நிலத்தேர்வு
- விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும்.
- அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது.
- அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
- போரான் மற்றும் கால்சியம் நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள நிலங்களைத் தேர்வு செய்தல் கூடாது. ஏனெனில், இந்நிலங்களில், ஒரு விதை காய்களும், முளை கருத்த விதைகளும் அதிகம் உற்பத்தியாகும்
|
நிலத்தேர்வு |
பயிர் விலகு தூரம்
- விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 3 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
.பருவம்
- ஜீன்-ஜீலை மற்றும் டிசம்பர்-ஜனவரி்.
பயிர் இடைவெளி
|
இலை வழித் தெளிப்பு |
விதைப்பிற்கு முன் விதை மேலாண்மை
- நோய் தாக்காத, தரமான காய்களிலிருந்து விதைகளைத் தேர்வு செய்தல் வேண்டும்.
- சுருங்கிய மற்றும் வடிவம் மாறிய விதைகளை நீக்கி விடவேண்டும்.
- விதைகளை கடினப்படுத்தி முளைகட்டி விதைப்பதால் வயல் வெளியில் செடிகளின் எண்ணிக்கையைப் பராமரிக்க இயலும்.
- விதைகளைக் கடினப்படுத்த தேர்வு செய்யப்பட்ட விதைகளை 0.5 சதவீதம் கால்சியம் குளோரைடு கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு பாதி அளவு கரைசல்) 6 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான சாக்குப் பைகளுக்கு இடையில் 12-18 மணி நேரம் வைக்க வேண்டும்.
- பிறகு 2 மணி நேர இடைவெளியில் முளைவிட்ட விதைகளை பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும்
- விதைகளை 3 சதவிகிதம் ஸ்பெண்டவாஸ் (கிடைக்கும் இடங்களில் மட்டும்) கரைசலில் (ஒரு கிலோ விதைகளுக்கு அரை பங்கு கரைசல்) 2 மணி நேரம் ஊற வைத்தல்.
|
உரமிடுதல்
- தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை, ஒரு ஹெக்டேருக்கு 40:40:60 கிலோ என்ற அளவில் அடியுரமாக இட வேண்டும்.
- தேவைக்கு ஏற்ப 10 கிலோ பேராக்ஸினையும் அடி உரமாக இடுதல் வேண்டும்.
- காய் உருவாகும் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 200 கிலோ என்றளவில் ஜிப்சம் இடுதல்.
அறுவடை முன் தெளிப்பு(காய்கள் முனைவிடுதலை தடுக்க)
- விதைத்த 60 நாட்களுக்குப் பின் பாலி ஹைட்டிரசைடு கரைசலை 1250 பிபிஎம் என்ற அளவில் தெளித்தல்
|
அறுவடை
- காயின் உள்புறத் தோல் கருமையாக மாறும் போது அறுவடை செய்ய வேண்டும்.
- காய்களின் ஈரப்பதம் அறுவடையின் போது 35-40 சதவீதமாக இருத்தல் வேண்டும்.
- நிறம் மாறிய காய்களை நீக்கி விட வேண்டும்.
- இனத்தூய்மையைப் பாதுகாக்க இரகங்களின் குணாதிசயங்களைக் கொண்டு காய்களைப் பகுத்தாய்தல் வேண்டும்.
உலர்த்துதல்
- காய்களை 8-9 சதவீத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்.
|
|
அறுவடை |
காய்களை உடைத்தல்
- பதினாறு சத ஈரப்பதத்திற்கு உலர்த்தப்பட்ட காய்களே நன்கு உடைபடும். விதைக்காய் உடைப்பான் இயந்திரம் கொண்டோ, கைகளினாலோ காய்களை உடைத்து விதைகளைப் பிரித்து எடுக்கலாம்.
விதைநேர்த்தி
- விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் மருந்தினை 5 மிலி நீரில் கலந்து விதை நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.
|
காய்களை உடைத்தல் |
விதைச்சேமிப்பு
- காய்களை 30 கிலோவிற்கு 250 கிராம் என்ற அளவில் கால்சியம் குளோரைடு உப்பை சாக்குப் பைகளில் அல்லது பிளாஸ்டிக் கலன்களில் வைத்து சேமிக்கலாம்.
- காய்களின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் சாக்குப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
- விதைகளின் ஈரப்பதத்தினை 5 முதல் 8 சதமாகக் குறைத்து பின் பாலித்தீன் உள் உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய /இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
- காய்களில் ஈரப்பதத்தினை 5 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் அடர்த்தி கொண்ட பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்கும் சேமித்து வைக்கலாம்.
|
விதை தேர்ந்தெடுத்தல் |
தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
|