ரோஸ்மேரி பயிரின் அங்கக சாகுபடி
மண் மற்றும் பருவம்
நன்கு நீர் வடியும் இரும்பொறை மண், கார அமிலத் தன்மை 5.5 முதல் 7.0 வரை இருந்தாலே ரோஸ்மேரியை சாகுபடி செய்யலாம். மண்ணின் கார அமிலத் தன்மை 5.0க்கு குறைவாக இருந்தால், டோலமைட் ஒரு எக்டருக்கு 2.5டன் எ்ற அளவில் மண்ணுடன் நன்றாக கலந்து இட வேண்டும். இதற்கு குளிர்ந்த பருவமும், லேசான வெயிலும் 30செ.மீக்கு குறைவாக இருந்தாலே போதும்.கடல்மட்டத்திலிருந்து 900 முதல் 2500 மீ வரை உள்ள குளிர் மண்டல பகுதி சாகுபடி செய்ய ஏற்றது.
பருவம்
ரோஸ்ஆமரி பயிரின் வேர்த்துண்டுகளை ஜீன்–ஜீலை மற்றும் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது.
காலம்: இது ஒரு பல்லாண்டு பயிர்.12 வருடங்கள் வரை உயிர் வாழும்
நிலத்தைத் தயார் செய்தல்
நிலத்தை 2முறை உழவுக்கு நன்கு பண்படுத்த வேண்டும்.கடைசி உழவின் போது 25டன் நன்கு சிதைந்த பண்ணை எரு, 500கிலோ வேப்பங்கட்டி போன்றவற்றை மண்ணில் இட்டு நன்றாக கலக்க வேண்டும். விதைப் படுக்கைகளை 30செ.மீ உயரத்துடன்,1.5மீ.அகலத்துடன் தேவையான அளவு நீளத்துடன் அமைக்க வேண்டும்.விதைக்கும் போது, 5கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 5கிலோ பாஸ்போ பாக்டீரியம் மண்ணில் இட்டு, நன்றாகக் கலக்க வேண்டும்.
விதைக்கத் தேவையான பொருட்கள்: ஒரு ஏக்கருக்கு 50000 செடிகள்
விதைப் பெருக்கம்
பூ பூப்பதற்கு முன் நுனியில் உள்ள பூக்களை விட்டு இலைகளுடன் பாதி கெட்டியான 10-15 செ.மீ அளவுடைய மரத்துண்டுகளை பெருக்கம் செய்ய பயன்படுத்தலாம்.இந்தத் துண்டுகளை மண்,மணல் மற்றும் இலைகள் கலந்த கலவையில் விதைக்க வேண்டும்.3% பஞ்சகாவ்யா (அ) 10% சிமிபி கரைசலில் 20 நிமிடங்களுக்கு மூழ்க வைத்து பின் பயன்படுத்த வேண்டும்.இந்த பாலிதீன் பைகளை நிழலில் வைத்து,2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 60 நாட்களில் நடவு வயலில் நட தயாராகி விடும்.
பயிரிடுதல்:45x45 செமீ இடைவெளியில் வேர்துண்டுகளை விதைக்க வேண்டும்.6 மாதங்களுக்கு பயிரிட்ட பிறகு மத்திய கிளையை அகற்ற வேண்டும்.
பாசனம்:மானாவாரி நிலையில் வறண்ட பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.வறட்சி காலங்களில் பாசனம் செய்வதால் தழை வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
உரமிடுதல்
- நன்கு மட்கி சிதைந்த மண்ணை எரு 50 டன்/ எக்டர் அளிக்க வேண்டும்.
- மண்புழு உரம் ஒரு எக்டருக்கு 5 டன் எனற அளவில் அளிக்க வேண்டும்.
- வேப்பங் கட்டிகளை ஒரு எப்டருக்கு 1.25 டன் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
- அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம் ஒரு எக்டருக்கு 25 கிலோ என்ற அளவில் அளிக்க வேண்டும்.
- 3% பஞ்சகாவ்யாவை ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும். பஞ்சகாவ்யாவை ஒரு வருடத்திற்கு 5 முறை தெளிப்பதால் விளைச்சலை அதிகரிக்கலாம்.
பயிரிட்ட பின் செய்யும் உழவியல் முறைகள்
முதல் முறை களையெடுத்தல் பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு செய்ய வேண்டும்.ஒரு வருடத்திற்கு 4-5 முறை களையெடுக்க வேண்டும்.5% வேப்ப எண்ணெய்,10% வெர்மிவாள்,3% தசகாவ்யாவை மாதம் ஒரு முறை தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு: இது பூச்சி மற்றும் நோய் தொல்லையில்லாமல் இருக்கும்.
மகசூல்: ஒரு எக்டருக்கு 12-13 டன் என்ற அளவில் பச்சை இலை மகசூல் கிடைக்கும்.
அறுவடை
பூ பூக்க ஆரம்பிக்கும் சமயத்தில்இலைகளை அறுவடை செய்ய வேண்டும்.30-35செ.மீ நீளமுடைய பூப் பகுதிகளை இலைகளுடன் அறுவடை செய்ய வேண்டும்.அனைத்து கிளைகளும் இந்த நிலையில் வாலை வழங்கப்பயன்படுத்தப்படுகிறது.இந்த மாதிரி செய்யும் போது டர்பன்டைன் வாசனை வரும்.முதல் வருடத்தில் பயிரிட்ட 215 நாட்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராக வேண்டும். அடுத்தடுத்த வருடங்களில் ஒரு வருடத்திற்கு 3 அறுவடை செய்யலாம்.ஒரு வருடத்திற்கு 3-4 மாத இடைவெளி விட்டு 3 முறை அறுவடை செய்யலாம்.
இலைகளை பதப்படுத்துதல்
அறுவடை செய்த இலைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பின் நிழலில் உலர்த்த வேண்டும்.3 நாட்களில் 10% ஈரப்பதம் இருக்குமளவுக்கு உலர்ந்துவிடும்.பின் பாலித்தீன் பைகளில் அடைக்கலாம்.
மகசூல்
ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 2.5 டன் உலர் இலைகள் மகசூல் கிடைக்கும்.ரோஸ்மேரி எண்ணெய்காக வாலை வடித்தல் புதிதாக அறுவடை செய்யப்பட்ட சிறு கிளைகள் (அ) இலைகளை நீராவி வாலை வடிததலால் எண்ணெய் கிடைக்கிறது. 120 நிமிடங்களுக்கு நீராவி வாலை வடித்தல் செய்ய வேண்டும்.
எண்ணெய் மகசூல்: ஒரு எய்டருக்கு 80-100 கிலோ என்ற அயவில் மகசூல் கிடைக்கும். |