அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள் |
|||||||||
பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பஞ்சகாவ்யா மாட்டிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு, அவற்றை புளிக்க வைத்து உருவாக்கப்படும் ஒரு வளர்ச்சி ஊக்கி ஆகும். பெருவெட்டு இரகங்களுக்கு, 3% பஞ்சகாவ்யா, சிம்பு உருவாகும் நிலை மற்றும் பூ மொக்கு நிலையில் தெளிக்க வேண்டும். அமிர்த கரைசல் பயிருக்கு, 1250 லிட்டர் அமிர்த கரைசலை நீர்பாசனத்தின் போது தண்ணீரில் கலந்து விட வேண்டும். இலை வழியாகத் தெளிக்கும் பொழுது 25 லிட்டர் தேவைப்படுகிறது. இது மண் வளத்தை அதிகப்படுத்தி, அதிக மகசூல் தருகிறது. பசுந்தாள் உரம் பசுந்தாள் உரப்பயிர்கள், பொதுவாக முக்கிய பயிர்கள் பயிரிடுவதற்கு முன்னர் பயிர் செய்யப்படுகிறது. பூப்பதற்கு முன்னர் அவற்றை, மண்ணில் மடக்கி உழவு செய்ய வேண்டும். நெல் சாகுபடிக்கு பசுந்தாள் உரம் ஒரு முக்கிய அங்கக உரம். பொதுவாக, லெகுமினேஸியே குடும்பத்தைச் சார்ந்த தாவரங்கள் பசுந்தாள் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பயிர்கள், வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்களின் உதவியுடன், வளிமண்டல நைட்ரஜனை உறிஞ்சி அதை மாற்ற தாவரங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றி தருகின்றன. எனவே, இந்தப் பயிர்களை, முக்கிய பயிருக்கு முன்னர் பயிரிட வேண்டும். பசுந்தாள் உரங்கள் இடும் முறைகள் தக்கைப் பூண்டு, பசுந்தாள் உரங்களான சணப்பை, இண்டிகா ஆகியவற்றை நெல் பருவத்திற்கு முன்னர் பயிரிட வேண்டும். அவற்றை விதைத்த 45-50 நாட்களில் மண்ணில் மடக்கி உழவு செய்ய வேண்டும். இந்தப் பயிர்கள், தண்ணீரில் 10 நாட்கள் வரை விட்டு மட்கச் செய்து பின் உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரத்தின் பயன்கள் இரண்டு பயிர் பருவங்களுக்கு இடையே பசுந்தாள் உரங்களை பயிரிடும் பொழுது, தண்ணீர் மற்றும் காற்றினால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கலாம். பயிர்கள் மட்கும் பொழுது மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகளை பயிர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அளிக்கிறது. இந்த பெயர்கள், மண்ணின் துகள்களை இழகச் செய்து, களிமண்ணின் புனரமையை அதிகரிக்கிறது. மேலும் இவை மண்ணின் ஊடுருவல் திறன் மற்றும் காற்றோட்டத்தை அதிகரிக்கிறது. பசுந்தாள் உர பயிர்களை மண்ணில் மடக்கி உழும் பொழுது, அவை மட்கி, மண்ணில் கார்பன் மற்றும் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இந்த தாவரங்கள், பொறி பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்களாக வளர்க்கப்படுகின்றன. பொதுவாக பயன்படுத்தப்படும் பசுந்தாள் உரப்பயிர்கள் சணப்பை (கரோட்டலேரியா ஜன்கசியா), தக்கபை் பூண்டு (செல்பேனியா கேன்னபீனா), அகத்தி (செஸ்பேனியா ஸ்பிசியோசா) காட்டு இண்டிகோ (டெப்ரோசியா பர்பூரியா), இந்திய இண்டிகா (இண்டிகோபெர்ரா டிநிட்டோரியா), டெப்ரோசியா நாக்டிப்ளோரா. பசுந்தழை உரங்கள் பசுந்தழை இலைகள் மற்றும் தண்டுகளை வயலில் போட்டு உழவு செய்யும் முறைகளை விவசாயிகள் பரவலாக, செய்து வருகின்றனர். இம்முறைக்கு பயன்படுத்தப்படும் இலைகள் பசுந்தழை உரங்கள் என்று அழைக்கப்படுகின்றது. பசுந்தழை உரங்களின் பயன்பாடு இவ்விலைகள் பசுந்தழை உரமாகவும் மற்றும் உயிர் பூச்சிக் கொல்லி தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் தழைச்சத்தை அதிகரித்து, பூச்சி மேலாண்மைக்கான செலவுகளைக் குறைக்கிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் பசுந்தழை உர தாவரங்கள் அசேடிராக்டா இண்டிகா, புங்காமியா பின்னேட்டி மொரின்டா ப்பூபன்ஸ் போன்றவை பசுந்தழை உரமாகப் பயன்படுத்தப்படும். சில தாவரங்கள் மற்ற பசுந்தழை தாவரங்களான, எருக்கம், வாகை, சரக்கொன்றை, மயில் கொன்றை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பிண்ணாக்கு பிண்ணாக்கு தழைச்சத்து மிகுந்த ஒரு நல்ல அங்கக பொருளாகும். பிண்ணாக்கில் பல வகைகள் உள்ளன. அவை கடலை பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஆமணக்கு பிண்ணாக்கு பொதுவாக, கடலை மற்றும் வேப்பம் பிண்ணாக்கிள் தழைச்சத்து அதிகமாக உள்ளதால் அவை நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படும் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Updated on : March 2015 |
|||||||||
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு |