organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

வெற்றிகரமான அங்கக வேளாண்மை

வெற்றிகரமான அங்கக மாற்றத்திற்கான வழிமுறைகள்:

பாரம்பரிய வேளாண் முறையிலிருந்து அங்கக முறைக்கு மாற பல மாற்றங்கள் தேவைப்படுகிறது. விவசாயிகளின் மன உறுதி மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு மாறும் தருவாயில் பல இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பாரம்பரிய முறை உடனடி தீர்வு தந்தாலும் நிரந்திர தீர்வு தருவதில்லை. அங்கக வேளாண்மையில் புதிதாக கால்பதிக்க நினைக்கும் விவசாயிகளுக்கு இதோ சில வழிமுறைகள்.

அ. அங்கக வேளாண்மையின் அடிப்படைகளை புரிதல் மற்றும் அவற்றின் தரநிர்ணயம்:

அங்கக வேளாண்மை என்பது அறிவு சார்ந்த ஓர் முறை. ஆகையால் புதுவரவு தரும் விவசாயிகள், உண்மை விவரங்களை கேட்டு, படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். முறையாக அளிக்கப்படும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தங்களது தோட்டத்திலே சில முறைகளை பயனுள்ளதாக்க பயில வேண்டும். அங்கக முறை “வரும் முன் காப்போம்” என்பதை தாரக மந்திரமாகக் கொண்டது. ஆயினும் பல பிரச்சனைகளுக்கு இம்முறையில் தடுப்பு வழிகள் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆ. நமக்கு உதவும் மூலதனங்களை கண்டறிதல்:

தற்போது உள்ள அங்கக வேளாண் விவசாயிகள் பலர் நல்ல தரமிக்க ஆலோசனைகளை வழங்க முன் வருகிறார்கள். புதிய விவசாயிகள் ஆலோசகர்களை நிச்சயமாக அனுக வேண்டும். நல்ல ஆலோசகர்கள் விவசாயிகளின் உண்மையான நிலை மற்றும் அவர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை நிச்சயம் அறிவர். ஆலோசகர் விவசாயிகளுக்கு மூலதனங்களைப் பற்றின விவரங்களை தந்து உதவுவார்.
அங்கக வேளாண் பற்றிய நிறைய குறிப்புகள் வளைதளங்களில் உள்ளது. புத்தகங்களாகவும் அவை கிடைக்கின்றன. வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி கூடங்களில் இதைப்பற்றின விவரங்களை சேகரிக்கலாம்.

இ. மாற்றத்தை கவனமாக திட்டமிட வேண்டும்:

இலக்குகளை தெளிவாக நிர்ணயம் செய்தல் வேண்டும். காலநேரம், வரவு செலவு, விற்பனை ஆகியவற்றை முறையாக திட்டமிடல் வேண்டும். வரவு செலவுகளை திட்டமிடல் மிகவும் முக்கியம். களை அகற்றும் கருவிகள் மட்குதலுக்கு உதவும் கருவிகள், பதப்படுத்தும் கருவிகள் ஆகியவற்றின் முதலீட்டை தீர்மானித்தல் வேண்டும். அங்கக உற்பத்திக்கு தொடர் சந்தை தேவை ஏற்படுத்துதல் முக்கியமானதாகும். இதுவரை உள்ள அங்கக விவசாயிகளின் ஆலோசனைகளை பெறுதல் மிகவும் நல்லது. சில நேரங்களில் பாரம்பரிய முறையை பின்பற்றுதல் அதிக நஷ்டத்தை தவிர்க்க உதவும். கால்நடை பண்ணை வைத்திருக்கும் விவசாயி, அங்கக வேளாண்மையை பின்பற்ற முயன்றால் முதலில் தனது நிலத்திற்கு தரச்சான்றிதழ் பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு செய்தல் மூலம் அவர் தனது திட்டங்களை உருவாக்கவும் தீவனப் பயிர் வளர்ப்பதைப் பற்றியும் நன்கு அறியலாம்.

