மிளகும் பயிரின் அங்கக சாகுபடி
இந்தியாவின் ஏற்றுமதியில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. இது கேரளா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கக சாகுபடியில், மிளகை ஊடுபயிர் (அ) பயிராகவோ பயிரிடலாம். பராம்பரிய சாகுபடி பகுதியை சுற்றி 25 மீ அகலம் இடைவெளி விட்டு பயிரிட வேண்டும். சரிவான பகுதிகளில் அருகில் உள்ள நிலங்களில் இருந்து இந்த பகுதிக்கு நீர் வடிவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். அங்கக சாகுபடிக்கு குறைந்தது 3 வருடங்கள் வேண்டும். புதிதாகப் பயிரிடும் (அ) திரும்பவும் பயிரிடும் பகுதிகளில், முந்தைய சாகுபடியில் இராசயனங்கள் எதுவும் பயன்படுத்தி இருக்கக்கூடாது.
பயிரிடத் தேவையான மூலங்கள்
ஒரு தண்டுகள் (அ) நுனித் தண்டுகள், பயிரிடப் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும், முதலில் அங்கக மூலங்கள் இல்லாதபோது பராம்பரிய கொடியிலிருந்து தான் ஒரு தண்டுகள் விதைக்கப்ப பயன்படுத்தப்படுகிறது. மூங்கில் குச்சிகள் நாற்றாங்கால் தயார் செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்துவதற்கு முன் மண்ணை வெப்பமூட்ட வேண்டும் வாம் மற்றும் டிரைக்கோடெர்மாவுடன் (25 கிலோ கம்போஸ்டில் 250 கிராம் அளவு) மண்ணை கலக்க வேண்டும்.
கொடிகளின் மீது வெர்மிவாஷ் ( ஒரு பகுதிக்கு 50 மில்லி) தெளிப்பதால் வளர்ச்சியை ஊக்கப்படுத்தலாம்.
2 முக்கியமான நாற்றங்கால் நோய்களான ரைசோக்டினியா சொலானியவால் பாதிக்கப்படும் இலை அழுகல் மற்றும் ஸ்கிளிரோசியம் ரால்ப்சியால் பாதிக்கப்படும் அடி வாடல் நோயும், வாம் மற்றும் டிரைக்கோடெர்மா கொண்டு வெப்பமூட்டுவதால் குறைகிறது இருந்தாலும், கட்டுப்படுத்தும் முறைகளை நேரத்துக்கு தகுந்தாற் போல் பயன்படுத்துதல், போர்டாக்ஸ் கலவை 1% குறிப்பிட்ட இடத்தில் அளித்தல் போன்றவற்றாலும் நோயைக் கட்டுப்படுத்தலாம். நூற்புழு தாக்கும் பகுதிகளில், கூடுதலாம் வேப்பங்கொட்டை தூளை தூவலாம்.
நிலத்தைத் தயார் செய்தல்
சரிவான பகுதிகளில் போதுமான அளவு மண் மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிலத்தைத் தயார் செய்யும் போது மேற்கொள்ள வேண்டும்.அனைத்து வேளாண் செயல்களிலும் மண் ஒரளவிற்கு கலைக்கப்படுகிறது.
பயிரிடுதல்
பரிந்துரைக்கப்பட்ட வகைகளையே முடிந்தளவு பயன்படுத்த வேண்டும்.எரித்ரினா வகைகளை பயன்படுத்துவதால் வேர்மூடிச்சு நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம். பருவ மழையின் போது 2-3 வேர்த் தண்டுகளை தனித்தனிக் குழிகளில் வைக்க வேண்டும். 2 கிலோ கம்போஸ்ட் (அ) மட்கிய கருவை 25 கிலோ பாறை பாஸ்பேட்டுடன் கலந்து விதைக்கும் போது அளிக்க வேண்டும்
சாகுபடி முறைகள்
கொடிகள் வளரும் போது தேவைப்படும் அளவிற்கு கொடி கட்டி விட வேண்டும்.இளம் கொடிகள் வெயில் காலங்களில் சூரிய ஒளி படாமல் நிழலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.கிளைகளை படரவிட்டாலும், தேவையான அளவு வெளிச்சமும், நேராக வளர்வதற்கு ஏதுவாக இருக்குமாறு செய்ய வேண்டும். பூக்கும் போதும், காய்க்கும் போது அதிகப்படியான நிழல் இருந்தால் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதிகப்படியான கிளை படருவதை வெட்டி மூடாக்குதலாகவோ (அ) கம்போஸ்ட் மிகவும் பயன்படுத்தலாம். சுந்தழை (அ) அங்ககப் பொருள் கொண்டு மூடாக்கு செய்ய வேண்டும். கொடியின் அடிப்பகதியை அதிகம் சேதம் செய்யக் கூடாது. தேவையான போது களை எடுத்து, மூடாக்கு செய்ய வேண்டும். மூடுப்பயிரான காலாப் கோனியம் மியூகோனியாடிஸ், மிமோசா இன்ஸிசாவை பயன்படுத்துவதால் மழைக்காலங்களில் மண் அரிப்பையும், களை வளர்ச்சியையும் கட்டுப்படுத்தலாம். பண்ணை ஒரப் பகுதிகள் மற்றும் ரோட்ரோங்களில் பயிறுவகை வரப்பு சுற்றுப் பயிரைப் பயிரிடுவதால் மண் அரிப்பை கட்டுப்படுத்தலாம். அதே சமயத்தில் கம்போஸ்ட்டாகவும் பயன்படுத்தலாம்.
உரமிடுதல்
கம்போஸ்ட் (அ) பண்ணை எடு ஒரு வருடத்திற்கு, ஒரு கொடிக்கு 20 கிலோ என்ற அளவில் மே-ஜீன் மாதத்தில் மண்ணில் இடலாம். மண்புழு உரத்தையும் பயன்படுத்தலாம். மண் ஆய்வின் அடிப்படையில் பாறை பாஸ்பேட், எலும்பு தூள், சுண்ணாம்பு மற்றும் டோலமைட் போன்றவற்றை அளிக்கலாம். மரத்தூள் சாம்பல்சத்து குறைவாக உள்ள மண்களில் அளிக்கலாம். பசும் கொடிகள், பயிர் கழிவுகள், மாட்டு சாணி, கோழி கழிவுகள் மற்றும் பலவற்றை மரத்தூள்(அ) பாறை பாஸ்பேட்டுடன் கலந்து பண்ணை எருவிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இந்தக் கம்போஸ்ட்டை மேலும் உண்ண முடியாத, எண்ணெய் கட்டிகளுடன் சேர்த்து மண்ணில் அளிக்கலாம். வேப்ப விதைத் தூள் ஒரு வருடத்திற்கு ஒரு கொடிக்கு 2 கிலோ என்ற அளவில் நூற்புழு தாக்கிய பகுதிகளில் அளிக்கலாம். உயிர் உரங்களையும் பயன்படுத்தலாம்.
பயிர் பாதுகாப்பு
நோய்கள்
அடி அழுகல் நோய் பைட்டோப்தோரா கேப்ஸிஸி என்ற பூஞ்சானால் ஏற்படுகிறது.பொல்லு நோய் கொல்லட்டோடிரைக்கம் கிளியோஸ்போரியாடிஸ் என்ற பூஞ்சாணால் ஏற்படுகிறது. அடி அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒழுங்கான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அளவான முறையில் உழவு மேற்கொள்ள வேண்டும்.சீரான முறையில் நீர் வடிதல் வேண்டும்.
டிரைக்கோடெர்மாவை ஒரு வருடத்திற்கு ஒரு கொடிக்கு 500 கிராம் என்ற அளவில் அளிக்க வேண்டும்.பொல்லு நோய் (அ) சாடி அழுகல் நோய் தோன்றினாலும், போர்டாக்ஸ் கலவையை 1% மிகக் குறைந்த அளவில் தெளிக்க வேண்டும்.குன்றிய வளர்ச்சி மற்றும் பில்லோடி நோயுள்ள விதைக் காரணிகளை பயிரிடப் பயன்படுத்தக் கூடாது. வேப்பவிதைத் தூளையும் நோயைக் கட்டுபடுத்த பயன்படுத்தலாம்.
பூச்சிகள்
பொல்லு வண்டு (லாங்கிடார்சஸ் நைக்ரி பென்னிஸ்)மற்றும் இலை சுருட்டு தத்துப் பூச்சியை (லியோதிரிப்ஸ் கார்னில்) வேப்ப எண்ணெயை (400 மி.லியை 100 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும், தெளித்துக் கட்டுப்படுத்தலாம். தேயிலை கழிவுகளை மாவுப்பூச்சிகளைக் கட்டுபடுத்த அளிக்கலாம். நூற்புழு பிரச்சினை அதிகம் இருக்கும் போது, துவக்கமல்லியை வளர்த்து பூச்சிகளை பிடிக்கலாம். பூத்தலின் போது நோயுற்ற செடிகளைக் களைது வேருடன் எரித்து விட வேண்டும்.
