விதை
organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

மண் வளத்தை மேம்படுத்துதல்

விதைத்த நாளிலிருந்து, அறுவடை காலம் வரையில், பயிர்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. பயன்படுத்தப்பட்ட ஊட்டச்சத்துக்களை திரும்ப மண்ணில் தக்கவைத்து அதை இரண்டாம் பருவப் பயிர்களுக்கு அளித்து, மண்ணின் வளத்தை நிலைநிறுத்துதல் மிகவும் இன்றியமையாதது. பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், முறையே தொழுவுரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம், மண்புழு உரம் மற்றும் உயிர் உரங்கள் போன்ற கரிம ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்றது. இந்த இயற்கை உரங்கள் மண் அரிப்பை தடுத்து, மண்ணின் நீர் உள்ளீர்ப்பு திறனை அதிகரிக்கிறது.

தொழுவுரம்

கால்நடைகள், ஆடு மற்றும் பன்றிகளின் கழிவுகள் தொழுவுரமாக உபயோகிக்கப்படுகிறது. பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தொழுவுரத்தில் குறைந்த அளவில் காணப்படுகின்றன. இவை மண்ணில் நீண்ட காலம் தங்கியிருந்து ஒரு நல்ல விளைச்சலைக் கொடுக்கும்.

தேவையான அளவு

மாட்டு சாணம் – 12 -15 டன் /எக்டர்
ஆட்டு சாணம் – 12.5 டன் /எக்டர்
கோழி எரு – 5 டன்  /எக்டர்
பன்றி சாணம் – 2.5 /எக்டர்

உபயோகிக்கும் முறை

மேலே குறிப்பிட்டுள்ள உரங்களை அடியுரமாக கடைசி உழவின் போது இட வேண்டும். தொழுவுரத்தை நன்கு மட்க வைத்து பின் உபயோகிக்க வேண்டும்.தொழுவுரத்தை இட்ட அதே நாளில் உழுது மண்ணில் கலக்கும்படி செய்ய வேண்டும். தொழுவுரங்களை, மண்ணில் நீண்ட காலம் மடக்கி ஒருங்கு கூடி கலக்காமல் வைத்திருந்தால் 50 சதவிகித ஊட்டச்சத்துக்கள், மண் அரிப்பு மற்றும் அதிக வெப்பத்தினால் வீணாகி விடும்.

உயிர் உரங்கள்

வளி மண்டலத்தில் 78% நைட்ரஜன்  உள்ளது. மண்ணில் உள்ள சில நுண்ணுயிரிகள் வளிமண்டல் நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்தி, அதை தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வடிவத்தில் மாற்றி தருகிறது. நெல் சாகுபடியில் பொதுவாக அசிட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகிறது. இவை இரசாயன உர செலவினை குறைந்த மகசூலை அதிகரிக்கிறது. மேலும் மண்ணின் வளத்தையும் மேம்படுத்துகிறது.

Updated on : March 2015

 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16