விதை
விதை
விதையை தேர்வு செய்தல் : நெல் சாகுபடியில் விதை தேர்வு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நெல் விதைகள் சீரான அளவு, வயது மற்றும் எந்தவித நச்சுயிரி தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும். அதன் முளைப்புத்திறனும் அதிகமாக இருக்க வேண்டும்.
தரமான விதைகயை பிரித்தெடுக்கும் முறை
நல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிலிருந்து பிரித்தெடுக்க, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு. தண்ணீரின் அடியில் மூழ்கியிருக்கும் விதைகளை விதைப்பதற்கு உபயோகிக்கவும். இந்த முறை மூலம் சேதமடைந்த விதைகளை அப்புறப்படுத்தலாம்.விதை இருப்பில் அதிகமான பதர்கள் இருக்கும் பொழுது மற்றொரு முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் முட்டையை போடவும். முட்டை மேற்பரப்பை அடையும் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக உப்பு சேர்த்து கொண்டு வர வேண்டும். |
|
விதைகளை தண்ணீரில் கொட்டும் பொழுது நல்ல தரமான விதைகள் நீரில் மூழ்கி விடும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேல் மிதக்கும். இதை நீக்கி விட வேண்டும். தரமான விதைகளை நல்ல தண்ணீர் கொண்டு 2-3 முறை உப்பு போகும் வரை கழுவ வேண்டும். இப்படி செய்யாவிடில், விதையின் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். |
விதை அளவு : விதையின் அளவு சாகுபடி செய்யும் நெல் இரகத்திற்கு ஏற்றவாறு வேறுபடும். ஒரு எக்டர் நன்செய் நிலத்திற்கு தேவையான விதையின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால நெல் இரகம் |
: |
60-70 கிலோ |
மத்திய கால நெல் இரகம் |
: |
40-60 கிலோ |
நீண்ட கால நெல் இரகம் |
: |
30-60 கிலோ |
வறண்ட மற்றும் மானாவாரி விதைப்பு |
: |
85 -100 கிலோ |
முளைப்புத்திறன் பரிசோதனை
விதைக் குவியலின் நடவு மதிப்பை மதிப்பிடுவதற்கு முளைப்புத்திறன் பரிசோதனை மிக முக்கியமான தர சோதனையாகக் கருதப்படுகிறது. இந்த விதை பரிசோதனை நல்ல நாற்றுக்கள் மற்றும் தாவரங்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமையை அளவிட உதவுகிறது.வெவ்வேறு வழிகளில் மேற்கொள்ளப்படும் முளைப்புத்திறன் பரிசோதனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வெள்ளைத் துணியில் ஒரு கைப்பிடி விதைகளை போட்டு கட்டி, 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, 24 மணிநேரம் இருட்டறையில் வைக்க வேண்டும். அடுத்த நாள் முளைவு சதவிகிதத்தை பார்க்க வேண்டும்.
வைக்கோல் ஒன்றாகச் சேர்த்துகட்டி ஒரு பால் போன்று செய்ய வேண்டும். விதைகளை இந்த பாயின் இடையில் வைத்து சுருட்டி கட்ட வேண்டும். தண்ணீரில் ஒரு நிமிடம் மூழ்கி விட்டு பின் விதைகளை வைக்கோலுக்கு மாற்ற வேண்டும். ஒரு நாள் (24 மணிநேரம்) கழித்து முளைத்த விதைகளை கணக்கிட வேண்டும். |
|
ஒரு ஈரமான சாக்குப்பையை எடுத்து, மடித்து, விதைகளை சாக்குப் பையின் இரு பகுதிகளுக்கு இடையே போட்டு ஒரு நாள் முழுவதும் இருட்டறையில் வைத்திருக்க வேண்டும். அடுத்த நாள், முளைப்புத் திறனை கண்டறிய வேண்டும். |
விதை நேர்த்தி
விதை நேர்த்தியானது, முளைக்கும் திறன், முளைப்பு வீரியம் அதிகரிக்க. பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்க உதவுகிறது. பல்வேறு நெல் விதை நேர்த்தி முறைகளை கீழே காண்போம்.
- விதைகளை தண்ணீரில் ஊறவைத்தல் : முதலில் விதைகளை சாக்கு பை (அ) துணிப்பையில் கட்டி தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், அதை வெளியே எடுத்து ஈர சாக்குபை கொண்டு மூடி விட வேண்டும். அதே நாளில், மறுபடியும் தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த விதைகளை நாற்றங்காலில் விதைக்க வேண்டும். இந்த விதை நேர்த்தி விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது.
- மாட்டு கோமியம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் :
நெல் விதைகளை மாட்டுக் கோமியம் கொண்டு விதை நேர்த்தி செய்தால் முளைப்புத்திறன் அதிகரிக்கும். முதலில் அரை கிலோ மாட்டு சாணம் மற்றும் 2 லிட்டர் மாட்டு கோமியம் எடுத்து அதை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பிறகு 10 -15 கிலோ விதைகளை முதலில் தண்ணீரில் 10 -12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் மாட்டு சாண கரைசலில் 5-6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நாற்றங்காலில் விதைப்பதற்கு முன் விதைகளை நிழலில் உலர்த்த வேண்டும்.
- ஆட்டு சாண கரைசல் பயன்படுத்தி விதை நேர்த்தி :
விதையின் முளைப்புத் திறன் அதிகமாக்க 30 நாள் வயதான விதைகளை ஆட்டுசாண கரைசல் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- மாட்டு கோமியம் பயன்படுத்தி விதை நேர்த்தி
: மாட்டு கோமியம் 500 கி.கி எடுத்து 2.5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். விதைகளை ஒரு சிறிய பையில் கட்டி இந்த கரைசலில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
- இனிப்பு கொடி சாறு பயன்படுத்தி விதை நேர்த்தி : இனிப்பு கொடி கிழங்கு தூள் 1.25 கிலோ எடுத்து ஆறு லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். விதைகளை ஒரு சிறிய பையில் கட்டி இந்த கரைசலில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.
சால்வடோரா பெர்சிகா கொண்டு விதைநேர்த்தி
- உயிர் உரங்கள் கொண்டு விதைநேர்த்தி செய்தல் :
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், அசிட்டோபேக்டர் மற்றும் சூடோமோனாஸ் (1.25 கிலோ /எக்டர்) ஆகியவற்றை முதலில் அரிசி கஞ்சியில் கலக்க வேண்டும். நல்ல சுத்தமான தரையில் முளைகட்டிய விதைகளை பரப்பி, பின் உயிர் உர கூழ்மத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை நிழலில் 30 நிமிடங்கள் உலர்த்தி விதைக்க வேண்டும்.
விதைகளை நல்ல பிரகாசமான சூரிய ஒளியில் அரை மணி நேரம் உலர வைத்து பின் விதைப்பதால், முளைப்பு திறன் மற்றும் நாற்றுகளின் வீரியம் அதிகரிக்கும்.
Updated on : March 2015 |