அறுவடை மற்றும் அறுவடை பின் சார் பாதிப்புகள்
இந்தியாவில், மிளகுச் செடியின் பூக்கள் மே-ஜீன் மாதத்தில் பூக்கும். பூத்தலிருந்து அறுவடை வரை 6-8 மாதம் ஆகும். சமவெளிப் பகுதகளில் அறுவடைக் காலம் நவம்பர் முதல் ஜனவரி வரை இருக்கும். மலைப்பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இருக்கும். முழு பூங்கொத்தையும், காய்கள் ஆரஞ்சு சிவப்பு நிறமாக மாறும் போது அறுவடை செய்ய வேண்டும்.
அறுவடையின் போது,சிவப்பு எறும்புகளின் மீது எந்த இராசயனத்தையம் தூவக் கூடாது.காய்கள் பூங்கொத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, 7-8 நாட்கள் சூரிய ஒளியில் காய வைக்கப்படுகின்றன. சூரிய ஒளியில் உலர்த்தும் போது அவ்வப்போது திருப்பி விட்டுக் கொண்டிருக்க வேண்டும். காய்களை திருப்பி போடாவிட்டால், பூஞ்சாண் வளர்ச்சி ஏற்படும்.
மிளகுக் காய்களை பதப்படுத்த முதலில் வெந்நீரில் போட்டு எடுக்க வேண்டும். முதிர்ந்த பச்சை கலந்த மஞ்சள் நிறத்திற்காக, மிளகுக் காய்களை கொத்திலிருந்து பிரிக்க வேண்டும். மிளகுக் காய்களை துளையிடப்பட்ட அலுமினியப் பாத்திரம் (அ) மூங்கில் கூடையில் வைக்கப்பட்டு, சுடுநீரில் ஒரு நிமிடத்திற்கு மூழ்கி வைத்து. பின் வடிகட்டி சிமெண்ட் தரை (அ) மூங்கில் பாயில் பரப்பி வெயிலில் உலர வைக்க வேண்டும். இதற்கு பயன்படுத்தப்படும் நீர் சுத்தமாகவும், மாசற்றும் இருக்க வேண்டும்.
சுடுநீரில் மிளகுக் காய்களைப் போடுவதால் ஏற்படும் நன்மைகள் :
சுடுநீரிலிடப்பட்ட காய்கள் உலர்வதற்கு 3-4 நாட்கள் இருந்தால் போது.இதனால் நேரம் வீணாகாமல் இருக்கிறது. உலர்ந்த மிளகுக் காய்கள் ஒரே மாதிரி கருப்பு நிறத்தில் காணப்படும்.
வெள்ளை மிளகு
வெள்ளை மிளகு தயாரிப்பதற்கு 3 முதல் 5 காய்களுடன் கூடிய நன்கு முதிர்ந்த கதிர்கள் மட்டும் அறுவடை செய்ய வேண்டும். முதிராதவற்றை தனியே பிரித்தெடுக்க வேண்டும். பிறகு, இந்த முதிர்ந்த காய்களை சாக்குப் பையில் 1-2 நாட்கள் வரை வைத்திருந்து பழுக்கச் செய்ய வேண்டும்.
50கிலோ அளவுடைய சாக்குப் பையில் இந்த முதிர்ந்த காய்களை வைத்து, தளர்வாக கட்டிவிட வேண்டும். பிறகு இந்த பைகளை ஒரு ஒடையில், கால்வாயில் 69 நாட்கள் மூழ்கி வைக்க வேண்டும். காயின் வெளித்தோல் சகோ, உரிதோல் உரியும் வரை வைக்க வேண்டும்.
பைகளை வெளியே எடுத்து, காய்களை தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின், இவற்றை நன்னரில் கழுவி, உலர்த்த வேண்டும். சூரிய ஒளியில் உலர்த்துவதற்காக, சிமெண்ட் (அ) மூங்கில் பாய்களில் பரப்ப வேண்டும். தொடர்ந்து குவித்து வைத்து, 2 மணி நேர இடைவெளியில் மீண்டும் பரப்பி ஒரே மாதிரி உலர வைக்க வேண்டும். 11% ஈரப்பதம் வரும் வரை உலர்த்தி பின் சுத்தமான பாலித்தீன் (அ) சாக்குப் பையில் அடைக்க வேண்டும்.
|