நூற்புழுக்களின் பாதிப்புகளை செடியைப் பார்த்து அறிந்து கொண்ட போதிலும் செடியின் வேரையும் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியமானதொன்றாகும். அவற்றில் தென்படும் அறிகுறிகளாவன.
பயிர் |
நூற்புழு |
அறிகுறிகள் |
நெல் |
வேர் முடிச்சு நூற்புழு |
வேர்களின் மேல் தனிச்சிறப்பு கொண்ட கொக்கி போன்ற முடிச்சுகள் காணப்படும். புதிதாக வெளிவந்த இலைகளின் வடிவம் சிதைந்து அவற்றின் ஓரங்கள் சுருங்கிக் காணப்படும். |
|
வேர் நூற்புழு |
பாதிக்கப்பட்ட வேர்கள் வெற்றிட பகுதியுடனும், நிறமாற்றத்துடனும் காணப்படும். பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். |
|
வெண் இலை நுனி நூற்புழு |
நெற்பயிரின் இலை நுனிகளைத் தாக்கி 3-5 செ.மீ. வரை வெள்ளை நிறமாக மாறி பின் காய்ந்து விடுகிறது. இலைகளின் நுனிகள் முறுக்கி சுருண்டு காணப்படும் |
துவரை, தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, சோயாபீன்ஸ் |
நீர் உறை நூற்புழு |
பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாகி வளர்ச்சி குன்றி காணப்படும். நாற்று பருவத்தில் முத்து போன்ற பெண் நூற்புழுக்கள் வேருடன் ஒட்டிக்கொண்டிருக்கும். |
உளுந்து, எள், பருத்தி |
மொச்சை வடிவ நூற்புழு |
இலைகள் வெளிர்வடைந்து, சல்லி வர்கள் குறைந்து காணப்படும். |
கரும்பு |
வேர்க்கருகல் நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு |
வேர்கள் ஆங்காங்கே கருமை நிறத்தில் காணப்படும். இலை மஞ்சள் நிறமடைந்து நுனி மற்றும் விளிம்பு காய்ந்து காணப்படும். |
மஞ்சள் |
வேரழுகல் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு |
இலைகள் மஞ்சள் நிறமடைந்து நுனி மற்றும் விளிம்பு காய்ந்து உரிய காலத்திற்கு முன்பாகவே பயிர்கள் முதிர்ச்சியடைந்து காய்ந்து பட்டுப்போகும் |
வாழை |
வேரழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு |
வேர்களிலும், கிழங்குகளிலும் கருமை நிறங்கள் காணப்படும். தாக்கப்பட்ட வாழைகள் வாடி காணப்படும். |
திராட்சை |
மிலாய்டோகைனி, இன்காக்னிட்டா |
இலைகள் சுருண்டு வெளிறிய மஞ்சள் நிறமாகக்காணப்படும். பாதிக்கப்பட்ட வேர்களின் கொடிகளில் உருண்டை யான முடிச்சுகள் காணப்படும். |
எலுமிச்சை |
டைலங்குலஸ், செமிபெனிட்ரன்ஸ் |
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து போகும். நுனிக்குருத்து வளர்ச்சி குன்றியிருக்கும். |
ஆரஞ்சு |
நாரத்தை நூற்புழு |
இலைகள் மஞ்சளாகி வெளுத்து கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்தும், கிளைகளின் நுனி காய்ந்தும் காணப்படும். |
சோளம் |
ஸ்டிங் நூற்புழு, குட்டைவேர் நூற்புழு, லீசன் நூற்புழு |
தண்டுகள் மெலிதாகுதல், முதிர்வதற்கு முன்பே வாடுதல் |
எள் |
முட்டைக்கூடு நூற்புழு |
செடிகள் வெளிறிய நிறத்துடன் திட்டுத்திட்டாக ஆங்காங்கே காணப்படும். |
கேரட் |
வேர் முடிச்சு நூற்புழு |
பக்கக் கிளைகள் கை, கால் முளைத்தது போல் காணப்படும். |
உருளைக்கிழங்கு |
முட்டைக்கூடு நூற்புழு |
கிழங்குகளின் தோற்றம் சிதைந்து அவற்றின் சந்தை மதிப்பைக் குறைக்கின்றன. |
கனகாம்பரம் |
பிராட்டிலிங்கஸ் நூற்புழு |
செடி வளர்ச்சி குன்றி வாடிப்போகும். வேர்ப்பாகம் அழுகி கரும்புள்ளிகளுடன் காணப்படும். |
சம்பங்கி |
மிலாய்டோகைனி நூற்புழு |
செடி வளர்ச்சி குன்றி, மலர் மகசூல் குறையும். வேர்களில் உருண்டையான முடிச்சுகள் காணப்படும். |