நுண்ணுயிர் காரணிப்பொருட்கள், கரிம பொருட்கள் மற்றும் கழிவுகளை துரிதமாக மக்கச்செய்து உரமாக மாற்றப்பயன்படுகிறது. குவியலின் வெப்பநிலை குறைந்தவுடன் ஒரு வாரகாலம் ஆன உரமாக்குதலுக்கான ஊடகத்தைச் சேர்க்க வேண்டும். இந்த ஊடகம் ஒரு சாடியில் 5-7 நாட்கள் வரை நொதிக்கச் செய்து, அதனை பயிர்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக, நுண்ணுயிரிகள் மிகுந்ததாக மாற்றப்படுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த ஊடகத்தை நீருடன் கலந்தோ அல்லது கலக்காமலோ 2 முதல் 3 லிட்டர் துளை என்றவாறு 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் ஊற்றுவதன் மூலம் மக்குதல் துரிதப்படுத்தப்படுகின்றது. அதே போல் பஞ்சகாவ்யத்தில், நன்மை பயக்கக்கூடிய நுண்ணுயிரிகளான லாக்டிக் அமில பாக்டீரியா, ஈஸ்ட், ஆக்டினோமைசீட்ஸ், ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியா மற்றும் சில பூஞ்சாண வகை உயிரிகளும், நுண்ணுரங்களான அசிட்டோபாக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா போன்றவைகளும் காணப்படுகின்றன.
மேற் குறிப்பிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு அதனை நீர் மற்றும் மாட்டுக் கோமியத்தில் கலந்து பின் ஒரு பீப்பாயில் சீரான கரைசல் வரும் வரை வைக்க வேண்டும். அதன் பின்னர் உரக் குவியலின் மேலிட்ட துளைகளில் ஒரே ஒரு முறை ஊற்ற வேண்டும். உரமாக்குதலில் மதிப்புக் கூட்டு பொருட்கள் கீழ்குறிப்பிடட விகிதத்தில் அளிக்கப்படவேண்டும்.
வ.
எண். |
மட்க வைக்கும் முறை/ முதிர்தல் நிலை |
நன்மைகள் |
தீமைகள் |
பொருந்தும் திறன் |
ஆட் செலவு |
குறிப்பு |
1. |
மட்குஎரு 90-120 நாட்கள் |
சுவாச நிலை முறையில் மட்கு எரு தயாரிப்பு |
மட்கு எரு கூடம் அமைக்க அதிக செலவு |
அரசு இதன் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது |
மிதமான செலவு முதல் அதிக செலவு வரை |
அரசு இதனை வலிவுறுத்துகிறது |
2. |
பெங்களுரு முறை ஆச்சார்யா 1939 70 – 90 நாட்கள் |
நல்ல தரமான மட்குஎரு |
அடிக்கடி மட்கு எருவை திருப்பி விட வேண்டும் |
ஏற்றுக்கொள்ளும் திறன் குறைவு |
அதிக ஆள் கூலி |
அதிக ஆள் கூலி குறைந்த அளவு ஏற்கும் திறனை கொண்டது |
3. |
இண்டோ முறை 60-90 நாட்கள் |
நல்ல தரமான மட்கு எரு |
மூன்று குழிகளில் அடிக்கடி திருப்பி விட வேண்டும் |
ஏற்றுக்கொள்ளும் திறன் குறைவு |
அதிக ஆள் கூலி |
அதிக ஆள் கூலி குறைந்த அளவு ஏற்கும் திறனை கொண்டது |
4. |
குழி எரு 180-120 நாட்கள் |
அதிக பயன்பாடு |
சில சமயங்களில் முதிராத மட்குஎரு |
குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது |
குறைந்த ஆள் கூலி |
மட்குஎரு தரம் குறைவு |
5. |
நான்கு குழி முறை 90 நாட்கள் |
நல்ல தரமான மட்கு எரு தயாரிக்கப்படுகிறது |
நான்கு குழிகளை மாற்றி நிரப்பிக் கொள்ள வேண்டும் |
பிரபலமடையவில்லை |
அதிக செலவு |
குறைந்த அளவு ஏற்கும் திறன் உடையது |
6. |
திறந்த ஜன்னல் மட்குஎரு 60-80 நாட்கள் |
எளிய மட்குஎரு தயாரிப்பு முறை |
ஒழுங்காக முதிர்தல் நிலையை அடைவதில்லை |
குறைந்த அளவு பயன்படுத்தப்படுகிறது |
அதிக ஆள் மற்றும் இடு பொருட்களின் செலவு அதிகம் |
மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்காததால் குறைந்த அளவு பயன்படுத்தப்படுகிறது |
7. |
பாலித்தீன் மூடி மட்குஎரு தயாரிப்பு 45-60 நாட்கள் |
எளிதான முறையில் மட்குஎரு தயாரிக்கப்படுகிறது |
காற்றை காற்று உட்செலுத்தி கொண்டு செலுத்த வேண்டும் |
பிரபலமடையவில்லை |
குறைந்த ஆள் செலவு |
செயல்முறைப்படுத்துவதற்கு ஏற்றதல்ல |
8. |
குவியல் எரு 180-250 நாட்கள் |
எளிய மட்குஎரு உற்பத்தி |
முதிர்நிலையை அடையாமல் மட்குஎரு உற்பத்தி செய்யபடுகிறது |
விவசாயிகளின் மத்தியில் நன்கு பிரபலமடைந்த விட்டது |
செலவு இல்லை |
தொழில்நுட்ப நோக்கத்தோடு செய்யப்படாததால் மட்கு எருவின் தரம் குறைவு |
10. |
ஈர மற்றும் காய்ந்த முறையில் மட்கு எரு 40-20 நாட்கள் |
மட்கு எரு தயாரிப்பு விரைவாக நடைபெறுகிறது |
ஆட்கள் தேவை அதிகம் |
ஆட்களை சார்ந்த முறை |
அதிக ஆள் கூலி |
அதிக ஆட்கள் தேவைப்படுவதால் அதிகம் பின்பற்றப்படுவதில்லை |
11. |
உயிர் வாயு மட்கு எரு 40-60 நாட்கள் |
நல்ல தரமான மட்கு எரு |
சில சமயங்களில் மண்ணிற்கு போட இயலாது |
பிரபலம் அடைந்துவிடும் |
விலை சிறிது அதிகம் |
தொழில் நுட்பங்கள் அதிகம் பயன்படுத்தபடுத்த படுவதால் விலையும் அதிகம் |
12. |
சபல்/ஊட்டமேற்றிய மட்குஎரு 40 நாட்கள் |
நல்ல தரமான மட்கு எரு |
எளிதாக இட முடியும் |
நல்ல சிறப்பான மற்றும் தரம் உயர்ந்த மட் கு எரு |
குறைந்த செலவு அல்லது செலவே இல்லை
3 மணி நேர ஆட் செலவு மட்டுமே |
மிகவும் பிரபலமானது விரைவாக முதிர்நிலை அடைதல் எளிதில பின்பற்றலாம் |