Seed Certification
விதை நேர்த்தி :: விதை மேலாண்மை
வறட்சியை தாங்க விதையை கடினப்படுத்துதல்

விதை கடினப்படுத்துதல் என்பது கட்டுபடுத்தபட்ட நீரேற்றம் மூலம் விதையை வறட்சியை தாங்கி வளரும் நிலைக்கு உட்படுத்துவது.

செய்முறை

  • விதைகளை தேவையான நீர் அல்லது இரசாயனக் கரைசலில் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு விதைகளை எடுத்து நிழலில் ஊறவைத்து பழைய ஈரப்பததிற்கு திரும்ப கொண்டு வர வேண்டும்.
  • ஒவ்வொரு பயிருக்கும் விதைக் கடினப்படுத்துதலின் தொழில்நுட்பம் வேறுபடுகின்றது.

பயிர்

இரசாயனப் மற்றும் அளவு

செய்முறை

கம்பு 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு 20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். ஒரு கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம் ஊறவைத்து பிறகு பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப பெற வேண்டும்.
சோளம் 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு 20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.  பிறகு 1 கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து முடிவில் பழைய ஈரப்பதத்திற்கே விதைகளை கொணர வேண்டும்.
பருத்தி 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு 20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
சூரியகாந்தி 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு 20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். ஒரு கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம் ஊறவைத்து பிறகு பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப பெற வேண்டும்.
உளுந்து மற்றும் பச்சை பயறு 100 ppm துத்தநாக சல்பேட்
100 ppm மாங்கனீசுசல்பேட்
1000 மில்லி கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 350 மி.லி உப்புக் கரைசலில் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
கேழ்வரகு 0.2 சதவீதம் சோடியம் குளோரைடு 2 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 700 மி.லி உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
நிலக்கடலை 0.5 சதவீதம் கால்சியம் குளோரைடு 5 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 300 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
துவரை 100 ppm துத்தநாக சல்பேட் 1 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 300 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
கொண்டைக் கடலை 1 சதவீதம் பொட்டாசியம் டை ஹைட்ரசன் பாஸ்பேட் 10 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 350 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர வேண்டும்.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam