நார் பயிர்கள் : வீரிய ஒட்டு பருத்தி விதை உற்பத்தி |
||||
விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு வீரிய ஒட்டு இரக பருத்தி உற்பத்தி செய்ய, முன் பருவத்தில் வேறு இரக பருத்தி பயிர் செய்யப்படாத நிலமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் தானாக முளைத்த செடிகளால் ஏற்படும் இனக்கலப்பைத் தடுக்கலாம். நிலம் நல்ல வடிகால் வசதி உடையதும், நல்ல சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். பயிர் விலகு தூரம் ஆதார நிலை மற்றும் சான்று நிலை வீரிய ஒட்டு இரக பருத்தி விதை உற்பத்திக்கு முறையே 50 மற்றும் 30 மீட்டர் பயிர் விலகு தூரம் வேண்டும். வீரிய ஒட்டு இரகம் பூக்கும் பருவம் முதல் காய்கள் முதிர்ச்சி அடையும் காலம் வரை 30 மீட்டர் தூரத்திற்குள் வேறு பருத்தி இரகங்களும் பூக்கும் பருவத்தில் இருக்கலாகாது. விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் பிப்ரவரி- ஜூலை மற்றும் ஆகஸ்ட்- செப்டம்பர் பெண் விதை - 2.00 கிலோ / ஹெக்டேர் ஆண் : 60 X 45 / 90 X 60 செ.மீ உரமிடல் அடிஉரம்- 120 : 60 :50 NPK கிலோ/ எக்டர் இலைவழி உரமிடுதல்
கலவன் அகற்றுதல் ஆண் மற்றும் பெண் இரகங்கள் இரண்டிலும், கலவன்களை சுத்தமாக ஆரம்பத்திலிருந்தே நீக்கி விட வேண்டும். விதைக்காக பயிரிடப்பட்ட பருத்தியில் அந்தக் குறிப்பிட்ட இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகின்ற செடிகளையும், களைகளையும் மற்றும் நோய்வாய்ப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்பே நீக்குதல் மூலம் இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை நீங்களும் உற்பத்தி செய்ய முடியும். முக்கிய தொழில் நுட்பங்கள்
|
||||
நுனியரும்பு கிள்ளுதல் செடியின் வளரும் நுனியினை கிள்ளி விடவும் அல்லது 100 பிபிஎம் மலிக் ஹைட்ரோக்சைடு கரைசலை 90 மற்றும் 105 நாட்களில் தெளிக்கவும். அறுவடை
காயில் இருந்து விதையைப் பிரித்தெடுத்தல் நிறம் மாறிய, கொட்டுப்பருத்தி, நன்றாக விரியாத பருத்தி, நோய் மற்றும் பூஞ்சாணம் தாக்கிய காய்களை நீக்கி விட வேண்டும். இவ்வாறு பிரித்தெடுத்த பின் நிழலில் உலர்த்த வேண்டும். விதையின் தூய்மையை மேம்படுத்த அயல் மகரந்த சேர்க்கை செய்த காய்களை தனிமைபடுத்தி அதன் விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
|
||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016. | ||||