organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் நோய் மேலாண்மை

நோய் மேலாண்மை

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துதல்

  • நோய் தாக்கப்படாத வயல்களிலிருந்து விதைகள் கரணைகள், விதைக்கிழங்குகள் முதலியவற்றைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக கிழங்குகளின் மூலம் பரவும் நச்சுயிரி நோய்கள் விதை மூலம் பரவும் கரிப்பூட்டை, இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய்கள் நச்சுயிரி நோய்கள் விதையின் மேற்புறத்தில் தங்கிப்பரவும் பாக்டீரியா நோய்களின் கட்டுப்பாட்டை எளிதில் பெறலாம்.
  • கோதுமை விதைகளை நான்கு மணி நேரம் குளிர் நீரில் ஊறவைத்து, மதிய வேளையில் சூரிய ஒளியில் நான்கு மணி நேரம் காய வைக்கும் பொழுது விதையிலுள்ள கரிப்பூட்டைக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
  • தக்காளி விதைகளை நொதித்தலுக்கு உட்படுத்தும் பொழுது, வெளிவரும் வாயுக்களை தக்காளியின் மேற்பரப்பில் உள்ள புகையிலைத் தேமல் நச்சுயிரியை அழிக்கின்றன.
  • தக்காளி புள்ளி வாடல் நச்சுயிரி நோயானது நட்ட ஆறு வாரங்கள் வரை நோய் தாக்கிய செடிகளை அகற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • வைரஸ் தாக்கிய செடிகளை வயலில் இருந்து அப்புறப்படுத்தும் பொழுது, நச்சுயிரி நோய்கள் மேலும் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது. வாழை முடிக்கொத்து நோய்.
  • சில விவசாயிகள் கால்நடைகளின் சிறுநீரில் விதைகளை ஊறவைத்து நடுவதால் முளைப்புத்திறன் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர்.
  • கம்பு, சோளப்பயிர்களில் ஏற்படும் தேன் ஒழுகல் நோயைக் கட்டுப்படுத்த, செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்(அதிக மழை வரும் நேரங்களில்) பூக்காத படி விதைத்தால் நோய் கட்டுப்பாடு கிடைக்கும்.
  • வரப்புப் பயிராக கம்பு, சோளம் போன்றவற்றை பப்பாளி, உளுந்து, பாசிப்பயிறு,    நிலக்கடலையை சுற்றிலும் பயிரிடும் பொழுது மஞ்சள் தேமல், பப்பாளி
    வளையபுள்ளி, வைரஸ் நச்சுயிரி, நிலக்கடலை மொட்டுக்கருகல் நோய் கட்டுப்பாடு கிடைக்கிறது.

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016