Seed Certification
விதை சுத்திகரிப்பு :: சுத்திகரிப்பு சாதனங்கள்
சுத்தகரிப்பு சாதனங்கள்

தூய்மைப்படுத்துதல் மற்றும் தரம் பிரித்தல்

புற அமைப்பின் வேறுபாடுகளைக் கொண்டு பலதரப்பட்ட விதைகளை பிரித்தெடுக்கலாம். புற அமைப்பின் தன்மைகளான விதைகளின் அளவு, எடை, நீளம், அமைப்பு, நிறம், மேல்பரப்பில் நய அமைப்பு, நீர்ம ஈர்ப்பு, மின் கடத்தும் திறன் போன்ற வேறுபாடுகளைக் கொண்டு பலதரப்பட்ட விதைகளை பிரித்தெடுக்கலாம்.கீழ்க்கண்ட வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புற அமைப்பின் தன்மைகள் மற்றும்் அதற்கு ஏற்ற கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரிப்பான் பெயர் பின்பற்றிய தன்மை பயன்பாடு
அதிர்வு பிரிப்பான் வடிவம் மற்றும் மேல்புற இளநயம் களை விதைகள் நீக்குதல்
சுழல் பிரிப்பான் வடிவம் (அ) சுழலும் திறன் அளவு சிதைந்த / பட்டையான மற்றும் சுருங்கிய விதைகளை நல்ல விதைகளில் பிரித்தல், கடுகு, சோயாபீன்ஸ், பட்டாணி போன்றவற்றை கோதுமை, ஆள்விதை, ஓட்ஸ் போன்றவற்றிலிருந்து பிரித்து எடுத்தல்.
தட்டு / பக்க விலக்கு கலன் பிரிப்பான் நீளம் கோதுமை, கம்பு, கடுகு, வால் கோதுமை போன்ற வேறுபட்ட விதைகளை ஓட்ஸ் சில் இருந்து பிரித்து எடுத்தல்
நிலை மின்னோட்ட பிரிப்பான் மின் தன்மை எள் விதையிலிருந்து ஜான்ஸன் புல் விதை
மின்னணு நிறம் பிரிப்பான் நிறம் / வெளிர்ந்த நிறம் ஒத்த நிறமில்லாத விதைகளை பிரித்து எடுத்தல்.
காந்தப் பிரிப்பான் மேல்புற இனநயம் மற்றும் ஒட்டுதல் குதிரை மசால் மற்றும் Clover ஆகியவற்றிலிருந்து களை விதைகள் பிரித்து எடுத்தல்
உருளை ஆலை வடிவம் மற்றும் மேல்புற இளநயம் மிருதுவான Clover விதைகளை பிரித்தெடுத்தல்
ஒப்பு அடர்த்தி பிரிப்பான் (அ) கல் நீக்குவான் அடர்த்தி (அ) ஒப்பு அடர்த்தி மோசமாக சிதைந்த, வீண் போன், பூச்சி தாக்குதலுக்கு உள்ளான பயிர் விதைகள் மற்றும் கற்களை நல்ல விதையிலிருந்து நீக்குதல்.

மேலும் விபரங்களுக்கு கீழ்கண்டவற்றை கிளிக் செய்யவும்

  1. தரம் மேம்படுத்துதல் & ஒப்பு அடர்த்தி பிரிப்பான்
  2. பக்க விலக்கு கலன் பிரிப்பான் & காந்தப் பிரிப்பான்
  3. நிறம் பிரிப்பான்
  4. உராய்வு தூய்மை, சுழல் பிரிப்பான் & மிதவை பிரிப்பான்
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam