organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)

தாவர பராமரிப்பு / பயிர் ஊட்டமளிப்பு:

பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மண் மூலம் கிடைக்கப்பெறுகின்றது. பயிர்கள் ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொண்டு இலைகளுக்கும் பரப்புகிறது.

1. பயிர்ப்பொருட்கள் (ஏதாவது ஒரு தயாரிப்பு பயன்படுத்தலாம்).

ஒரு லிட்டர் புதிய மாட்டு கோமியம் அல்லது பானை உரம் அல்லது மண்புழு கழுவிய நீர்/ பயோசால் / உரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 14 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் வளர்ச்சிக்குத் தெளிக்க வேண்டும்.

2.பானை உரம் தயாரிப்பு:

முதலில் 5 கிலோ மாட்டு சாணம், 5 லிட்டர் மாட்டு கோமியம் மற்றும் அரை கிலோ பழைய வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மட்பானையில் இந்தப்பொருட்கள் அனைத்தையும் இட்டு, பானையை மூடி, 3 அடி ஆழம் கொண்ட குழியில் வைத்து மண்ணைப்போட்டு மூடி விட வேண்டும். பானை உரம் 7 நாட்களில் தயாராகி விடும்.

3.மண்புழு கழுவும் முறை:

மண்புழுக்கள் கொண்ட  மண்புழு உர படுக்கையில் இருந்து முதலில் 10 கிலோ உரத்தை எடுக்க வேண்டும். அவற்றை சணல் பையில் போட்டு கட்டி, 10 லிட்டர் தண்ணீர் கொண்ட தொட்டியில், ஐந்து முறை மெதுவாக நனைத்து எடுக்க வேண்டும். தொட்டியில் உள்ள நீரைப் பயன்படுத்தலாம்.  குறிப்பு : பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது.

4.புதிய மாட்டு கோமியம்:

மாட்டு கோமியம் ஒரு சிறந்த திரவ உரம். இதை நேரடியாக பயிர்களுக்குத் தெளிக்கலாம். 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து இலை வழியாகத் தெளிக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 லிட்டர் நீர்த்த கடைபொருள் போதுமானது. இது எல்லாப்பயிர்களுக்கும், எல்லா பருவங்களிலும் தெளிக்கலாம்.

5.பயிர் வளர்ச்சி மேம்படுத்துவதற்கு மண்புழு கழுவிய நீர்:

மண்புழு கழுவிய நீர் மட்டும் அல்லது அதனுடன் மாட்டு கோமியம் இவற்றை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலை வழியாகத்தெளிக்கலாம். மூன்று அல்லது நான்கு தெளிப்பு, சிறந்த முடிவுகளைப்பெற அவசியமானது.

6.அமிர்த பானி:

பத்து கிலோ மாட்டு சாணத்துடன் 500 கிராம் தேன் கலந்து நன்கு பசை போன்று மாற்றிக்கொள்ள வேண்டும். இதனுடன் 250 கிராம் நாட்டு மாடு நெய் கலந்து, அதிக வேகத்தில் கலக்கி விட வேண்டும்.  தண்ணீர் 200 லிட்டர் சேர்க்க வேண்டும். இந்த கடை நீரை ஒரு ஏக்கர் நிலத்தில் தெளிக்க வேண்டும் அல்லது நீர்ப்பாசனத்தின் பொழுது இட வேண்டும். முப்பது நாட்களுக்குப்பிறகு, இரண்டாவது தெளிப்பு, பயிர்களுக்கு இடையே உள்ள வரப்புகளின் மேல் தெளிக்க வேண்டும்.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024