பழப்பயிர்களின் அங்கக சாகுபடி
அங்கக பழ உற்பத்தி முக்கியமாக இராசயன பூச்சிக் கொல்லிகள் மற்றும் உரங்களை பயன்படுத்தாமல் சாகுபடி செய்வது ஆகும். அங்கக உற்பத்தி பொதுவாக பயிர் சுழற்சி முறை, பயிர் கழிவுகள், விலங்கு உரங்கள், பயிறு வகைகள், பசுந்தாள் உரங்கள், வயல் அல்லது அங்கக கழிவுகள், இயந்திர சாகுபடி, கனிம தூள்கள் மற்றும் உயிர் பூச்சிக் கொல்லிக் கட்டுப்பாட்டு முறைகளையே நம்பியுள்ளது. இவை மண்ணின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு, மண் வளம், மண்ணிற்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கவும், பூச்சிகள், களைகள் மற்றும் இதர பூச்சிகளைக் கட்டுபடுத்தவம் பயன்படுகிறது.
சாகுபடி முறைகள்
இடத்தை தேர்வு செய்யும் முறை
அங்கக சாகுபடி முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தகுந்த மாதிரி உள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பராம்பரிய விவசாயிகள் பொதுவாக இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும். நிலங்களை வைத்திருப்பதால், அங்கக விவசாயிகளுக்கு இடத்தைத் தேர்வு செய்ய அதிகப்படி செலவாகும். சில குறிப்பிட்ட களைகளான பெர்முடா புல், ஜான்சன் புல் மற்றும் இதர களை வகைகள் மிகவும் பிரச்சனைக்கு உரியதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்துவதும் விவசாயிகளுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
வளம் குன்றா வேளாண்மையில் விருப்பம் உள்ள விவசாயிகள் பழப்பயிர்களை உற்பத்தி செய்கிறார்கள். ஏனென்றால், பழப்பயிர்கள் பல ஆண்டு காலம் உயிர் வாழும் மண்ணிற்கும் அடிக்கடி உழவு செய்ய வேண்டிய அவசியமில்லை இதனால் மண் அரிப்பு அதிகம் இருக்காது. மண் அரிப்பு குறைவாக இருப்பதால் மலைப்பகுதிகள் மற்றும் உழவு செய்ய முடியாத இதர இடங்களும் பழப்பயிர் உற்பத்தி செய்ய ஏற்றதாக உள்ளது
பயிரை தேர்வு செய்தல்
சுற்றுப்புற சூழல் காரணிகளான 6 வானிலை, பூச்சிகள் மற்றும் நோய்கள், ஏற்ற மண் வகைகள் போன்றவை அங்கக பழ உற்பத்தியை அதிகம் பாதிப்பவை. பல்லாண்டு பழப்பயிர்களை சாகுபடி செய்வது சற்று எளிதான காரியம் அதே மாதிரி சிறு பழமரங்களை எல்லா இடங்களிலும் அங்கக முறையில் சாகுபடி செய்வதும் எளிதானது. அங்கக பழ சாகுபடி பொதுவாக வீட்டு உற்பத்திகள் அல்லது வணிக ரீதியாக்காகவா என்பதைப் பொறுத்து இருக்கிறது.
பயிர் செய்யும் இடத்தை தயார் செய்தல்
பொதுவாக, பழப்பயிர்களுக்கு அதிக வளமுள்ள மண் தேவையில்லை. அதிக வளமுள்ள மண்களில், அதாவது தழைச்சத்து அதிகமுள்ள மண்ணில் பழ உற்பத்தியை விட தழை உள்ள மண்ணில், கார அமிலத் தன்மை சரியாகவும், அங்ககப் பொருட்கள் மண்ணில் அதிகளவு இருப்பதும் அங்கக உற்பத்திக்கு அடிப்படையாகும். பயிரிடுவதற்கு முன் மண் மேம்படுத்துவது என்பது சற்று/வரப்பபு பயிர்கள் பசுந்தாள் உரங்கள் மற்றும் மற்ற உரங்களைான கம்போஸ்ட், எரு, கனிமத்தூள்கள், அங்கக கழிவுகளை மண்ணில் இடுவதும் ஆகும்.
சுண்ணாம்பு (அ) கந்தகத்தை தேவையான அளவு இந்த நிலையில் அளித்தலே முக்கியமானது. பயிர் சாகுபடி செய்தல் மற்றும் மண் பரிசோதனையை பொறுத்து சுண்ணாம்பு (அ) கந்தகத்தின் பயன்பாடு தேவைப்படுகிறது. பயிரிடுவதற்கு முன் சுண்ணாம்பு (மண்ணின் கார அமிலத் தன்மையை குறைக்க) மண்ணில் அளிப்பதன் மூலம் மண்ணின் கார அமிலத் தன்மையை சரி செய்யலாம். பெரும்பாலான பழப்பயிர்கள் 6.5 அளவு கார அமிலத்தன்மையில் நன்கு வளரும். 5.5 மற்றும் 7.2 அளவு கார அமிலத்தன்மையையும் தாங்கி வளரும். ப்ளூபெர்ரிகள் மட்டும் இதில் விதி விலக்காக உள்ளது. அவற்றிற்கு 4.8 முதல் 5.2 அளவு கார அமிலத் தன்மை தேவைப்படுகிறது.
சுற்று/வரப்புப் பயிர்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் மண்ணின் வளத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் களைகளையும் கட்டுபடுத்தவும் உதவுகிறது. பயிரிடுவதற்கு முன் பலமுறை சுற்று/வரப்புப் பயிர்களுடன் பயிர் சுழற்சியை மேற்கொள்ளலாம்.
குறிப்பிட்ட சுற்று/ வரப்புப் பயிர் மற்றும் இடத்திற்கு தகுந்தாற் போல் மேலாண்மை, பருவ மழை, மண் வகை, மண் அரிப்பு திறன், பயன்படுத்தும் கருவிகள், விதையின் விலையைப் பொறுத்து பயிரைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, குரோட்டேலேரியா/சணப்பு செஸ்பேனியா/ அகத்தியை விட குறைவான பலனை தருகிறது. கோடை கால சுற்று/வரப்பு பயிர்களாவன - மக்காச்சோள இரகங்கள் மற்றும் கால்நடை தீவன சோயாபீன் இரகங்கள்.
ஸ்ட்ராபெர்ரிகள் பொதுவான உயரமான விதைப்படுக்கைகளில் வளர்ப்பதால் நீர் நன்றாக வடியும் மற்றும் வேர் அழுகல் போன்ற நோய் பிரச்சனைகளும் குறையும்.
மண்ணை வெப்பமூட்டுதல்
ஒளி ஊடுருவக்கூடிய பாலித்தீன் ப்ளாஸ்டிக் தாள்களை வெயில் காலங்களில் ஈரமான மண்ணின் மீது மூடுவதால் மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கும் இதனால் பூச்சிகள், நோய்கள், மற்றும் களைகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். மண்ணை வெப்பமூட்டுதல் என்பது செலவு அதிகமான ஒன்று. ஸ்ட்ராபெர்ரியைத் தவிர பல்லாண்டு பழப்பயிர்களுக்காக இதை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. தோட்டத்தில் அறை மேலாண்மை மற்றும் மூடாக்குதல் சுத்தமான சாகுபடி முறைகள், சுற்று/வரப்புப் பயிர்கள் மற்றும் அங்கக மூடாக்குதல் மூலம் பல்லாண்டு பழப்பயிர்களின் தரை (அ) இடை வரிசை பகுதிகள மேலாண்மை செய்யமுடியும். புள் வகைகள் மற்றும் குளிர் பருவ புல் வகைகளை தேர்வு செய்தால், அவை கோடைக் காலங்களில் உறங்கு நிலைக்குச் சென்று விடும்.
அதனால் நீருக்காக ஏற்படும் போட்டியை குறைக்கலாம். புல் வகைகளின் வளத்தன்மையை மேம்படுத்த அதிகப்படியான மூடாக்கைப் பயன்படுத்த வேண்டும். பல கோடை கால பயிறு வகைகள் ஆழமான வேருடையவை மற்றும் நீருக்கான போட்டி நிலவுவதால், இதை மரங்களின் நிழற்பரப்பில் வளர விடக்கூடாது. இருந்தாலும், பயிறு வகைகள் மற்றும் பயிறு வகைகளை கொண்டு மூடாக்குவதால் தேவையான அளவு தழைச் சத்தை அளிக்க முடிகிறது. மேலும், பயிறு வகைகள் நீர் உட்புகும் தன்மையை அதிகப்படுத்தும். மண்ணில் அங்ககப் பொருட்கிளன் அளவை அதிகப்படுத்துவதாலும் மண்ணின் ஈரத்தன்மையை அதிகப்படுத்த முடியும்.
குளோவர் விதைகள் கோடைகாலத்தின் முன் பருவத்தில் முளைத்து கோடை காலத்திலேயே மடிந்து, மண்ணில் விழுவதால், இதுவே மூடாக்காவும் ஆகிறது. இதனால் களைத் தொந்தரவும் இல்லை. இந்த மாதிரி அமைப்பை ஆப்பிள் மற்றும் பீச் தோட்டங்களில் காணலாம். குளிர்கால வெப்பநிலை பாரன்ஹீட்க்கு கீழ் இருந்தால் குளோர் வகை விதைகள் வளராது.
கடுகு, கோதுமை, குட்டை சோளம், அம்பெல்ரிபெர்ரே, கம்போசிட்டே குடும்ப வகைகள் பயனுள்ள பூச்சிகளை மட்டும் வயலில் விடுகின்றன.
பயிர் நன்றாக வளர்ந்தவுடன், வைக்கோல், இலைகள்(அ) மரத்தூள் கொண்டு மூடாக்கு செய்வதால் களைகளைக் கட்டுப்படுத்தலாம். தடிமனமாகவோ, பிளாஸ்டிக் சீட்கள்,மர அட்டைகளையோ பயன்படுத்தலாம். ஸ்ட்ராபெர்ரி பயிருக்கு, வரிசைகளுக்கு நடுவில் மூடாக்கு செய்வதால் களைகள் ஆக்கிரமிப்பு செய்வது குறைகிறது. திராட்சைத் தோட்டங்களில், தனித்தனி மரங்கள் (அ) கொடிகள் (அ) வரிசை முழுவதும் மூடாக்கு செய்ய வேண்டும்.
பொதுவாக, மரத் தண்டிலிருந்த சிறிது தூரம் தள்ளி மூடாக்கு செய்வதால் சேத் ஏற்படுவதைத் தடுக்கலாம். இது முக்கியமாக குளிர் காலங்களில் செய்ய வேண்டும். மூடாக்கை 8-12 இன்ச் அளவிற்கு மரத் தண்டிற்கு சற்று தள்ளி செய்வதால் நுனி அழுகல் மற்றும் இதர நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். மல்பெர்ரி மரங்களில், மரத்தூளை கொண்டு வரிசை முழுவதும் 8 அல்லது அதற்கு அதிகமாக இன்ச்ச அளவிற்கு பரப்பி மூடாக்கு செய்யலாம் களைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், அங்ககப் பொருட்களை கொண்டு மூடாக்கு செய்வதால் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதோடு, நீரின் இரும்பையும் அதிகப்படுத்துகிறது.
இரகங்களைத் தேர்வு செய்தல்
பழப்பயிர்கள் பல்லாண்டு காலம் உயிர்வாழ்வது, அதற்காக அதிகளவு முதலீடு செய்வதால் தகுந்த இரகங்களை சந்தை அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து தேர்ந்தெடுக்க வேண்டும். கூட்டுறவு விரிவாக்கத் துறையிலிருந்து இரகங்கள் பற்றிய தகவல்கள் உள்ளூர் வணிக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. நம்பகத்தன்மையுள்ள நாற்றுப் பண்ணைகளில் இருந்து வாங்கும் நாற்றுக்களால் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இருக்காது. மரபுசார்ந்த எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களை தேர்வு செய்வதால் நோய் மற்றும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். அசுவிணி எதிர்ப்பு பெர்ரிகள், பில்லோக்கிரா எதிர்ப்பு திராட்சை வேர்த்தண்டுகள், அசுவிணி எதிர்ப்பு ஆப்பிள் வேர் நாற்றுக்கள், கரையான் எதிர்ப்பு ஸ்ட்ராபெர்ரி இரகங்கள், நூற்புழு எதிர்ப்பு ப்ச் வேர் நாற்றுக்கள் சந்தைகளில் சுலபமாகக் கிடைக்கின்றன.
