அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள் |
சாணக் குவியலில் இருந்தது 40 நாட்களில் வலுப்படுத்தப்பட்ட உரம் தயாரித்தல் அறிமுகம் : இந்தியாவில் சாணம் அடிப்படையிலான அங்கக உரங்கள் மூலம் சத்துகளை வழங்க போதுமான சாத்தியம் உள்ளது. இந்திய விவசாயத்தில் உழவர்களுக்கு போதுமளவு சாணம் கிடைக்கிறது. ஆனால், பெரும்பாலான உழவர்கள் அவற்றை உரத்திற்காக பயன்படுத்துவதில்லை. மற்ற உழவர்கள் அவற்றை அப்படியே முதிராத நிலையில் நிலத்தில் இடுவதால் அதன் மக்காத தன்மை வெப்பநிலையை அதிகரித்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரினை வெளியிட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனால் மண்ணில் தழைச்சத்தின் அளவு குறைந்து பயிர்களின் உற்பத்தித் திறன் வெகுவாக பாதிக்கப்படுகின்றது. இம்மாதிரியான வழக்கம் பெரும்பாலான உழவர்களால் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றது. இம்மாதிரியான வழக்கம் பெரும்பாலான உழவர்களால் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்குக் கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு முறையான தொழில்நுட்பங்களைக் கொண்டு உரமாக்குதல் மூலம் சாணம் நல்ல உரமாக மாற்றப்படுவது ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில உழவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் எருமையின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அங்கக உரங்கள் மண்ணின் வளத்தையும், நலத்தையும் பாதுகாக்கின்றது. அதனுடள் அங்கக உரங்கள், தாவர ஊட்டச்சத்துக்கள், மண்ணிலுள்ள கரிமங்கள் மற்றும் மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் போன்றவற்றிற்கு ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் கிராமப்புறங்களில் சாணம் குவியலாக வைக்கப்படும்போது, பத்து ஆண்டுகளுக்கு பிறகும் கூட மிகவும் சூடாக இருக்கும். இது அதன் மோசமான தரத்தை எடுத்துக்காட்டுகின்றது. எக்காரணத்தைக் கொண்டும் உரம் சூடாக இருக்கக்கூடாது. சூடாக இருந்தால் அது நல்ல உரமாக இருக்காது எனவும் கருத்தில் உள்ளது. அங்ககக் கரிமம் சத்துக்கள், இழந்த மண்ணுக்கு வாழ்வதாரமாகத் திகழ்கின்றது மற்றும் முதிர்ந்த உரம் மண்ணின் வளத்தை புதுப்பிக்கக் கூடிய வாழ்வாதாரமாக உள்ளது. அங்கக உரங்கள் மண்ணின் வளத்தை பாதுகாப்பதுடன் நிலையான பயிர் உற்பத்தி மற்றும் நன்மையாக்கும் நுண்ணுயிரிகள் உற்பத்தி போன்றவற்றிற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. முதரிந்த உரம் நல்ல நீர் பிடிப்பு திறன் கொண்டதாயும், மென்மையாகவும், ஏற்கக்கூடிய மணம் கொண்டதாகவும், கருப்பு போன்ற நிறத்திலும், கொத்தில் செயல்பாடு கொண்டதாகவும் இருக்க வேண்டும். உரமாக்குதல் மூலம் பண்ணையிலுள்ள கரிமக் கழிவுகள் ஒரு நல்ல வளமுள்ள பொருளாக மாற்றப்பட்டு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இந்த மக்குதல் விகிதம், நுண்ணுயிர் வளர்ச்சி, அதாவது கார்பன்-நைட்ரஜன் விகிதம், ஆக்சிஜன் சப்ளை, ஈரப்பதம், அமில காரநிலை, வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்து அளவு போன்ற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. பயிர்களுக்கு உகந்த வளர்ச்சி காரணிகள் உரமாக்குதலில் உள்ளனவா என்பது, உரமாக்குதலின் தரம் மற்றும் பயிர்களின் வளர்ச்சியை பொறுத்து இருக்கின்றது.
|
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |