அங்கக வேளாண்மை :: தோட்டப் பயிர்கள் |
||||||||||
ஜெர்பரா மண் நல்ல வடிகால் வசதியுடன், அமிலக்காரத் தன்மை 5.5 – 6 ஆக உள்ள மணல் கலந்த இரும்பொறை மண் சாகுபடி செய்ய ஏற்றது. காலநிலை மொட்டு உருமாறுதல் (அ) எரிந்து விடுதல் போன்ற பாதிப்புகளை தடுக்க வெப்பநிலை 25 – 27 ̊ செ. அளவு இருக்க வேண்டும். ஆகவே, இந்த செடியை பசுமைக் குடிலின் கீழ் சாகுபடி செய்யலாம். இரகங்கள் டானேனில்லன், பிங்க் எலிகண்ட்ஸ், டால்மா, சங்காரியா, மிர்கோலா, சன்செட், நேவாடா, ஏற்காடு -1, ஏற்காடு – 2. பருவம் வருடம் முழுவதும் பயிரிடலாம். பயிர்ப் பெருக்கம் மற்றும் நடுதல் திசு வளர்ப்புச் செடிகளைப் பயிர்பெருக்கத்திற்கு பயன்படுத்தலாம். ஒவ்வொரு திசு வளர்ப்புச் செடியின் விலை 25 ரூபாய். 70 செ.மீ அடிப்பக்கமும், 60 செ.மீ மேற்பக்க அகலமும், 30 செ.மீ உயரமும் கொண்ட உயர்ந்த படுக்கைகள் 45 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும். 30x30 செ.மீ, மேற்பக்க அகலமும், 30 செ.மீ உயரமும் கொண்ட உயர்நத படுக்கைகள் 45 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும். ஒரு செடிக்கு, ஒரு நாளைக்கு 500 – 700 மிலி அளவு நீர் தேவைப்படுகிறது. உரமிடுதல்
இடை உழவு முறைகள்
வளர்ச்சி ஊக்கிகள் பின்வரும் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துவதால் விளைச்சலையும், பூக்களின் தரத்தையும் உயர்த்தலாம்.
பயிர் பாதுகாப்பு
அறுவடை நன்கு மலர்ந்த பூக்களை அறுவடை அறுவடை செய்து, நீரில் வைக்க வேண்டும். அதிகாலை (அ) மாலை வேளையில் அறுவடை செய்யலாம். மகசூல் : செடி நட்டு 3 மாதங்களுக்குப் பிறகு அறுவடை தொடங்கி, 2 வருடம் வரை தொடர்ந்து இருக்கும். ஒரு மாதத்தில், ஒரு செடியிலிருந்து 2 தண்டுகள் அறுவடை செய்யலாம். தரம் பிரித்தல் தண்டின் நீளம் மற்றும் பூக்களின் விட்டத்தைப் பொறுத்து பூக்கள் A,B,C,D என்று தரம் பிரிக்கப்படுகிறது. முதல் தர மலர்களானது (A தரம்) 52 செ.மீ நீளமும், 11 செ.மீ விட்டமும் கொண்டு இருக்க வேண்டும். அறுவடைக்குப் பின் பூக்களை கையாளுதல் மற்றும் பொதி கட்டுதல் அறுவடை செய்யப்பட்ட பூக்களை நீரில் வைக்க வேண்டும். பூக்களின் கழுத்துப் பகுதியை (4”x5” அளவுள்ள) பாலித்தீன் சீட் கொண்டு மூட வேண்டும். சீட்டின் மையத்தில் சிறிய துளை இருக்க வேண்டும். ஒரு கொத்தில் 10 பூக்கள் வைக்கப்பட்டு, துளைகளுள்ள கார்போர்டு அட்டைப் பெட்டிகளில் அடுக்க வேண்டும். தண்டின் அடிப்பகுதியை பஞ்சு நூல் கொண்டு மூட வேண்டும். ரயில்களில் மற்றும் குளிர்பதன வேன்கள் மூலம் போக்குவரத்து செய்யப்படுகிறது. |
||||||||||
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் |சார்புத் தகவல்கள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16 |