அங்கக உரமிடுதல் முறைகள்
மற்ற பயிர்கள் போல் இல்லாமல், பழப்பயிர்கள் சிறதளவு ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. அங்கக மூடாக்குதல் மற்றும் சுண்ணாம்பு, பாறை தூள்கள் மூலம் ஊட்டச்சத்துக்கள் மெதுவாக மண்ணிற்குக் கிடைக்கின்றன.
- கரையாத உரங்களான, கம்போஸ்ட், எரு. பயிரிலிருந்து பெறப்படும் பருத்தி விதை மாவு, (அ) விலங்குகளின் இறகு (அ) இரத்தக் கழிவுகளை பொதுவாக அங்கக விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். முன்பே உரங்களை அளிப்பதால் குளிர்கால சேதங்களைத் தடுக்கலாம்.
- அங்கக உரப்பொருட்களை மேலோட்டமாக பரப்புவதால் சிலசமங்களில் தழைச்சத்து இழப்பு ஏற்படுகிறது. இருந்தாலும், உழவு செய்வதால் வேர்கள் பாதிக்கப்படும் மற்றும் மண் அரிப்பு அதிகப்படும்
- சில அங்கக விவசாயிகள், கரையக்கூடிய அங்கக உரங்களான மின் கரைசல், கரையும் மீன் தூள் (அ) நீரில் கரையும் இரத்த கட்டிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இது விலை அதிகம் இருந்தாலும், விவசாயிகள் இதை பெரிதும் நம்பியுள்ளார்கள்
- அங்கக உரமிடுதல் பொதுவாக தழைச்சத்தை இணையா பயன்படுத்துவதில் குறியாக உள்ளது. உதாரணத்துக்கு, பெர்ரி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 160 கிலோ தழைச்சத்து தேவை என்று இருந்தால், அந்த விவசாயி பருத்தி விதை கட்டிகளை (சுமார் 7% தழைச்சத்து) உரமிடத் தேர்ந்தெடுக்கின்றனர்
- சுற்று/வரப்புப் பயிர்களாக பயிறு வகைகள் அல்லது பயிறு வகை மூடாக்குதலால் 200 முதல் 1000 கிலோ தழைச்சத்து ஒரு ஏக்கருக்கு நிலைநிறுத்துகிறது
- பயிர் மகசூல் குறைதல், நிறம் மாறிய இலைகள், மோசமான பயிர் வளர்ச்சி போன்றவை ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகும்
- தழைத் தெளிப்பு ஆய்வின் மூலம் இலைகளின் ஊட்டச்சத்து அளவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு (அ) அதிகமாகுதல் போன்ற அறிகுறிகளை கண்டறியலாம். வருடாந்திர தழைத் தெளிப்பால் தழைச்சத்து உரமிடுதலை செய்யலாம்
அங்கக களைக் கட்டுப்பாடு
அங்கக வேளாண்மையில், பல்லாண்டு பழப் பயிர்களுக்கான களைக் கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. களைக்கட்டுப்பாட்டால் மண் அரிப்பு ஏற்படுவதும், பண்ணை கருவிகளைப் பயன்படுத்த எளிதாகவும், பூச்சிக் கட்டுப்பாடு (அ) மண் வளத்தை பாதிக்காமலும் இருக்கும் களைக் கட்டுபடுவதற்கான முயற்சிகள் : மூடுபயிர்கள், மூடாக்குதல், மண் வெப்பமூட்டுதல்
அங்கக பூச்சி மற்றும் கரையான கட்டுப்பாடு
பல்லாண்டு பழப்பயிர்களுக்கும், ஓராண்டு பயிர்களுக்கும், பூச்சிகளைக் கட்டுபடுத்துவதற்கு பயிர் சுழற்சி முறையை மட்டும் தொடர முடியாது. பழப்பயிர்களை பல்லாண்டு வளர்ப்பதால் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது. நிலையான வேளாண் சூழ்நிலையை உருவாக்குவதற்கு இந்த அங்கக வேளாண்மையில் முடியும்.
