ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)
மண் வள ஊக்கி (பூமி உப்ஜார்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கி
வீரிய ஒட்டு ரகங்கள், அதிக ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்வதால் மண்ணில் பேரூட்ட சத்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறையை பூமி உப்ஜார் கொண்டு சரி செய்யலாம்.
செயல்படுத்தும் முறை:
- எல்லா பொருட்களையும் டிரம்மில் போட்டு வைக்கவும்.
- ஒரு நாளைக்கு இருமுறை கடிகார திசையிலும், கடிகாரத்தின் எதிர் திசையிலும் கலக்கி விட வேண்டும்.
- பிறகு, டிரம்மை மூடி வைக்க வேண்டும்.
- 7 வது நாளில் செறிவூட்டப்பட்ட பஞ்சகவ்யா தயாராகி விடும்.
- இதனுடன் தண்ணீர் 100 லிட்டர் கலந்து நன்கு கலக்கி விட வேண்டும். சாம்பல் / வளமான மண் / மண்புழு உரம் உடன் இந்த கலவையைக் கலந்து விதைப்பதற்கு முன், வயலில் தெளிக்க வேண்டும்.
நீர்ப்பாசனத்தின் பொழுது, டிரம்மின் அடியில் இருந்து மேலே ஒரு துளையிட்டு வயல் முழுவதும் இந்த கரைசல் நனையும்படி செய்ய வேண்டும். விதைக்கும் பொழுது மற்றும் நீர்ப்பாசனத்தின் பொழுது இதைத் தெளிப்பதால் மண் வளமானதாக மாறுகிறது.
- மண்ணின் சுகாதாரம் மற்றும் மண்ணின் வளம் புதுப்பிக்கப்படுகிறது.
- கணிசமான விளைச்சல் பெற முடிகிறது.
- பயிர்கள் பூச்சி தொற்று இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கிறது.
- பயிர்கள் குறித்த காலத்திற்குள் முதிர் நிலையை அடைய உதவுகிறது.
பஞ்சகாவ்யா, பீஜாமிர்தா, ஜீவாமிர்தா மற்றும் பையோடைஜஸ்டர்களில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு மற்றும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அட்டவணை 1 மற்றும் 2 களில் கொடுக்கப்பட்டு உள்ளன.
அட்டவணை 1 மற்றும் 2ல் பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களைத்தவிர, அங்கக திரவ உரங்களில் உள்ள தழைச்சத்து நிலைப்படுத்திகள் மற்றும் மணிச்சத்து கரைப்பான்களின் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அட்டவணை 1 : அங்கக திரவ உரங்களில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை
உயிரினங்கள் |
காலணி எண்ணிக்கை (சி.எப்.யு./மி.லி.) |
பஞ்சகாவ்யா |
பீஜாமிர்தா |
ஜீவாமிர்தா |
பையோடைஜஸ்டர் |
பாக்டீரியா |
26.1x105 |
15.4 x105 |
20.4x105 |
12.9x105 |
பூஞ்சாணம் |
18.0x 103 |
10.5x103 |
13.8x 103 |
9.2x103 |
ஆக்டினோமைசீட்ஸ் |
4.20x103 |
6.8x103 |
3.6x103 |
3.0x103 |
மணிச் சத்தை கரைக்கும் நுண்ணுயிரிகள் |
5.70x102 |
2.7x102 |
4.5x102 |
1.0x 102 |
தழைச்சத்து நிலைப்படுத்திகள் |
2.70x102 |
3.1x102 |
5.0x102 |
2.1x102 |
அட்டவணை 2:
காரணிகள் |
பஞ்சகாவ்யா |
பீஜாமிர்தா |
ஜீவாமிர்தா |
பையோடைஜஸ்டர் |
அமில காரத்தன்மை |
6.82 |
8.2 |
7.07 |
7.29 |
கரையும் உப்பு (டி எஸ் எம் -1) |
1.88 |
5.5 |
3.40 |
1.09 |
மொத்த நைட்ரஜன் சதவிகிதம் |
0.10 |
40 |
770 |
225 |
மொத்த பாஸ்பரஸ் (பிபிஎம்) |
175.4 |
155.4 |
166 |
79 |
மொத்த பொட்டாசியம் (பிபிஎம்) |
194.1 |
252 |
126 |
42 |
மொத்த ஜிங்க் (பிபிஎம்) |
1.27 |
2.96 |
4.29 |
0.52 |
மொத்த தாமிரம் (பிபிஎம்) |
0.38 |
0.52 |
1.58 |
1.24 |
மொத்த இரும்பு (பிபிஎம்) |
29.71 |
15.35 |
282 |
9.60 |
மொத்த மாங்கனீசு (பிபிஎம்) |
1.84 |
3.32 |
10.7 |
8.30 |
ஊட்டமேற்றிய பஞ்சகாவ்யா :
தேவையான பொருட்கள் :
புதிய மாட்டுச்சாணம் |
- 1 கிலோ |
|
|
மாட்டு கோமியம் |
- 3 லிட்டர் |
|
மாட்டுப்பால் |
- 2 லிட்டர் |
|
தயிர் |
- 2 லிட்டர் |
|
நாட்டு மாட்டு நெய் |
- 1 கிலோ |
|
கரும்பு சாறு |
- 3 லிட்டர் |
|
இளநீர் |
- 3 லிட்டர் |
|
வாழைப்பழம் |
- 12 |
|
மேலே குறிப்பிடப்பட்டபொருட்கள், நன்கு நொதித்து 7- 10 நாட்களில் தயாராகி விடும். இதை 40- 60 லிட்டர் / ஏக்கர் என்ற அளவில் நீர்ப்பாசனத்தின் பொழுது, நீரில் கலந்து வயலுக்குத்தெளிக்கலாம். எந்த ஒரு திரவ உரங்களையும் தொடர்ந்து அளித்து வருவதால் மண்ணில் உள்ள உயிரியல் மற்றும் இயற்பியல் காரணிகள் புதுப்பிக்கப்படுகின்றன. மண்ணில் உள்ள பயிர்க்கழிவுப்பொருட்கள் மிக வேகமாக மட்கச்செய்யப்படுகின்றன. மேலும் இரண்டு மற்றும் மூன்று வருடங்களில் பயிர் உற்பத்திக்கு சிறந்ததாக, மண் நல்ல ஆரோக்கியமான மற்றும் வளமான மண்ணாக மாற்றப்படுகிறது.
சஞ்சீவக்:
- மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணை வளப்படுத்துவதற்கும், கழிவுகளை விரைவாக மட்கச்செய்யவும் உதவுகின்றன.
- முதலில் மூடியுடன் கூடிய 500 லிட்டர் டிரம்மில் 100- 200 கிலோ மாட்டுச்சாணம், 100 லிட்டர் மாட்டு கோமியம் மற்றும் 500 கிராம் வெல்லம் போன்றவற்றை 300 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். பின்னர், 10 நாட்கள் வரை நொதிக்க விட வேண்டும். இதனுடன் 20 மடங்கு தண்ணீர் கலந்து, 1 ஏக்கர் நிலத்திற்கு மண்ணின் மேல் தெளிக்கலாம் அல்லது நீர்ப்பாசனத்தின் பொழுது தண்ணீரில் கலந்தும் விடலாம்.
- மூன்று முறை தெளிப்பது அவசியம்; விதைப்பதற்கு முன் ஒரு தெளிப்பு, விதைத்த 20 ம்நாளில் இரண்டாவது தெளிப்பு மற்றும் விதைத்த 45 வது நாளில் மூன்றாவது முறையும் தெளிக்க வேண்டும்.
|
|
ஜீவாமிர்த்:
- ஒரு டீப்பாயில் 100 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் 10 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 10 லிட்டர் மாட்டு கோமியம் கலந்து கொள்ள வேண்டும்.
- மரக்குச்சி கொண்டு நன்கு கலக்கிய பின்னர் 2 கிலோ கடலை மாவு அல்லது ஏதாவதொரு பயிறு வகை மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இந்தக்கரைசலை 5 முதல் 7 நாட்கள் வரை நொதிக்க விட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை கலக்கி விட வேண்டும்.
- இதை மண்ணின் மேல் தெளிக்கலாம் அல்லது நீரின் வழியே, நீர்ப்பாசனத்தின் பொழுது கலந்து விடலாம். மூன்று முறை தெளிப்பது அவசியம். விதைப்பதற்கு முன் ஒரு தெளிப்பு, விதைத்த 20 ம்நாளில் இரண்டாவது தெளிப்பு மற்றும் விதைத்த 45 வது நாளில் மூன்றாவது முறையும் தெளிக்க வேண்டும்.
|
|
ஆலமர மண்:
பல்வேறு மகத்தான பறவைகள் மற்றும் விலங்குகளின் இயற்கை வாழிடமாகத் திகழும், பழைய காட்டு ஆலமர நிழலடியில் உள்ள மண், பல்வேறு நுண்ணுயிர்களைக் கொண்டுள்ளதால், இவற்றிற்கு விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கான தனிச்சிறப்பு உள்ளது. பறவைகளின் எச்சம் மண்ணில் விழுவதுடன், மண்ணை எந்தவித தொந்தரவும் செய்யயாததால், மண்ணில் பல்வேறு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவை பாக்டீரியா, பூஞ்சாணம், புரோட்டோசோவா மற்றும் பாசிகள் ஆகும். எல்லா வகையான நுண்ணுயிர்களும், கனிமங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு மூலக்கூறு, தொகுப்பு தாவர வளர்ச்சியூக்கி, தொகுப்பு தாவர ஒழுங்குபடுத்தி, செல்லுலோஸ் சிதைவூட்டல் மற்றும் பிற நோய்களை விளைவிக்கும் நோய்க்காரணிகளை மேம்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு மண்ணிற்கு ஒரு நல்ல சுற்றுச்சூழலை உருவாக்குகின்றன. ஆலமர நிழலில் மண்ணை ஒரு மூன்று நாட்கள் வரை, மண்புழு உரத்துடன் கலந்து வைத்திருந்து ஒரு ஏக்கருக்கு 20 கிலோ என்ற வீதம் தெளிக்கலாம்.
அடைக்கப்பட்டு வைத்திருந்த மண்ணை உரமாக பெர்சிம் மற்றும் பிற தீவனப்பயிர்களுக்கு தெளிக்கலாம். தெளிக்கப்பட்ட 35 நாட்களுக்குப்பிறகு, தீவனப்பயிர்கள் உயரிய வளர்ச்சி அடைந்து காணப்பட்டது. உயர் எடை மற்றும் அங்கக உயிர் பொருள்1.5 மடங்கு வழக்கமான சாகுபடி முறைகளை விட அதிகரித்துக் காணப்பட்டது.
திரவ உயிர் செரிமக்குழம்பு:
நீர்ப்பாசனத்தின் மூலம் வயலுக்கு நேரடியாக அளிக்கலாம்.
|