Seed Certification
சிறப்பு விதை நேர்த்தி
ரைசோபிய விதைநேர்த்தி

வேளாண் குடிமக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ரைசோபியம் என்ற நுண்ணுயிர் காற்றில் இருக்கும். தழைச்சத்தை சேகரித்து நிலத்தை வளப்படுத்தி பயிர்களுக்கு நன்மை வகிக்கின்றது. இந்த ரைசோபியம் நுண்ணுயிர் பெரும்பாலும் பயறுவகைச் செடிகளுடைய வேர்முடிச்சுகளில் தான் அதிகம் காணப்படுகிறது.பயறு வகை பயிரிடாத நிலத்திலும் ரைசோபிய நுண்ணுயிர்கள் குறைவான அளவில் இருக்கும். தொடர்ந்து பயறு வகைகள் பயிரிட்டு வரும் நிலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். ஆனால் மண்ணில் இடப்படும் பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகள் நிலத்தில் நச்சுத் தன்மையை உண்டாக்கி நிலத்தில் ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை கணிசமாக குறைக்கிறது. ஆகவே பயறு வகைகளை விதைக்கும் போது சோதனைக் கூடத்தில் பெருக்கப்பட்ட ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்த ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை நிலத்தில் அதிகமாக்கி அதிக தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்த நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதுடன் நல்ல விளைச்சலையும் பெறலாம்.
தேவையான பொருட்கள்

  • ரைசோபிய நுண்ணுயிர் உரம்
  • பயறு வகை விதைகள்
  • விதை நேர்த்தி செய்யத் தேவையான பாத்திரம் மற்றும் குளிர்ந்த 10 சத மைதா கஞ்சி (அல்லது) அரிசி கஞ்சி
  • அந்தந்த பயிறு வகைகளுக்குரிய நுண்ணுயிர் ராசிகள்
செய்முறை
  • ஒரு ஏக்கருக்கு தேவையான தேவையான 10 கிலோ சான்று விதைகளை ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • விதை நேர்த்திக்கு ஒரு ஏக்கருக்கு  ஒரு பாக்கெட் அல்லது 200 கிராம் ரைசோபிய உயிர் உரம் தேவைப்படும்.
  • 10 சதவீத மைதா கஞ்சியை தயார் செய்து, 10 கிலோ விதைக்கு 1 லிட்டர் கஞ்சி கொட்டு அனைத்து விதைகளும் ஒட்டும் தன்மை உடையதாக இருக்குமாறு நன்கு கலக்க வேண்டும் பின்பு தேவையான உயிர் உரங்களை (ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசடோபேக்டர்) விதைகளின் மேல் தூவி தொடர்ந்து கலக்க வேண்டும்.
  • மைதா கலந்த விதைகளை உயிர் உரத்துடன் கலக்கும்போது மைதாவின் ஒட்டும் தன்மையினால், ஒரேமாதிரியான விதை மூலாம் கிடைக்கிறது.
  • விதைகளை நிழலில் உலர்த்தி உடனடியாக விதைப்புக்கு பயன்படுத்தலாம்.

பரிந்துரை:
ஒரு கிலோ விதைகளுடன் 10 சதவீத மைதா கஞ்சி அல்லது 200லிருந்து 300 மில்லி கஞ்சியுடன் 1 கிலோ விதைக்கு 200 லிருந்து 300 கிராம் உயிர் உரத்தை கலப்பதனால் வயலில் பச்சைப்பயிறு, உளுந்து, பருத்தி, தக்காளி மற்றும் கத்தரி ஆகியவற்றின் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது.

நன்மைகள்

  • உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் மண்ணின் வளத்தை அதிகப்படுத்தலாம்.
  • விதைகளை விதைக் கருவிகள் கொண்டு விதைக்க ஏதுவாகிறது.
  • ஒத்த விதை அளவு மற்றும் அமைப்புடைய விதைகளைப் பெறமுடியும் மற்றும் விதையைக் கையாளும் முறை எளிதாகின்றது.
  • விதை கருவி கொண்டு விதைகளைப் பிரிக்கும்போது விதைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் எளிதாக பிரிக்க உதவுகின்றது.
  • சிறிய மற்றும் வேறுபட்ட உருவ அமைப்புடைய விதைகளை உயிர் உரம் கொண்டுவிதை மூலாம் பூசும் போது அதனைக் கையாளும் முறை எளிதாகின்றது.
  • மிகச்சிறிய விதைகளைக் கூட இதன் மூலம் துல்லியமான முறையில் விதைத்து உரிய பயிரின் அளவை பெறமுடியும்.
  • விதை மூலாம் பூசுவதால் விதையின் எடை அதிகமாவதோடு தூவுதல் விதைப்பு ஏதுவாக அமைகின்றது.
  • சிறிய விதைகளைக் கையாளும் முறை எளிதாவதுடன் விதை அளவும் குறைக்கப்படுகின்றது.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam