விதையின் அடிப்படை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிர் சாகுபடி |
வானிலை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விதையின் அடிப்படை
விதை விதை என்பது விதை உறையால் சூழப்பட்ட ஒரு மிகச்சிறிய கருவுற்ற செடியாகும். பொதுவாக இதனுள் சில சேமிப்பு உணவுப் பொருள் காணப்படும். சில வகைத் தாவரங்களில் விதைகள் கொட்டை/பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது கருவுருதலுக்குப் பின் மூடிய மற்றும் திறந்த வகைத் தாவரங்களில் காணப்படக் கூடிய ஒரு வகை முதிர்ந்த சூல்களின் விளைபொருட்கள் ஆகும். அது தாய்செடிகளிலன் ஒரு வித வளர்ச்சி ஆகும். விதை உற்பத்தியானது பூத்தல் மற்றும் மகரந்தச் சேர்க்கையில் தொடங்குகிறது. கருமுட்டையிலிருந்து கரு வளர்தல் ஆரம்பித்து சூலக அறையிலிருந்து விதைஉறை உருவாதல் வரையில் விதை உற்பத்தி முடிவடைகிறது.
விதையின் முக்கியப் பகுதிகள்
கரு என்பது ஒரு இளஞ் செடி. இது முறையான சூழ்நிலைகளில் புதிய முழு செடியாக வளர்ச்சி அடைகிறது. ஒரு வித்திலைத் தாவரங்களில் ஒரு விதை இலையும், இருவித்திலைத் தாவரங்களில் இரு விதை இலையும் மற்றும் திறந்த விதை தாவரங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதை இலையும் காணப்படுகிறது. முளைவேர் என்பது விதைக்கருவின் வேர் ஆகும். முளைக்குருத்து என்பது கருத்தண்டு ஆகும். விதை இலை இணைந்துள்ள புள்ளிக்கு மேல் உள்ள தண்டு வித்திலை மேல்தண்டாகும். விதையிலை இணைப்பிற்கு கீழ் உள்ள தண்டு வித்திலை கீழ்த்தண்டாகும். திறந்த விதைத் தாவரங்கள் பொதுவாக கூம்புடைய தாவரங்களில் சேமிப்பு உணவு தசை என்பது பெண் கேமிட்டோ ஃபைடின் ஒரு மைய சந்ததியின் ஒரு பகுதி ஆகும். சில இனங்களில் முளைக்கருவானது சூழ்தசை அல்லது பெண் கேமிட்டோபைட்டில் காணப்படுகிறது. விதை முளைக்கும் போது செடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கருசூழ்தசையிலிருந்து உட்கொள்ளப்படுகிறது. மற்றவைகளில் கருசூழ்தசை (endosperm) விதைக்கருவினால் (embryo) விதை உறையானது சூலகத்தைச் சுற்றியுள்ள சூல் உறையிலிருந்து உருவாகிறது. சில வகை விதைகளில் விதை உறை மெல்லியதாகவும், (நிலக்கடலை) சில வகைகளில் கடினமானதாகவும் (தேங்காய்) காணப்படுகிறது. விதை உறையானது கருச்சிதைவு மற்றும் கரு உலர்தலிலிருந்து பாதுகாக்கிறது. உறையில் காணப்படும் ஒரு சிறிய இணைப்பிற்குப் பெயர் ஏரில் என்று அழைக்கப்படுகிறது. சில வகை விதைகளில் விதை உறையில் காணப்படும் தழும்பிற்கு ஹைலம் என்று பெயர். விதை மற்றும் தானியங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள்
விதை மற்றும் தானிய உற்பத்திக்கிடையே உள்ள வேறுபாடுகள்
விதையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பியல்புகள் வேளாண் உற்பத்தியின் முக்கிய மூலதனம் மற்றும் இடுபொருள் விதையே ஆகும். மற்ற இடுபொருட்களின் பயன்பாடும் இதனைச் சார்ந்தே உள்ளது. நல்ல வீரியமான விதையானது அனைத்து வழிவகைகளையும உபயோகப்படுத்தி கொண்டு ஒரு உற்பத்தியாளருக்கு சிறப்பான வெளியீட்டைக் கொடுக்கும். விவசாயிகளுக்கு நேற்றைய அறுவடையாகவும், இன்றைய நம்பிக்கையாகவும், செல்வ வளம் தரும் பொருளாகவும் விதை அமைகிறது. சிறப்பான மண் வளத்தில் விதைக்கப்பட்ட சிறப்பான விதை மேலும் சிறந்த அறுவடைக்கு வழிவகுக்கும். மேலும் இது இரு தலைமுறைகளின் இணைப்பாகச் செயல்படுகிறது. விதை என்பது புதிய தொழில்நுட்பங்களை சுமந்து செல்வது புதிய இரகங்களின் கண்டுபிடிப்பும் அவற்றின் தரம் வாய்ந்த விதைகளும், மற்ற இடுபொருட்களும் சேர்ந்து பயிர்களின் மகசூலை பன்மடங்காக உயர்த்தியுள்ளன. இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் உணவு உற்பத்தி உயர்ந்துள்ளது. பயிர்த் தொழில்நுட்ப வளர்ச்சியின் சிறப்பான மரபணுக்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வது விதையே ஆகும். உணவுத் தேவையின் அடிப்படை உபகரணம் குட்டையான மற்றும் அதிக விளைச்சல் தரும் இரகங்கள் மற்றும் வீரிய இரகங்களிலன் அறிமுகத்தால் பல்வேறு பயிர்களின் விளைச்சல் திறன் மற்றும் வளர்ச்சி மேலோங்கியுள்ளது. உற்பத்திக் குறைவான பகுதிகளில் பயிர் வளர்ச்சிக்கு மேலோங்கியுள்ளது. உற்பத்திக் குறைவான பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட இரகங்களின் மூலம் அதிக பயிர் விளைச்சல் பெறமுடியும். இயற்கை சீற்றங்களின் போது விரைந்த வேளாண் புனர்வாழ்வு
விதைத் தொழில்நுட்பத்தின் குறிக்கோள்
சுருக்கமாகக் கூறினால் விதைத் தொழில்நுட்பம் என்பது காலவரையறைக்கு நல்ல தரம் வாய்ந்த விதைகளை நியாயமான விலைக்கு உற்பத்தி செய்வதே ஆகும். நல்ல தரமான விதைகளின் சிறப்பியல்புகள் இனத்தூய்மை சான்றிதழ் பெறத் தேவையான புறத்தூய்மை பெற்றருக்கவேண்டும் பிற இரக விதைகள் இருக்கக்கூடாது (ஒரு கிலோவில் பிற இரக விதைகள் எண்ணிக்கை)
விதை நிலங்களுக்கு அருகாமையில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட விதைகள் காணப்படும். இவற்றை கருவிகளால் பிரித்தல் முடியாது. பயிர் விதைகளில் புறக் கலப்பாக இவ்வகை விதைகள் இருக்கும். இரண்டு பயிர்களும், ஒரே நேரத்தில் முதிர்ச்சி பெற்று அறுவடை செய்யும் பொழுது இவ்வகை கலப்பு ஏற்படும். விதைகள் தடை செய்யப்பட்ட களை விதைகளிலிருந்து கலக்காமல் இருக்கவேண்டும். இவ்வகை களை விதைகள் கீழ்க்கண்ட வழிகளில் கெடுதல் விளைவிக்கும்.
விதை உருவாதல் விதையென்பது கருவடைந்த முதிர்ந்த சூல் ஆகும். இதனில் முளைக்கரு, சேமிப்பு உணவுப் பொருள் மற்றம் பாதுகாப்பு உறைகள் ஆகியவை இருக்கும். விதை வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி போன்றவை கீழ்க்கண்ட நிகழ்வுகள் மூலம் நடைபெறும்.
மகரந்தச்சேர்க்கை பூ என்பது சூலகம் (Pistil), பூந்துகாம்பு (Stamen), புல்லி (Sepal), மற்றும் பூவிதழ் (Pistil), ஆகியவற்றை உள்ளடக்கிய பயிரின் இனப்பெருக்க உறுப்பாகும். பூவின் ஆண்பாகம் (Androceium), மகரந்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பெண் பாகத்தில் கருப்பை (Ovary), சூல்தண்டு (Style) மற்றும் சூல்முடி (Stigma) ஆகியவை இருக்கும். முழுமையடைந்த பூ என்பது ஆண் மற்றும் பெண் பாகங்களை ஒரு சேரக் கொண்டிருப்பதாகும். ஆண் மற்றும் பெண் பாகங்கள், நல்ல