பயிர் ஆரோக்கியம் மற்றும் திறன்
பூச்சிக் கட்டுபாட்டில் பயிரை ஆரோக்கியமாகவும், நல்ல திறனுள்ளதாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான ப்ளம் மரம் பழங்களை உருவாக்கும். அதே சமயத்தில் இலை உண்ணும் புழுக்களால் இலைகள் முழுவதும் உதிரும். அதுவே மரம் நல்ல திறம் உள்ளதாக இருந்தால், நல்லபடியாக பழங்களை உற்பத்தி செய்யும். ஆப்பிள் மரத் துளைப்பான்களால் ஆப்பிள் மரங்களில் சாற்றை உறிஞ்சினாலும், அந்த மரம் நல்ல நிற் உள்ளதாக இருக்கும். வறட்சி நிலையில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் வெட்டுக்கிளிகளால் குறைந்த அளவே கவர முடியும்.
உயிரியல் கட்டுப்பாடு
உயிரியல் கட்டுப்பாடு என்பது பூச்சிகளின் எண்ணிக்கைகளால் உயிரினங்களைக் கொண்டு கட்டுபடுத்துவது ஆகும். பயனிளக்கக் கூடிய ஆர்தோபோடுகள் பழப்பயிர்களில் பூச்சிகளைக் கட்டுபடுத்துகின்றன. பைட்டோசியூலஸ் பெர்சிமிலிஸ், மெட்டாசியூலஸ் ஆக்ஸிடென்டாலிஸ் போன்றவை சிலந்தி கரையான்களை தாக்கும். வண்டுகள், அசுவினிகளை உண்ணும். டிரைக்கோடெர்மா குளவிகள் பல பூச்சிகளின் முட்டைகளின் மீது ஒட்டுண்ணியாக வாழ்ந்து அவற்றை அழிக்கும்.
பல பயனுள்ள பூச்சிகள் வணிக பூச்சி வளர்ப்பு மையங்களில் இருந்து வாங்கி, பழப்பயிர்களின் தோட்டத்தில் விடப்படுகின்றன.
அங்கக மற்றும் உயிர் தர பூச்சிக்கொல்லிகள்
சான்றிதழ் பெற்ற அங்கக உற்பத்திக்கான பூச்சிக் கொல்லிகள் பொதுவாக இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகிறது. பயிர்களிலிருந்து எடுக்கப்படும் உயிர் சாறுகள், பூச்சி வளர்ச்சி ஊக்கிகள், இனக்கவர்ச்சி பொறிமுறைகள், சோப்கள், எண்ணெய்கள், கனிமங்களான கந்தகத் தூள் மற்றும் உயிரியல் பூச்சிக் கொல்லிகள் என்பது சுற்றுப்புற சூழல் மற்றும் பயனளிக்கும் பூச்சிகளை அதிகம் பாதிக்காத பூச்சி கொல்லிகளாகும்.
உயிர் தர பூச்சிக் கொல்லிகள் விளத்தன்மைக் கொண்டது அல்ல. அதனால் பூச்சிகள் மேல் தெளிக்கலாம். உயிர் பூச்சிக் கொல்லிகள் என்பது உயிரியல் கட்டுப்பாட்டிலிருந்து வேறுபட்டது. ஏனென்றால் அவை தயாரிக்கப்பட்டு, லேபிள் இடப்பட்டு, நிலையா தரமான பூச்சிக்கொல்லி போன்று தெளிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த பூச்சிகள் திரும்பவும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்கச் செய்கிறது. உயிர் பூச்சிக் கொல்லிகள் மனிதனையோ, பயனுள்ள பூச்சிகளையோ அழிக்காது. பல உயிர்பூச்சிக் கொல்லிகள் பூச்சிகளைக் கட்டுபடுத்த பயன்படுத்தப்படுகிறது.
பேசில்லஸ் துரியன்ஸியஸ் என்ற பாக்டீரியா உயிரியல் பூச்சிக் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது. லெப்டிடோப்டிரான் இன பூச்சிகளுக்கு எதிராக செயல்படாது. மற்ற நுண்ணுயிர் பூச்சிக் கொல்லிகளான பேசில்லஸ் பாப்பிலே ஜப்பானிய வண்டுக்களுக்காகவும், நுண்துகள் நச்சுயிரி அந்துப்பூச்சிக்காகவும், ஒட்டுண்ணி நூற்புழுக்கள் வண்டுகள் மற்றும் புழுக்களுக்கும் எதிராக செயல்படுகின்றன.
