| | |  |  |  |  |
 
விதைச் சான்று :: முக்கியத்துவம்
 
முக்கியத்துவம்
சுத்திகரிப்பு சாதனங்கள்
சுத்திகரிப்புத்தளங்கள்
 

 

 

விதைச் சான்றிப்பு என்பது விதை உற்பத்தி மற்றும் தரத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும்.

விதைச் சான்றளிப்பின் நோக்கம்:
     
மத்திய மைய அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் ரகங்களில் உயர்தரமான விதைகள் உற்பத்தி செய்து, சான்றளிப்பின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதை சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.

சான்றுவிதையின் முக்கியத்துவம்

சான்று விதைதான் பயிர் வளர்ச்சியின் வெற்றி மற்றும் அபாய நிலையை மேம்படுத்தும் ஒரு கருவி ஆகும்.

1.சான்று விதை பயன்படுத்துவதற்கான 10 காரணிகள் விதை தூய்மை:
     
சான்று விதையானது உற்பத்தி தரத்தை பூர்த்தி செய்யும்படி வளர்க்கப்படுகிறது. இந்த விதை குறைந்தபட்ச களை விதை அல்லது பிற கலப்பினங்களைக் கொண்டுள்ளது.

2.இனத்தூய்மை

சான்றுவிதை உபயோக அமைப்பு மரபுத் தூய்மையை அதிகப்படுத்துகிறது. பிற இரகம், இதர பயிர் விதைகள் மற்றும் களைவிதைகளை குறைக்கின்றது.

3.விதைத்த உத்திரவாதம்

வயல் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் மூன்றாவது நபர் ஆய்வு மேற்கொள்வதால் நமக்குத் தேவையான தரமான விதைகள் கிடைக்கின்றது. இதன் மூலம் தாம் எதிர்பார்த்த விதைத்தரம் மற்றும் பிறருக்கு விதைத்தர உத்திரவாதம் கொடுக்க முடிகிறது.

4.புதிய தொழில்கள் உருவாதல்
     
உணவுப் பொருள்களை தயாரிப்போருக்குத் தேவையான ரகங்களை கொடுக்க முடியும். சான்று விதைகளை உபயோகிப்பதன் புதிய தொழில்வாய்ப்புகளும், சந்தை வாய்ப்புகளும் உருவாக வழிவகை செய்கிறது.

5.புதிய மரபுப் பண்புகள்
     
அதிக விளைச்சல், பூச்சி எதிர்ப்பு சக்தி, வறட்சி தாங்கும் சக்தி, களைக் கொல்லி எதிர்ப்புத் திறன் மற்றும சில ஆய்வுகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட விதைகளை விதைச்சான்று மூலம் வழங்கப்படுகிறது.


6.வார்த்தையின் உட்பொருள்  

சான்று விதைகளை உபயோகிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மற்றவர்களிடம் கூறும் பயிர் ரகங்களை உறுதியாக வழங்க முடிகிறது.

7.பயிர்கடனுக்கு உத்திரவாதம்
     
சான்று விதைகள் பயிர்கடன் வாங்குவதற்கு தேவையான ஒப்புதல் வழங்குகிறது. சான்றுவிதை உபயோகிப்பதால் அபாயம் குறைகிறது என்பதை கடன் வழங்குவோர் அறிந்துள்ளனர்.
8.பிற இடுபொருள்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்துதல்
     
சான்று விதை மரபு மற்றும் இனத்தூய்மையை கொண்டுள்ளதால் பிற இடுபொருள்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது. இதன்மூலம் பிறஇடுபொருள்களின் தரம் அதிகரிக்கிறது.

9.சந்தையில் கூடுதல் விலை
     
நல்ல இடுபொருள் நல்ல பயிரை உருவாக்குகிறது. ஆனால் விதைதான் முதன்மை இடுபொருள் அதிக விளைச்சல் மற்றும் கூடுதல் விலை கொடுக்கின்றது.

10.தோற்றம் கண்டறிதல்
     
உணவு பாதுகாப்பு மற்றும் அறியும் திறன் இவை இரண்டும் வேளாண்மையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. பொருட்களின் தோற்றம் தெரிந்தால் அந்தப் பொருட்களுக்கு நம்மால் உறுதியாக உத்திரவாதம் வழங்க முடியும். தொடக்கத்திலிருந்து சான்று விதையானது ஒரு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சான்றுவிதை, அதனை கண்டறிவதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.

 

 
முன்னுரை
செÂல்படும் திட்டங்கள்
விதை உற்பத்தி
ப¢ற்சி
விதை ஆய்வு
இரசாயன பொருள்கள்
பூச்சிக்கொல்லி மற்றும்
பூïச¡Ωக்கொல்லி
விதை மேலாñமை
 
முக்கிÂத்துவம்
தகுதி வரம்புகள்
பதிவு முறை
ஆய்வு
தரக்கட்டுப்பாடு
அங்ககச் சான்றளிப்பு
கட்டΩ விபரம்
விñΩப்ப படிவங்கள்
தொடர்பு கொள்ள

 
நோக்கம்
விதை அடைப்பு கொள்கலன்கள்
சேமிப்பு கார½¢கள்
அமைப்புகள்
சேமிப்பு கிடங்கு சுகாதாரம்
 
 

| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation |

© All Rights Reserved. TNAU-2008.

Fodder Cholam