செயல்பாடுடன் கூடியிருப்பதை இரு பால் பூ என்றழைக்கலாம். சில சமயங்களில் இரு பாகங்களின் முதிர்ச்சி காலம் வேறுபட்டிருக்கும். இது போன்ற இருகாலப் பக்குவம் (Dichogamy) உள்ள பூக்கள் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு வழி வகுக்கும். இதனுள் ஆண் பாகம் முதலில் முதிர்ச்சி அடைந்தால் மகரந்த முன் முதிர்வு (Protandry) எனவும், பெண் பாகம் முதலில் முதிர்ச்சி அடைந்தால் சூலக முன் முதிர்வு (Protogymy) எனவும் அழைக்கப்படுகிறது. முழுமையடையாத பூக்கள் ஒரு பால் பூக்களாகும். இவற்றுள் ஆண் பூ மற்றும் பெண் பூ தனித்து இருக்கும். இரு பூக்களும் தனியாக ஆயினும் ஒரு செடியில் பூத்தால் ஒரிலித்த செடி என்றும், வெவ்வேறு செடியில் பூத்தால் ஒரு பாலியச் செடி என்றும் அழைக்கப்படுகிறது. கருத்தரித்த பூக்களில் இருந்து விதைகள் உருவாவதற்கு மகரந்தச் சேர்க்கை (மகரந்த பையிலிருந்து மகரந்தம் சூல்முடிக்கு மாறிச் செல்லுதல்) முன்னோடியாகும். கருவுறுதல் முழுமையாக நடைபெறுவதற்கு வீரியமான மகரந்தங்களும் அதனைப் பெற தயாரான நிலையில் சூல் முடியும் அவசியமாகும். முதிர்ச்சி பெற்ற மகரந்தப் பையானது வெடித்து மகரந்தங்களை (ஒரு மய நுண்சிதல் விதைகள்) விடுவிக்கும். அவை அதே பூக்களின் சூல்முடியை சென்றடைந்தால் தன்மகரந்தச்சேர்க்கை எனவும், வேறு பூவின் சூல்முடியை சென்றடைந்தால் அயல் மகரந்தச் சேர்க்கை (அ) அயல் கருச் சேர்க்கை எனவும் அழைக்கப்படும். இரு பால் பூக்களில் மகரந்தப் பை வெடித்தலும் அதனைப் பெற தயார் நிலையுள்ள சூழ்முடியும் ஒரே நேரத்தில் நிகழும் போது தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். பூக்கும் தாவர வகைகளும், வீரிய மலர்கள் (மகரந்தச் சேர்க்கைக்கு முன் விரியாத மலர்கள்) மற்றும் மூடு மலர்கள் (எப்பொழுதுமே விரியாத மலர்கள்) ஆகியவை தன் மகரந்தச் சேர்க்கைக்கு வழிவகுக்கும் பூவியல் குணங்களாகும்.
10-40 சதவிகிதம் வரை அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பயிர்கள் என்ற வகையும் உள்ளது. உதாரணம் பருத்தி மற்றும் துவரை ஆகியப் பயிர்கள் அடிக்கடி மகரந்தச் சேர்க்கைப் பயிர்கள் ஆகும். கருவுறுதல் சூலானது பெண் சூல்திசுவறையிலும், மகரந்தங்கள் ஆண் திசுவரையிலும் வளர்ச்சியடையும். கருவுறுதல் என்பது பெண் திசுவரையிலேயே நடைபெறும். இதற்கு மகரந்தங்கள் ஆண்திசு வரையில் இருந்து பெண்திசுவரையைச் சென்று சேர்வதற்கு உயிரற்ற காரணிகளான காற்று, நீர் மற்றும் உயிர் காரணிகளான வெளவால் போன்றவை துணை புரிகின்றன. கருவுறா விதை கருவுறாமல் விதை உருவாகுதல் தான் கருவுறா விதை என்றழைக்கப்படுகிறது. இனச்சேர்க்கை நடைபெறாமலே இங்கு விதைகள் உருவாகும். பல்வேறு நிலைகளில் இந்த நிகழ்வு நடைபெறும். ஆயினும் கருவுறா விதையின் மரபணு பெண் பூவிலிருந்து மட்டுமே கிடைத்திருக்கும். மகரந்தச்சேர்க்கையோ, மகரந்தக் குழாய் வளர்ச்சியோ இங்கு நடைபெறாது. கருவுறாக் கனி கருவுறாமல் கனிகள் உருவாதல் மற்றோர் வகையாகும். விதை உருவாகுதல் விதையானது உருவாவதற்கு கீழ்க்கண்ட நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழும்.
ஆண் மற்றும் பெண் திசுவறையின் சந்ததி வளர்ச்சி பெண் சந்ததி வளர்ச்சி கருப்பை சுவர்களின் ஆக்கத்திசுவிலிருந்து (Meristem) பூக்கும் தாவரங்களின் விதை உருவாகக் காரணமான அடிப்படை குருத்து உண்டாகிறது. சூல்மூலகத்தினுள், பூசணப் பெண் சிதல் திசு சில சிறப்பியல்புகளுடன் அருகாமையில் உள்ள மற்ற திசுக்களிலிருந்து வித்தியாசப்பட்டு உருவாகிறது. அது பெரிய உயிரணுக்களாவும், பெரிய உட்கரு மற்றும் அடர்த்தியான அறைக்குழம்பு ஆகியவற்றை கொண்ட கரு உற்பத்தி மூல உயிரணு (பெரும் சிதல் விதைகள்) என்று அழைக்கப்படுகிறது. இந்த மூல உயிரணுவானது, குன்றல் பிரிவின் மூலம் நான்கு கரு மூல உயிரணுக்களாக, ஒரு மய அணுகோல்களுடன் பிரியும். இந்த நான்கில், மூன்று உயிரணுக்கள் சிதைந்து, ஒன்று மட்டும் பிழைத்து கருப்பையாக வளர்ச்சி பெரும். இதுவே பெரும் சிதல் விதைகள் உருவாகுதல் என்றழைக்கப்படுகிறது. கரு மூல உயிரணுவின் உட்கரு மேலும் மூன்று தொடர்ச்சியான பிரிவுகள் மூலம் எட்டு உட்கருக்களாக பிரிகிறது. இவற்றுள் கருப்பையின் சூலடி முனையில் மூன்று சூலக எதிர்முனை உயிரணுக்கள் மற்றும் இரு நடுநிலை துருவ உட்கருக்களும், சூழ்துளை முனையில் ஒரு பெண் முட்டை உயிரணு மற்றும் இரு துணை உயிரணுக்களும் உருவாகும். இந்த நிகழ்வே ‘முட்டை உருவாகுதல்’ என்றழைக்கப்படுகிறது. ஆண் சந்ததி வளர்ச்சி மகரந்தப் பையினுள் உள்ள நுண்சிதல் விதையானதுஇ மூல உயிரணுக் குன்றல் பிரிவின் மூலம் நான்கு ஒரு மய நுண்சிதல் விதை மூல உயிரணுக்களாக பிரிகிறது. இவற்றிலிருந்து தான் மகரந்தம் உருவாகும். மகரந்தம் இரு உயிரணுக்களை கொண்டது. ஒன்று குடில் உயிரணு மற்றொன்று தோற்றுவிக்கவல்ல ஆக்க உயிரணு. இந்த உயிரணுவானது பிரிந்து இரு விந்தணு உட்கரு உண்டாகும். மகரந்தச் சேர்க்கை சூல்முடியில் வந்திறங்கும் மகரந்தமானது முளைத்து, பின் மகரந்தக் குழாய் சூல் தன்டின் உள்ளே வளர்ந்து செல்லும். சூல்தண்டைக் கடந்து, சூழ்துளை வழியாக கருப்பையின் உள்ளே நுழையும். கருவுறுதல் நிகழ்ச்சி இரு ஆண் உட்கருக்களின் செயலால் உண்டாகும். ஒன்று பெண் முட்டையுடன் சேர்ந்து இரு மய துருவ உட்கருவாகவும் மற்றொன்று நடைபெறும் இதனுள் மும்மய உட்கருவானது ஆதர கரு சூழ்தசையாக செயல்படும். இந்த நிகழ்வு இரட்டை கருவுறுதல் அல்லது முக்கலப்பு என்றழைக்கப்படுகிறது. விதை வளர்ச்சி
முளைக்கரு முளைக்கரு வளர்ச்சி இரு விதையிலைத் தாவரங்களில் கரு முட்டையில் ஏற்படும் முதல் பகுப்பு குறுக்காக ஒரு சிறிய நுனி உயிரணுவாகவும் ஒரு பெரிய அடித்தள உயிரணுவாகவும் பிரிகின்றது. மேலும் நேர்க்கோட்டில் பகுப்பு ஏற்பட்டு நுனி ‘ ஏ’ உயிரணு இரு பக்கவாட்டில் சேர்ந்த உயிரணுக்களாகவும், ‘பி’ உயிரணு அடித்தள உயிரணு குறுக்கில் ஏற்படும் பகுப்பு ஒன்றன் மேல் ஒன்றாகவும் அடைகின்றன. இவை தான் ‘T’ வடிவமுள்ள 4 முதல் முளைக்கருக்கள். ‘சி’ உயிரணுவானது பக்கவாட்டில் பிரிந்து ‘n’ மற்றும் ‘n’ எனப்பிரியும். இவை மேலும் பிரிந்து 3 அல்லது 4 உயிரணுக்கள் ஒரு நேர் வரிசையில் அமைந்து மிதவை திசுக்களாகின்றன. ‘m’ உயிரணு நேர் பகுப்பு ஏற்பட்டு 4-6 உயிணுக்களாக ஒரு குழுவில் அமைகிறது. சாய்வாக பக்கவாட்டில் பகுப்புகள் ஏற்பட்டு இந்தக் குழு உள்புற உயிரணுக்கள் மற்றும் வெளிப்புற உயிரணுக்களாகப் பிரியும். உள்புற அணுக்கள் வேர் நுனியாகவும் வெளிப்புற அணுக்கள் வேர் உறையாகவும் அமையும். ‘எ’ உயிரணுவில் இருந்து பிரிந்தவை மேலும் அணுக்களாக இரு வரிசையில் பக்கவாட்டில் பகுப்பு ஏற்பட்டு அமைகின்றன. 8 அணுக்களும் நேர் பகுப்பு ஏற்பட்டு, அதில் முதல் வரிசையில் உள்ளவை ஒரு உருண்டை வடிவ முளைக்கருவாக உருவெடுக்கும். இந்த முளைக்கருவின் வெளிப்புற அணுக்கள் பிரிந்து வெளிப்புற அடுக்கில் அமைந்து தோல் சுக்கு திசுவாக உருவாகும். அடுத்த வரிசையில் உள்ளவை விதையிலை நுனித் தண்டு மற்றும் துளையின் தண்டு - முளை வேர் என உருவாகும். ஒரு விதையிலைத் தாவரங்களில் ‘பி’ உயிரணு பகுப்பு ஏற்படாமல் மிதவைத் திசுக்களின் உறிஞ்சுறுப்புகளாக உருவாகின்றன. ‘எ’ உயிரணு பக்கவாட்டில் பகுப்பு ஏற்பட்டு இரு உயிரணுக்களாக பிரியும். இதைத் தொடர்ந்து பலப் பிரிவின் மூலம் ஒரு விதையிலையாக உருவாகும். புல்வகைத் தாவரங்களின் முளைக்கரு வளர்ச்சி ஒரு விதையிலைத் தாவரங்களைக் காட்டிலும், வேறுபட்டு இருக்கும். முதலாவதாக பக்கவாட்டில் ஏற்படும் பகுப்பினால் மேல் கீழாக ஒரே மாதிரியான உணிரணுக்கள் உருவாகும். இந்த ஒரு விதையிலையிலிருந்து மேலும் ஒரு உறியும் தன்மையுடைய முளைக்கரு கவசம், வேர்த்தண்டு மற்றும் வேர் உறை உருவாகும். கரு சூழ்தசை வளர்ச்சி 3 வைகயான கருசூழ்தசை வளர்ச்சி உள்ளன. எ உட்கரு வகை சூழ்தசையின் உட்கரு பல் பகுப்புகள் ஏற்பட்டு பின் தசைச்சுவர் உருவாகும். உதாரணம் கோதுமை, ஆப்பிள், சீமைப் பூசணி பி உயிரணுவகை – உட்கரு தனித் திருக்கும் நிலை இல்லாமல் மற்றும் சி உட்கரு முதலில் பகுப்பு முதலில் உட்கரு பகுப்பும் அதனைத் தொடர்ந்து உயிரணுக்கள் அமைதல் உதாரணம் : ஒரு விதையிலைத் தாவரங்கள். கருசூழ்தசையானது இரு விதையிலைத் தாவரங்களில் ஒரு நிலைப் பெற்ற சேமிப்பு திசுவாகும். சூழ்தசை இல்லாத ஒரு விதையிலைத் தாவர விதைகளில், சூழ்தசையானது வளரும் முளைக்கருவினால் உபயோகப்படுத்தப்படும். சேமித்த உணவும் பொருள்கள் மீண்டும் விதையிலைகளில் உருவாக்கப்பட்டு விதை முளைப்பிற்கு உபயோகம் ஆகும். தானிய வகைகளில் முளைக்கரு முதிர்ச்சி பெரும் போது சூழ்தசையின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு மாவு போன்ற அமைப்ப பெற்று முளைக்கரு கவசத்தின் இடையே ஒரு சுருக்கு போல் அமையும். விதை ஊற வளர்ச்சி சூல் உறையானது மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டு உயிரணு மாற்றங்கள் ஏற்பட்டு முதிர்ச்சியடைந்து விதை உறையாக உருவாகும். இரு சூல் உறைக் கொண்ட விதைகளில், விதை உறையானது இரு சூல் உறையிலிருந்தோ (அ) வெளிப்புற சூல் உறையிலிருந்து மட்டுமோ உருவாகும். இவை போன்றவைகளில் உள்சூழ் உறையானது பிரிந்து விடும். விதை வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி விதை முதிர்ச்சியின் போது ஏற்படும் உணவுப் பொருட்கள் சேமிப்பின் மாற்றங்கள், ஒரு விதையிலைத் தாவரங்கள் (எ.கா. கோதுமை) மற்றும் இரு விதையிலைத் தாவரங்கள் (எ.