|
|
|
எள் வயல் தோற்றம் |
எள் பூ |
எள் சூலகம் |
நிலத்தேர்வு
- விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும்.
- அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது.
- அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
- விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து (வயலைச் சுற்றி) 50 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
|
நிலத்தேர்வு |
உரமிடுதல்
- தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை ஒரு ஹெக்டேருக்கு 50:25:25 கிலோ மற்றும் 5 கிலோ மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும்.
இலைவழி உரம் தெளித்தல்
- பூக்கள் பூக்கத் தொடங்கும் பருவத்தில் ஒரு சதம் டிஏபி கரைசலைத் தெளிக்க வேண்டும். மீண்டும் பத்து நாள் இடைவெளியில் இரண்டாவது தெளிப்பினைத் தெளித்தல் வேண்டும்
|
உரமிடுதல் |
அறுவடை
- செடியில் 75-80 சதம் காய்கள் மஞ்சள் நிறமாக மாறி, அடிக்காய்கள் வெடிக்கத் தொடங்கும் போது அறுவடை செய்ய வேண்டும்.
- இந்த நிலையில், காயின் ஈரப்பதம் 50-60 சதத்திலும் விதையின் ஈரப்பதம் 25-30 சதத்திலும் இருக்கும்.
- விதைகள் பழுப்பு நிறமாக மாறி இருக்கும்.
- அறுவடை செய்தபின், செடிகளை தலைகீழாக 3-4 நாட்களுக்கு வைக்க வேண்டும்.
விதைகளைப் பிரித்தெடுத்தல்
- செடிகளை வளையக் கூடிய தன்மையுள்ள மூங்கில் கழியினால் அடித்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம்
|
அறுவடை |
விதைச் சுத்திகரிப்பு
- நல்ல தரமான, விதைகளைப் பெறுவதற்கு 4/64”(1.6 மி.மீ) வட்ட கண் அளவு கொண்ட சல்லடைக் கொண்டு சலித்தல் வேண்டும்.
உலர வைத்தல்
- விதைகளை 7-8 சத ஈரப்பதம் வரும் வரையில் நன்கு உலர்த்த வேண்டும்.
|
எள் விதை |
விதை நேர்த்தி
- காய்ந்த விதைகளை கார்பென்டசிம் மருந்து கொண்டு ஒரு கிலோ விதைக்கு 2 கி என்ற அளவில் 5 மி.லி. தண்ணீர் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைச் சேமிப்பு
- விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 4தமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
- விதைகளின் ஈரப்பதத்தினை 6 முதல் 7 சதமாகக் குறைத்து பின் பாலித்தீன் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய /இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
- விதையின் ஈரப்பதத்தினை 5 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால ( 15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்காக சேமித்து வைக்கலாம்
|
தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
|