organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)

ஜவிக் ஜபுத்ராவின் நன்மைகள்:

  • மண்ணில் உள்ள கார்பனை நிலை மாற்றம் செய்யவும், அதிகரிக்கவும்உதவுகிறது. இதனால் நீர் தக்க வைத்திருக்கும் திறன் மற்றும் அங்கக கார்பனை மண்ணில் அதிகரிக்கச் செய்கிறது.
  • முந்தைய பயிர்களின் கழிவுகள் மண்ணில் எதுவுமில்லாமல், நல்ல ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் அயனி அமைப்பு அதிகமுள்ள பொருட்கள் எளிதில் மட்கி, வருங்கால பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வெளியிடுகின்றன. இதனால் மண் ஆழம் அதிகரிப்பதுடன், பயிரின் வேர்கள் இந்தப்புதிய ஆழத்தை அடைந்து அதன் மூலம் பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்கின்றன.
  • ஜவிக் ஜபுத்ரா கார்பன் சேமிப்பு கருவியாக செயல்பட்டு, பயிர்க்கழிவுகள் அறுவடைக்குப்பின் எரிக்கப்படுவதைத் தவிர்த்து விட்டது .
  • ஜவிக் ஜபுத்ரா தெளிப்பு மூன்று பருவங்களில் தொடர்ந்து செய்யப்பட்டு அதன் மூலம் நீர்த் தக்கவைத்திருக்கும் திறன், பயிர்க்கழிவுகள் மட்கும் திறன் அதிகரிப்பு, பயிர் நலம் மற்றும் குறைந்த பயிர் நோய் தாக்கம் போன்றவை நிறைவேற்றப்பட்டு உள்ளதை விவசாயிகள் நேரடியாகக் கண்டு மகிழ்ந்தனர்.
  • விவசாய சாகுபடியில் நம்பிக்கை தளர்ந்த விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கை ஊக்கியாக மட்டுமல்லாமல், சந்தையில் இருந்து இடுபொருட்கள் வாங்குவதற்கு அதிக செலவு செய்வதன் காரணமாக கிராம பகுதியை விட்டு வெளியேறும் நிலையில் உள்ள  விவசாயிகளுக்கு, குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இந்த ஜவிக் ஜபுத்ரா ஒரு ஒளி காட்டியாக விளங்குகிறது.
.எண். அளவுகள் தாக்கம்
1. முளைப்பு சதவீதம் அதிகரிப்பு
2. தூர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
3. நிகர பழ எடை/ நிகர விதை எடை அதிகரிப்பு
4. பயிர்ப் பாதுகாப்பின் தாக்கம் நல்ல முன்னேற்றம்
5. நுண்ணூட்ட சத்துகள் மற்றும் வைட்டமின்கள் அளவு அதிகரிப்பு
6. மண்ணில் நீர்த்தக்க வைத்திருக்கும் திறனின் தாக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது
7. வேர் நீளம் மற்றும் உயிர்ப்பொருள் அதிகரிப்பு
8. ஊட்டச்சத்துக் குறைபாடு குறைவு
9. நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்கம் குறைவு
10. நீர் தேவை குறைவு
11. விதை முளைப்பு விரைவாக முளைத்து விடும்
12. களையின் தாக்கம் குறைவு
13. களைப்பிரிவுகள் மாறக்கூடியது
14. சாகுபடி செலவு குறைந்துள்ளது
15. பயிர்க்கழிவுகள் மட்கும் விகிதம் அதிகம்
16. மண் அங்கக கார்பன் அளவு அதிகரிப்பு
17. மண்ணின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது
18. ஆற்றல் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024