நிலத்தேர்வு
- விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும், அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
- விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அது இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 200 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
|
![](images/sorghum/Landprepration.png) |
நிலத்தேர்வு |
![](../../cereals and millets/tamil cereals and millets/booting.jpg) |
![](../../cereals and millets/tamil cereals and millets/growing stage.png) |
![](../../cereals and millets/tamil cereals and millets/Screenshot_2.png) |
கதிர் துவக்கம் |
பூக்கும் நிலை |
கதிர் |
விதைப்பு முன் விதை நேர்த்தி
- இரண்டு சத பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில், 10 பங்கு விதைகளுக்கு 6 பங்கு கரைசல் என்ற விகிதத்தில் 16 மணி நேரம் ஊற வைத்து பின்பு 8 -9 சத ஈரத்தன்மைக்கு உலர்த்த வேண்டும்.(அல்லது)
- திரம் அல்லது கார்பென்டாசிம் பூஞ்சாணக் கொல்லியினை ஒரு கிலோவிற்கு 2 கிராம் என்ற அளவில் 5 மி.லி.தண்ணீருடன் கலந்து ஈரக்கலவையாக விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.
- நிலக்கரி சுரங்க மண்ணில் நல்ல முளைப்புத் திறன் பெற விதைகளை 2 சதவிகிதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் 6 மணி நேரம் கடினப்படுத்தி பனி ஊதா நிற பாலிமர் (ஒரு கிலோவிற்கு 3 கிராம்)+ கார்பென்டசிம் (ஒரு கிலோவிற்கு 2 கிராம்) +இமிடாகுாளபிரிட் (ஒரு கிலோவிற்கு 1 மில்லி) + டை அம்மூனியம் பாஸ்டே் (ஒரு கிலோவிற்கு 30 கிராம்)+ நுண்ணூட்ட கலவை (ஒரு கிலோவிற்கு 20 கிராம்) + அசோஸ்பைரில்லம்( ஒரு கிலோவிற்கு 40 கிராம்) கலந்து விதை நேர்த்தி செய்தல் வேண்டும்
|
பருவம்
- ஜீன்-ஜீலை மற்றும் அக்டோபர்-நவம்பர்
உரமிடுதல்
- தழை, மணி சாம்பல் சத்தை ஒரு ஹெக்டேருக்கு 100:50:50 கிலோ என்ற அளவில் அடியுரமாக இடுதல் வேண்டும்
பயிர் இடைவெளி
|
![](fertlizer.png) |
உரமிடல் |
விதைகளின் வினையியல் முதிர்ச்சி
- கதிர்களில் 50சத பூக்கள் பூத்த 40-45 நாட்களில் விதைகள் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன்
அறுவடைக்கு முன் விதைப் பாதுகாப்பு
- அறுவடை செய்வதற்க்கு 10 நாட்களுக்கு முன் கரும் பூஞ்சாணத் தாக்குதலுக்கு எதிராக 2 சத கார்பென்டாசிம் பூஞ்சாணக் கொல்லி கரைசலைத் தெளித்தல் வேண்டும்.
அறுவடை
- விதைகள் சோள விதைக்குரிய மஞ்சள் நிறம் கொண்டதாக மாறும் போது கதிர்களை ஒரே முறையில் அறுடை செய்தல் வேண்டும்
|
![](images/sorghum/sorghum harvesting.png) |
முதிர்ந்த நிலை |
விதைச் சுத்திகரிப்பு
- விதைகளை 9/64”(3.6 மி.மீ.) அல்லது 10/64”(4.0 மி.மீ) கண் அளவு கொண்ட வட்ட வடிவ சல்லடை கொண்டு தரம் பிரிக்க வேண்டும்
விதை நேர்த்தி
- விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் மருந்தினை 5 மிலி நீரில் கலந்து நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும். (அல்லது)
- விதைகளை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை உலர் கலவையாகக் (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை) கலந்து வைக்க வேண்டும்
|
விதைச் சேமிப்பு
- விதைகளின் இருப்பதத்தினை 10 முதல் 12 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
- விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
- விதையின் ஈரப்பதத்தினை 8 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் அடர்த்தி கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்காக சேமித்து வைக்கலாம்
இடைக்கால விதை நேர்த்தி
- விதை முளைப்புத் திறன், விதைச் சான்று அளிப்புக்கு தேவையான குறைந்த பட்ச முளைப்புத் திறனை விட 5-10 சதம் குறையும் போது விதைகளை 3.6 கிராம் டைசோடியம் பாஸ்பேட்டை 100 லிட்டர் நீரில் கரைத்த கரைசலில் ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல் என்ற அளவில் 6 மணி நேரம் ஊற வைத்துப் பின் 8 சத ஈரப்பதம் வரும் வரை உலர்த்த வேண்டும்
|
தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
|