கா. சோயாபீன்ஸ்) போன்றவற்றில் விவரமாக அறிந்து கொள்ளலாம் . கோதுமையில் , பூ மலர்ந்த பிறகு 35 நாட்களுக்கு விதையின் உலர்ந்த எடை அதிகரிக்கும். விதையின் ஈரப்பதம் 14-21 நாட்களுக்குள் அதிகரிக்கும், அதன் பின் குறையும். ஒடுக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சுக்ரோஸின் அளவ 7-14 நாட்களுக்குள் அதிகமாகவும் அதன் பின் ஸ்டார்ச் ஆக மாறும் போது அவற்றின் அளவு குறையும். ஸ்டார்ச் (மாவுச் சத்து) விதையின் முக்கிய சேமிப்பு உணவுப் பொருளாகும். இதன் அளவு விதையில் அதிகரிப்பது உலர் பொருள் சேமிப்புப் போலவே இருக்கும். ஈரப்பதம் விரைவில் குறையக்கூடிய கோதுமை இரகங்களின் முளைப்புத்திறன் வேகமாக இருக்கும். விதையானது, அதிகளவு உலர் எடை, முளைப்புத் திறன் மற்றும் வீரியம் ஆகியவற்றை கொண்டுள்ள நிலை வினையியல் முதிர்ச்சி என்றழைக்கப்படுகிறது. பொதுவாக, விதையானது வயல் முதிர்ச்சி அடைந்து, 6-10 சதவிகிதம் என ஈரப்பதம் குறையும் போது அறுவடை செய்யப்படும். வயல் முதிர்ச்சி என்பது அந்தந்தப் பயிர்களின் தனித்த இயல்பாகும். விதைத் தூக்கம் விதைத் தூக்கம் என்பது விதையின் ஓய்வு நிலை (அ) விதை உயிர் வாழ ஏற்படும் ஒரு செயல்பாடு ஆகும். ஏனெனில் இது விதையின் முளைப்புத் திறனை தாமதப்படுத்துகிறது. ஆதலால் விதைத் தூக்கம் விதையின் உயிர் வாழ்விற்கு ஒரு முக்கியமான மற்றும் திறனுள்ள செயல்பாடு ஆகும். ஆமென் (1963) அவரின் கூற்றுப்படி விதைத் தூக்கம் என்பது “அக அமைப்பின் கட்டுப்பாட்டில் மற்றும் சுற்றுப்புறச்சூழலின் திணிப்பில் வளர் சிதை மாற்ற வழியில் ஏற்படும் ஒரு செயல்பாடே ஆகும்”. ஆமென் (1963) படி, விதைத் தூக்கம் இரண்டாக வகைப்படும்.
முதல் நிலைத் தூக்கம் தாய் செடியிலிருந்து விதைப் பரவும் பொழுது, அதாவது முதிர்ச்சி பெறும் முன்போ, முதிர்ச்சியின் போதோ, முதிர்ச்சியின் பிறகோ, விதையின் நிலையைப் பொறுத்து விதைத் தூக்கம் உந்தப்படுவது முதல் நிலை விதைத் தூக்கம் ஆகும். இரண்டாம் நிலை விதைத் தூக்கம்
வினையியல் முதிர்ச்சி அடைந்த பிறகு ஒன்றிலிருந்து ஒன்றரை மாதங்களில் இரண்டாம் நிலை விதைத் தூக்கத்தை தூண்டலாம். கோதுமையை 2 வாரம் தேக்கி வைத்தும் தூக்கம் முறியவில்லை. 0.1 சதவிகிதம் ஜிஏ3, 0.5-1.0 சதவிகிதம் எத்தனால், குறைந்த வெப்பத்தில் குளிர் நிலைப்படுத்துதல், கனி உறை நீக்குதல் மற்றும் 20 டிகிரி செ வெப்பத்தில் சேமிப்பது போன்றவற்றை தூக்கத்தை முறிக்கும் முறைகளாகும். இரண்டாம் நிலை விதைத் தூக்க செயல்பாடுகள்
முதல் நிலை விதைத் தூய்மை வகைப்பாடுகள்
வெளிப்புறத் தூக்கம் விதையுறை மற்றும் வேறு காரணிகளான தடைகள் அல்லது கடின விதை நிலை போன்றவை. இயற்பியல் காரணிகள் வேதியியல் காரணிகள் விதையுறையில் முளைப்பைத் தடுக்கும் காரணிகளாகும். பொறியியல் காரணிகள் முளை வேர் வெளிவருவதற்கான பாகங்களில் தடைகள் (எ.கா) டெர்மினேலியா விதையில் முளைவிடுவதற்கு தேவையான இடப்பற்றாக்குறை. உட்புறத் தூக்கம் முளைக்கருவின் உள்ள தடைகள் (அ) முதிர்ச்சியற்ற முளைக்கரு (அ) இரு காரணங்களும் இணைந்தது. இதனில் மேலும் உள்ள வகைப்பாடுகள். புறஅமைப்பியல் காரணிகள் முதிர்ச்சியற்ற முளைக்கருவினால் சாதகமான சூழ்நிலையிலும் விதைகள் முளைக்காமல் இருப்பது. (எ.கா) ஆப்பிள். வினையியல் காரணிகள் வளர்சிதை மாற்ற வழிகளில் உள்ள தடைகள் - எபிஎ (ABA), கெளமாரின்ஸ், பீனால்ஸ் போன்றவை. புறஅமைப்பு வினையியல் மேற்கூறியவை இரண்டும் இணைந்து செயல்பட்டால் விதைத் தூக்கம் ஏற்படும். இரண்டாம் நிலை விதைத் தூக்கம் தடைக்காரணிகள் நீக்கப்பட்டாலும், விதைகள் முளைக்காமல் இருப்பது, சாதகமில்லாத சுற்றுப்புறச் சூழ்நிலைக்கேற்ப தழுவிப் பரவும் முறையாகும். வகைபாடுகள்
ஹார்பர் (1977) படி, விதைத் தூக்கம் கீழ்க்கண்ட வகைப்பாடுகளாக பிரிக்கலாம்.