ஒரு நிலம் முழுவதுமாக அங்கக தன்மையுடையதாக மாற சில ஆண்டுகள் ஆகலாம். இவ்வாறு மாறும் பருவத்தில் ஒரு பகுதி அங்கக முறையிலும், மற்றொரு பகுதி பாரம்பரிய முறையிலும் கொண்டு செல்லப் படலாம். ஆனால் தரசான்றிதழ் வழங்குவோர் இதை அதிகமாக ஊக்குவிப்பதில்லை.

ஈ. மண்தரத்தை நன்கு புரிதல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல்:

அங்கக வேளாண்மையில் புதிய வரவு தர விரும்பும் விவசாயி தனது மண் வளத்தை நன்கு அறிய வேண்டும். மண்வகை, ஆழம், மண் நயம், சுண்ணாம்பு நிலை, உப்பு நிலை, அங்கக கரிமம், களர் அமில நிலை, நீர் உட்புகு திறன், ஊட்டச்சத்து அளவு, உயிரியல் செயல்பாட்டு நிலை, குறைந்த களை மற்றும் பூச்சித்தொல்லைகள் போன்றவை அங்கக தரச் சான்றிதழ் பெற உதவும்.
விவசாயி கால்நடைகள் இல்லாமல் பயிரிடதிட்டமிட்டால் ஊட்டச்சத்து மூலதனத்தையும் சேர்த்து திட்டமிடல் மிகவும் அவசியமானதாகும். உதாரணத்திற்கு பாறை துகள்கள், சுண்ணாம்பு தூள், மட்கிய குப்பைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

. அவரவர் சூழலுக்கு ஏற்ப பயிர்களையும் கால்நடைகளையும் திட்டமிடல் வேண்டும்.

ஊ. பயிர் சுழற்சி திட்டமிடல்:

பயிர் சுழற்சி மூலம் பூச்சித் தொல்லைகளை தவிர்க்கலாம். களையினை கட்டுப்படுத்தலாம். அங்கக வேளாண்மையில் பயிர் சுழற்சி ஓர்முக்கிய அங்கமாகும்.

எ. பூச்சித்தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிகளை அறிதல்:

தேர்ந்தெடுக்கப்பட்ட பயிரின் பிரதான பூச்சித் தொல்லைகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகளை அறிதல் மிக அவசியம். உதாரணத்திற்கு கயோலின் (kaolin), ஸ்பைனோசாட் (spinosad) போன்ற அங்கக பொருட்களை பயன்படுத்தலாம்.

ஏ. சொந்த பயிர் சோதனைகளை மேற்கொள்ளவும். இதன் மூலம் சிறந்த பயிர் வகையைத் தேர்வு செய்யலாம்.

ஒ. ஒவ்வொரு குறிப்புகளையும் கவனமாக பதிவேடுகளில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். அங்கக வெளியீட்டுப் பொருட்களின் சந்தை நிலவரம், வரவேற்பு, பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் ஆகியன பற்றிய முழுவிபரங்களை சேகரித்தல் மற்றும் பதிவு செய்திடல் நல்ல திட்டத்தை வழி நடத்த உதவும்.

ஓ. பொதுவான தவறுகளை தவிர்க்கவும்:

  • மாறுதலுக்குத் தேவையானவற்றை பற்றிய திட்டங்களை குறைவாக மதிப்பிடுதல்
  • அங்கக வேளாண்மைக்கான முழு தேவைகளை அறிந்து கொள்ளாமை, அவற்றை குறைவாக மதிப்பிடுதல்
  • வரும் முன் காக்கும் திட்டத்தின் மேல் அதிக அக்கறை கொள்ளாதிருத்தல் ஆகிய தவறுகளை தவிர்க்கவும்.

இவையாவும் பொதுவான தவறுகளாகும்:

உரங்கள் & பூச்சிக்கொல்லி பாரம்பரிய வேளாண்மை அங்கக வேளாண்மை
எருவு/தொழுவுரம் இடுதல்

o

o

போதுமான அளவில் ரசாயன உரம் இடுதல்

o

X
நுண்ணுயிர் உரம்

o

o

பூச்சிக்கொல்லி பயன்படுத்துதல்

o

X