ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)
ஜவிக் ஜபுத்ராவின் ஸ்வாட் பகுப்பாய்வு:
1. வலிமை
- செயல்படுத்துவது எளிது
- செலவு குறைவு
- சுய நிறைவு
- நடைமுறைப்படுத்துவது எளிது
- விரைவில் முடிவுகள் கிடைக்கும்
- உள்ளூரில் கிடைக்கும் வளங்களைப்பயன்படுத்தலாம்.
- அதிக வேலைப் பளுவைக் குறைக்கிறது.
2. பலவீனம்
- விவசாயிகள் வழக்கமான விவசாய நடவடிக்கைகளைப் பின்பற்றுவதால், முதல் சந்தர்ப்பத்தில் சிக்கலைக் காண நேரிடுகிறது.
- புதிய கருத்தை நோக்கி எதிர்மறையான அணுகுமுறை உள்ளது.
- மறு சீரமைப்பு தர நிர்ணயம் தேவைப்படுகிறது.
3.வாய்ப்புகள்:
- சந்தை சார்ந்த இடுபொருட்களை, விவசாயிகள் சார்ந்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
- தேவையான எல்லா இடுபொருட்களும், எளிதில் கிடைக்கக்கூடிய பொருளை வைத்தே, குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதால், இது ஒரு ஆற்றல் சேமிப்பு அறையாக செயல்படுகிறது.
- இது சிறந்த, அதிக ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை அளிப்பதால், சந்தையில் இந்த பொருட்களுக்கு நல்ல விலைமதிப்பு கிடைக்கின்றது.
- அதிக நீர் தக்க வைத்திருக்கும் திறன், அதிக நுண்ணுயிர் சுமை மற்றும் மண் வளம் போன்றவற்றை அதிகரிக்கின்றது.
- மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத் தகுந்த வகையில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மாற்றி அமைக்கிறது.
4. அச்சுறுத்தல்கள்:
- முறையற்ற மற்றும் சரியான முறையில் ஆராயப்படாத பயன்பாடு, பலவீனமான செயல்திறன்களை விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.
- தொடர்புடைய இலக்கியங்கள் குறைவாக இருத்தல் மற்றும் குறைந்த அளவு படிக்கும் பழக்கம் ஆகியவற்றால் திறமை இல்லாத தயாரிப்புகள் உருவாக நேரிடும்.
|