organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)

தேவையான பொருட்கள்

ஜவிக் ஜபுத்ரா செலவு குறைந்த மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு அமைக்கலாம்.

வ.எண். ஜவிக் ஜபுத்ரா அமைக்கத் தேவையான பொருட்கள்
1. மண் குழி 15x20x1.5 அடி
2. இரண்டு பிளாஸ்டிக் ட்ரம் (200 லிட்டர் கொள்ளளவு)
3. இரண்டு பிளாஸ்டிக் / சிமெண்ட் ட்ரம் (100 லிட்டர் கொள்ளளவு)
4. நான்கு பிளாஸ்டிக் வாளிகள் (50 லிட்டர் கொள்ளளவு)
5. நான்கு மட்பானைகள் (25 லிட்டர் கொள்ளளவு)
6. மண்புழு படுக்கை அளவு 8 x3 x1 அடி (500 செங்கல் தேவை)
7. ஒரு மண்புழு படுக்கைக்கு10 கிலோ மண்புழு தேவை (மட்கு எரு மற்றும் மண்புழு கழுவிய நீர்)
8. மண்புழு கழுவும் மாதிரி 2 லிட்டர் / நாள்
9. மாட்டு பேட் குழி அளவு 1.5x1.5x1.5 அடி
10. ஒரு காப்பர் பிரமிடு
11. ஒரு நிலா அடிப்படை வேளாண் காலண்டர்
12. உரக்குழி (1000 செங்கல்)
13. செங்கல் சுவர்
14. மூலப்பொருட்கள் (பால், தயிர், கோதுமை மாவு, கடுகு எண்ணெய், கடுகு பிண்ணாக்கு)
15. ஆட்கள்  - ஒரு வாரத்திற்கு 3 மணி நேரம் வேலை
16. திரவ மற்றும் உயிராற்றல் வேளாண்மைத் தயாரிப்பு மாதிரிகள்

கீழ்க்கண்ட பண்ணையில் கிடைக்கக் கூடிய பொருட்கள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருட்கள் மற்றும் பழமையான இடுபொருட்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகின்றன. அவை விதைநேர்த்தி, மண் வள ஊக்கி, பயிர்ப்பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. அவை புதிய மாட்டு சாணம், மாட்டு கோமியம், பசும்பால், மோர், வெல்லம், கரும்பு சாறு, புதிய வெண்ணெய், தேசி நெய், பிண்ணாக்கு, வேம்பு விதை சாறு, வேம்பு எண்ணெய், மீன் பொடி, தேன், பயறு மாவு, காட்டு மண், ஆலமர மண், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வேப்பிலை, புகையிலை, லண்டானா, விட்டெக்ஸ், நெகுண்டா இலைகள், அரிஸ்டோலோக்கியா இலைகள், பப்பாளி, டினஸ்போரா கார்ட்டிபோலியா இலைகள், அனோனா ஸ்குவமோசால், புங்கம் இலைகள், ஆமணக்கு இலைகள், நீரியம் இண்டிகம், கேலோட்ரோபிஸ் ட்ரோசிரா இலைகள் முதலியன.

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024