உயிர் பூச்சிக் கொல்லிகள் இயற்கையாக உயிர்வாழக் கூடியவை மற்றும் எந்த படிவுகளை மண்ணில் விட்டும் போகாது. இருந்தாலும், பல உயிர் பூச்சிக் கொல்லிகள் பூச்சிகளை தாக்கும். தாவரங்களிலிருந்து எடுக்கப்படும்.
பூச்சிக் கொல்லிகளாவன: பைரித்ரம், ரோட்டினன், ரையானியா மற்றும் வேம்பு
சிறப்பாக தயாரிக்கப்படும் சோப்புகளில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கும். இவை அசுவிணிகள், வெள்ளை ஈக்கள், இலைத் தத்துப்பூச்சிகள் மற்றும் சிலந்தி கரையான்களுக்கு எதிராகச் செயல்படும்.
அங்கக நோய்க் கட்டுப்பாடு
பொதுவான மாற்றங்கள் மற்றும் உழவியல் கட்டுப்பாடு
குளிர்மண்டல பழப்பயிர்களை நோய்கள் தாக்கும். அவற்றுள் அதிக மென்மை மற்றும் சர்க்கரை அளவு அதிகம் கொண்ட பழங்களில், பழ அழகல் பொதுவாக ஏற்படும். இதற்கு அங்கக விவசாயி சேமிப்பு அறையில் நல்ல காற்றோட்டமும், சூரிய வெளிச்சம் உட்புகும் வகையிலும் அமைக்க வேண்டும். மரப்பயிர்களில், கவாத்து மற்றும் கிளைகளை அவ்வப்போது வெட்ட வேண்டும். திராட்சைப் பயிர்களில், கொடி வளர்ச்சியின் அடர்த்தியைக் குறைக்க வேண்டும்.
அனைத்து பழப் பயிர்களிலும், நல்ல காற்றோட்டம் இருக்குமாறு இடத்தை அமைக்க வேண்டும்.
நீர் நன்றாக வடியாத மண்ணில், வேர் அழுகல் நோய் ஏற்படும். பியா வேர்த் தண்டுகள் மோசமாக நீர் தேங்கியிருக்கும் மண்ணிலும் சிறிதளவு தாங்கி வளரும். ப்ரூனஸ் வகைகள் மோசமான நீர் வடியக் கூடிய மண்ணில் தாங்கி வளராதவை. இதனால் வேர் அழுகல் நோய் ஏற்படும். இதற்காக அவ்வப்போது கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்ற வேண்டும். மாற்று ஒம்புயிரிகள் (அ) நோய்க்கு காரணமான மூலங்களை அகற்ற வேண்டும்.
அங்கக பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் பாக்டீரியக் கொல்லிகள் தாமிர மற்றும் கந்தக பொருட்கள் தான் பூஞ்சாண் மற்றும் பாக்டீரியக் கொல்லிகளில் பயன்படுத்தப்படுகிறது. கந்தகம் சில பயனுள்ள பூச்சிகளையும் தாக்கும். அதிக காலம் தாமிர பூஞ்சாண் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பயிர்கள் நச்சுத் தன்மையின் அளவு அதிகரிக்கும், மண்ணிலும் தாமிரத்தின் பாதிப்பு இருக்கும். இதனால் உயிர் பூஞ்சாண் கொல்லிகளை நோய்களைக் கட்டுபடுத்துவதற்காக அங்கக முறையில் பரிந்துரைக்கப்படுகிறது. டிரைக்கோடெர்மா ஹர்சானியம் என்ற உயிர்பூசணக் கொல்லி சாம்பல் நிற பூசணத்தை கட்டுபடுத்த பயன்படுத்தப்படுகிறது. மற்ற உயிர் பூசணக் கொல்லிகளும் சந்தையில் விற்கப்படுகின்றன. இவை திராட்சையில் ஏற்படும் சாம்பல் நோய்க்கு எதிராகச் செயல்படும் மற்றும் பல நோய்களையும் கட்டுபடுத்தும்.
|