விதைத்தூக்கத்தின் நிறைகள்
விதைத் தூக்கத்தின் குறைகள்
விதைத்தூக்கம் தோன்றும் இடம் மற்றும் காரணம்
விதைத்தூக்கத்தின் வகைபாடுகள்
விதைத்தூக்கத்தை முறிக்கும் நேர்த்திகள் தோல் ஒதுக்கீடு
தோல் ஒதுக்கீடு இது இயற்பயில் (அ) வேதியியல் முறையில் விதையுறையின் கடினத்தை பலவீனப்படுத்தும் (அ) மென்மைக்குரிய நேர்த்தி முறையாகும். மால்வேசி மற்றும் லெக்யூமினேசி குடும்பங்களின் விதைகளுக்கு இம்முறை பொருத்தமாக இருக்கும். அமிலத் தோல் செதுக்கீடு அடர் கந்தக அமிலம் 100 மிலி / கிலோ என்ற அளவில் விதைகளை நேர்த்தி செய்யவேண்டும். விதையுறைகள் இயல்பு மற்றும் வகையைப் பொருத்து நேர்த்தியின் காலம் மாறுபடும்.
பொருளியில் தோல் ஒதுக்கீடு விதைகளை மணற்தாள் மீது உரசி (அ) கருவி மூலம் (அ) ஊசி வைத்து செல்லுவதற்கு வழிவகுப்பது இம்முறையாகும். சுடு நீர் நேர்த்தி பயிறு வகை விதைகளுக்கு இம்முறை பொருந்தும். விதைகளை கொதிக்கும் நீரில் 1-5 நிமிடம் முதல் 60-80 நிமிடங்கள் வரை ஊறவைக்கவேண்டும். சுண்டல் மற்றும் நிலக்கடலைப் போன்ற பயிர்களில் சுடு நீர் நேர்த்தி 1 நிமிடத்திற்கு மேல் செய்வது விதையைப் பாதிக்கும். குளிர்ந்த / வெப்ப நிலைப்படுத்துதல் முளைக்கருவின் காரணத்தால் விதைத்தூக்கம் இருக்குமாயின், இவ்வகை நேர்த்தி பயன்படும். குளிர்ந்த நிலைப்படுத்துதல் விதைகளை 0-5 டிகிரி செ குளிர்ந்த நிலையில் ஒரு ஈரப்பதமுள்ள ஊடகத்தில் 2-3 நாட்கள் முதல் பல மாதங்கள் வரை அடைகாக்கும் முறை ஆகும். அடைகாக்கும் காலம். விதையின் இயல்பு மற்றும் விதைத்தூக்கத்தின் வகையைப் பொருத்து மாறுபடும். (எ.கா) செர்ரி மற்றும் ஆயில் பாம் விதைகள். வெப்பநிலைப்படுத்துதல் வளர் சிதை மாற்றப் பொருட்களை (தடைப் பொருட்கள்) கசியச் செய்தல் விதைகளை நீரில் 3 நாட்கள் ஊறவைக்கவேண்டும். நீரை 15 மணிக்கொரு முறை மாற்றவேண்டும். அப்படி செய்வது விதைகள் நொதித்தலை தடுக்கும். விதைகளை ஓடும் நீரில் ஒரு நாள் ஊற வைப்பதும் தடைகளை நீக்கும். (எ.கா) கொத்தமல்லி (கெளமாாரின்), சூரியகாந்தி (ஹைட்ரோ சைனிக் அமிலம்). வெப்பநிலை நேர்த்திகள் குளிர் மற்றும் மலைப் பிரதேசப் பயிர்களின் விதைளை மிக் குறைந்த குளிர்ந்த நிலையில் வைப்பது விதைத் தூக்கத்தை முறிக்கும். அதிக வெப்பநிலை நேர்த்திகள் மாற்று வெப்பநிலை நேர்த்திகள் மிதவெப்ப மண்டல மற்றும் வறண்ட நிலப் பயிர்களின் விதைகள் மிகவும் கடினமாக இருப்பதால் நீர் உறிஞ்சும் சக்தி இல்லாமல் இருக்கும். இவற்றின் விதைத் தூக்கத்தை முறியடிக்க நெருப்பு போன்ற வெப்பநிலை தேவைப்படும். ஒளி மற்றும் பைட்டோக்ரோம் முளைப்புத் திறன் செயல்பாட்டிற்கு ஊக்கிகள் தடைகள் ஆகியவை சமநிலையில் இருக்கவேண்டும்.
பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மூலம் விதை நேர்த்தி தடுப்பான்கள் மூலம் ஊட்பறு விதைத்தூக்கத்தை முறிப்பதற்கு வளர்ச்சி ஊக்கிகள் குறைந்த அளவில் பயன்படும். ஜிப்பெரிஸிக அமிலம், சைட்டோகைனின் மற்றும் கைனடின் போன்றவை அமிலம் “ஒளிக்கு” பதில் பயன்படுத்துவது ஆகும். KNO3 2 சதவீதம் ஒளி தேவைப்படும். விதைகளுக்கு பயன்படுத்தலாம். (எ.கா) ஓட்ஸ், வால் கோதுமை மற்றும் தக்காளி. தையோ யூரியாவை ஒளி மற்றும் குளிர்ந்த வெப்பநிலை தேவைப்படும் விதைகளுக்கு பயன்படுத்தலாம். எ.கா லெட்ரூஸ் 10-30 மோலார் என்ற அளவில் உபயோகிக்கவேண்டும். எத்ரர் பருத்தி விதையின் தூக்கத்தை தையோ யூரியா, ஹைட்ராக்னில் அமைன், நைட்ரிக் அமிலம் மற்றும் நைட்ரேட் போன்றவை விதைத் தூக்கத்தை முறிக்க பயன்படுத்தலாம். சப்ஹைட்ரல் சேர்மங்களான 2 மெர்காப்டோ எத்தனால் மற்றும் 2,3 – மெர்காப்டோ எத்தனால் போன்றவை உபயோகிக்கலாம். ஸ்ட்ரைக்கால் (ஸ்ட்ரைக்கா என்ற ஒட்டுண்ணியின் கசிவு ) என்ற செடியின் கசிவை உபயோகிக்கலாம். அகச்சிவப்பு கதிர்வீச்சு நேர்த்தி விதைகளின் மேல் அகச்சிவப்பு கதிர் வீச்சை செலுத்தி விதைத் தூக்கத்தை முறிக்கலாம். அழுத்தல் நேர்த்தி ஆவியில் தேவையான அழுத்தம் கொடுத்து வேக வைத்து விதைத்தூக்கத்தை முறிக்கலாம். காந்த முறை விதை நேர்த்தி விதைகளை காந்தப் புலன்களில் 1-10 நாட்கள் வரை வைத்திருந்து தூக்கத்தை முறிக்கலாம். விதை மாற்று வீதம் விதை மாற்று வீதம் என்பது மொத்த நடவு செய்த பகுதியில் வயல் சேமிப்பு விதை அல்லாமல் சான்று / தரமான விதைக் கொண்டு விதைத்த பகுதியின் சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் பயிர்களில் விதை மாற்று வீதம் (2004-2005)
தற்போது நிலையிலுள்ள மற்றும் முற்போத்தல் வி.மா.வீ
33 இரகங்களுக்கு மற்றும் 100 சதவீத் - வீரிய இரகங்களுக்கு நிலக்கடலையின் குறைந்த விதை மாற்று வீதம் விவசாயிகள் விதைக்கான பயிர்களை தக்க வைத்திருப்பதோ (அ) பின்வரும் விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொண்டதையோ குறிக்கும். இந்த விதைகள் தரம் குறைந்தவை அல்ல. விவசாயிகளுக்க இடையில் ஏற்படும் விதைப் பரிமாற்றம் கூட புதிய இரகங்கள் பரவுவதற்கு ஏதுவாகும். அரசு கடைப்பிடிக்கும் குறைந்த வி.மா.வீதத்தை மேற்கூறிய அட்டவணையின் படி அதிகப்படுத்துவதனால் விதை உற்பத்தி பகுதிகளிலிருந்து புதிய இரகங்கள் மற்றும் வீரிய இரகங்கள் பரவும். பொதுத் துறையை பாரக்கும் போது, என்எஸ்சி, எஸ்எப்சி மற்றும் மாநில விதைக் கழகம் ஆகியவை தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்கிறது. அரசுக்கு சொந்தமான விதை நிலங்கள் மற்றும் விவசாயிகளின் விதை நிலங்கள் உடன்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகள் வேளாள் விரிவாகக் மையங்களின் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. விதைப் பெருக்கத் திட்டமானது வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் கீழ் மாநில விதை உற்பத்தி நிலையங்களில் இயக்கப்படுகிறது. இது போன்ற நிலையங்களில் விதை உற்பத்தி செய்வதில் உள்ள நடைமுறை இடர்பாடுகள் தான் இப்போதைய விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய தரமான விதைகள் பற்றாக்குறைக்கு காரணமாகும்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செம்மை நெல் சாகுபடி |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சந்தை நிலவரம் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | விவசாயிகளின் கூட்டமைப்பு | புகைப்படங்கள் | செய்தி பலகை | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||