வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்
நிலத்தேர்வு
- விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றியப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும்.
- அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகமோ அல்லது வீரிய ஒட்டு இரகப் பயிரோ பயிரிடப்பட்டிருக்கக் கூடாது
பயிர் விலகு தூரம்
- பயிரிடப்படும் வீரிய ஒட்டு இரகம், பிற நெல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்
- பயிரிடப்படும் வீரிய ஒட்டு இரகம், பிற நெல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களிலிருந்து 25 நாட்கள் கால இடைவெளி விட்டும் விதைக்கலாம்.
- பயிரிடப்படும் வீரிய ஒட்டு இரகம், பிற நெல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களிலிருந்து 30 மீட்டர் தாவர தடுப்பான் அல்லது 2 மீ உயர பிளாஸ்டிக் தாள் கொண்டும் ஒரு இரக வீரிய ஒட்டு இரகப் பயிரை மற்ற பயிரிலிருந்து விலக்கி வைக்கலாம்
|
நிலத்தேர்வு |
நாற்றங்கால் பராமரிப்பு:விதைப்புக் காலம் (மேற்கு மண்டலம்)
-ஏக கால பூப்பிற்கான மாறுபட்ட விதைப்பு மேலாண்மை
- கோ ஆர் எச் 3: டிசம்பர்-ஜனவரி மற்றும் கோ ஆர் எச் 3:மே-ஜீன்
- கோ ஆர் எச் 4:நவம்பர்-டிசம்பர்
கோ ஆர் எச் 3 |
கோ ஆர் எச் 4 |
|
நாற்றங்காலில் உர மேம்பாடு
- நெல் நாற்றங்காலில் நாற்றுக்களை பறிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 2 கிலோ டை அம்மோனியம் பாஸ்பேட் உரத்தை இடவும்.
- இதனால் நாற்றுக்கள் சுலபமாக பறிக்க முடிவதுடன் வாளிப்பான நாற்றுக்களையும் பெறலாம்.
நடவு வயல் பராமரிப்பு :ஆண் பெண் நடவு விகிதம்
- ஆண், பெண் பயிரை 2:8 அல்லது 2:10 என்ற விகிதத்தில் நடவு செய்யலாம்.
எல்லை வரிசை
- ஒட்டு இரக விதைப் பயிரினை சுற்றி 4 வரிசை ஆண் இரகத்தை பயிரிடுதல் வேண்டும்.
|
|
சதுர நடவு |
நடப்பட்ட இளநாற்று |
இடைவெளி
- பெண் பயிர்களில் பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளியும், ஆண் பயிர்களில் பயிருக்குப் பயிர் 30 செ.மீ. இடைவெளியும், ஆண் மற்றும் பெண் பயிர்களுக்கு இடையில் 20 செ.மீ. இடைவெளியும், விட்டு நடவு செய்தல் வேண்டும்.
நடவு முறை
- இரு இணை வரிசையாக ஒரு குத்திற்கு 2 முதல் 3 நாற்றுக்கள் வீதம் நடவு செய்தல் வேண்டும்.
உரமிடுதல்
- தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை ஒரு ஹெக்டேருக்கு 50:60:60 கிலோ என்ற அளவில் அடியுரமாகவும். பின் தூர் கட்டும் பருவத்தில் 50 கிலோ தழையுரத்தையும், குருத்து விடும் பருவத்தில் 50 கிலோ தழையுரத்தையும் மேலுரமாக இடவேண்டும்.
|
இலைவழி உரம் தெளித்தல்
- கதிர் குருத்து மாறுபடும் பருவத்தில் 2 சத டை அம்மோனியம் பாஸ்பேட் கரைசலை விதைத் தெளிப்பான் கொண்டு தெளித்தல் வேண்டும்.
கதிர் வெளிவருதல்
- கதிர்கள் நன்கு வெளிவர ஜிப்ரலிக் அமிலத்தை ஒரு ஹெக்டேருக்கு 45-60 கிராம் என்ற அளவில் தெளித்தல் வேண்டும். (ஜிப்ரலிக் அமிலத்தை 70 சத ஆல்கஹாலில் கரைக்க வேண்டும்).
- ஜிப்ரலிக் அமிலத்தில், 40 சதவிகித அளவினை 5 முதல் 10 சத குருத்து வெளி வரும் பருவத்தில் தெளித்தல் வேண்டும்.
- மீதமுள்ள 60 சதவிகித ஜிப்ரலிக் அமிலத்தை முதல் தெளிப்பிற்கு பின் 24 மணி நேரம் கழித்துத் தெளித்தல் வேண்டும்
|
இலைவழி உரம் தெளித்தல் |
கூடுதல் மகரந்தச் சேர்க்கைக்கான வழிமுறைகள்
- கதிரிலிருந்து 30-40 சத பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் போது பயிர்களுக்கு இடையே கயிறு இழுத்தல் அல்லது மூங்கில் குச்சி கொண்டு ஆண் பயிரை லேசாகத் தட்டி விடுதல் வேண்டும். இதைப் பூக்கும் பருவத்தில், (7 முதல் 10 நாட்களுக்குப்) பகல் நேரத்தில் 3 முதல் 4 முறை 30 நிமிட இடைவெளியில், செய்தல் வேண்டும்.
அறுவடை
- ஆண் பயிரினை முதலில் அறுவடை செய்து வயலிலிருந்து அகற்ற வேண்டும். பின் பெண் விதைப் பயிரை வீரிய ஒட்டு இரக விதைக்காக அறுவடை செய்தல் வேண்டும்.
|
அறுவடை
|
விதைச் சுத்திகரிப்பு
- விதைகளை 1.3 மி.மீ. ×19 மி.மீ. விட்டம் கொண்ட நீள் வட்ட சல்லடைகளைக் கொண்டு சலித்து எடுத்தல் வேண்டும்.
உலர்த்துதல்
- விதைகளை 12 முதல் 13 சத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்.
பிற மேலாண்மை முறைகள்
- இரக விதை உற்பத்தி முறையினையே பின்பற்றலாம்
|
தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
|