண்டல் மண்: கார அமிலத் தன்மை 5.5-6 குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்றது
பருவம்
மலைப்பகுதி: பிப்ரவரி - மார்ச்
சமவெளிப்பகுதி: அக்டோபர்-நவம்பர்
விதை நேர்த்தி
விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை டிரைக்கோடெர்மா 4 கிராம் /கிலோ வரை என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதால் பூஞ்சாண நோய்களைக் கட்டுப்படுத்தலாம். முதல் தடவை பயிர் சாகுபடி செய்வதாக இருந்தால், விதைகளை ரைசோடியம் 600 கிராம் /ஹெக்டேர் என்ற அளவில் அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை 15 முதல் 30 நிமிடங்கள் வரை நிழலில் உலர்த்த வேண்டும். மலைப்பகுதிகளில், விதைகளை வரிசையில் அல்லது படுக்கைகளில் விதைக்க வேண்டும். சமவெளிப் பகுதிகளில், பள்ளங்களின் பக்கவாட்டில் விதைக்க வேண்டும்.
விதை அளவு மற்றும் இடைவெளி
மலைப்பகுதி: 80 கிலோ / எக்டர் (2விதை /ஒரு குத்து ) 30 X 15 செ.மீ.
சமவெளிப்பகுதி: 50 கிலோ /எக்டர் (2 விதை /ஒரு குத்து) 45 X 30 செ.மீ. X /
வயலை தயார் செய்தல்
மலைப்பகுதி: மண்ணை முழுவதுமாக தோண்டி, தொழு உரத்தை பரப்ப வேண்டும். வேண்டிய அளவிற்கு படுக்கைள ஏற்படுத்த வேண்டும்.
சமவெளிப் பகுதி: 2 உழவிற்குப்பின் பாத்திகள் அமைக்க வேண்டும்
பாசனம்
விதைத்த உடன் உடனடியாக பாசனம் செய்ய வேண்டும்
மூன்றாவது நாள் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும்.
உரங்கள் அளிப்பு
- பயிரிடும் 60 நாட்களுக்கு முன் பசுந்தாள் உரமிடவேண்டும்.
- விலங்கு குழம்பு உரம் நிலத்தை தயார் செய்யும் பொழுது 75 /கிராம் ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 40 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
- நன்கு சிதைந்த தொழு உரம் 50 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலம் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
- உயிர் கம்போஸ்ட் 5 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலம் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
- மண்புழு உரம் 5 டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலம் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
- வேப்பங்கட்டி 1250 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் நிலம் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
- உயிர் உரங்களான, அசோஸ்பைரில்லம், டாஸ்போபாக்டீரியா,ரைசோபியம் 25 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் நிலம் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்.
- எருக்குழி உரத்தை (5கிலோ /ஹெக்டேர்) 100 லிட்டர் நீரில் கரைத்து, பயிரிட்ட 45, 60, 75வது நாளில் தெளிக்க வேண்டும்.
- 20-25 நாட்கள் மற்றும் 40-45 நாட்கள் விதைத்த பின்பு களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுத்த பின்பும் மண் அணைக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
வெட்டு புழுக்கள்
1. விளக்குப் பொறியை வெயில் காலங்களில் அமைப்பதால் தாய் பூச்சிகளை
கட்டுப்படுத்தலாம்
2. தெளிப்பு நீர் பாசன அமைப்பு, பகலில் பாசனம் செய்வதால் புழுக்கள் வெளியே
வரும்
3. பைரித்ரம் பூச்சிக் கொல்லி, கோதுமை தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற
விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
அசுவினிகள்
1. வேப்ப எண்ணெய் 3% தெளிக்க வேண்டும்
2.1 0% வேப்ப இலை சாற்றை பயிரிட்ட 45, 60 75வது நாளில் தெளிக்க வேண்டும்
3.1 0% பூண்டு - மிளகாய் சாற்றை பயிரிட்ட 45,60,75 வது நாளில் தெளிக்க வேண்டும்
வெள்ளை ஈக்கள்
மஞ்சள் நிற உறையிட்ட ப்ளாஸ்டிக் பானைகளை விளக்கெண்ணெய் தடவி வயலில் வைத்தால், வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
காய்த் துறைப்பான்
10 சதவிகித பூண்டு மிளகாய் சாற்றை பயிரிட்ட 45,60,75வது நாளில் தழைத் தெளிப்பான் 3 முறை தெளிக்க வேண்டும்.
நோய்கள்
பறவை கண் புள்ளி மற்றும் சாம்பல் நோய்
3 சதவிகித தசகாவ்யாவை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
5 சதவிகித மஞ்சூரியன் தேயிலை சாற்றை பயிரிட்ட /விதைத்த ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளியில் தழைத் தெளிப்பாக 3 முறை தெளிக்க வேண்டும்
3 சதவிகித தசகாவ்யாவை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு 10 நாட்கள் இடைவெளியில் தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.
தேமல் நோய்
1. நோயற்ற விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
2. நோய் தாக்கப்பட்ட பயிர்களை அழிக்க வேண்டும்
3. அசுவினிகள் மற்றும் வெள்ளை ஈக்களால் இந்த நோய் பரவும். ஆகவே நோய்
பரப்பும் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
4. நோய் தாக்கப்பட்ட களைகளை அகற்ற வேண்டும்.
5. தகுந்த சமயத்தில் விதைப்பு மற்றும் அறுவடை செய்ய வேண்டும். மண் வழியே
பரவும் நோய்கள்
1. டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தை தயார்
செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
2. சூடோமோனாஸ் ப்ளோரஸ்சென்ஸ் 5கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தைத்
தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
விளைச்சல்
90-100 நாட்களில் முதிர்ந்த பச்சை காய்கள்
8-19 டன் /ஹெக்டேர் என்ற அளவில் விளைச்சலைத் தரும்
|