விதை சுத்திகரிப்பு :: சுத்திகரிப்பு சாதனங்கள் |
|
சுத்திகரிப்பு சாதனங்கள் உராய்வு தூய்மை காற்றுத் திரைக் கருவியானது நல்ல விதைகளை போன்றே அளவும், அடர்த்தியும் கொண்ட நிராகரிக்கப்பட்ட விதைகளை பிரிக்க இயலாது. அவைகளின் மேல்புற நய அமைப்பில் வேறுபாடு இருந்தால் உராய்வு தன்மையின் மூலம் பிரிக்கலாம். எந்த ஒரு பொருளும் ஒரு சரிவான பகுதியின் மேல் உருண்டோ (அ) சாய்ந்தோ செல்லும் போது அப்பொருளின் நய அமைப்பைப் பொறுத்து உராய்வு ஏற்படும். விதைகளை ஒரு வெல்வெட் துணியின் மேல் (அ) இரப்பர் வாரின் மேல் வேறுபட்ட சரிவில் செலுத்தும் போது தேவையற்ற குப்பைகள் அதன் மேல் வேறுபட்ட உராய்வுத் தன்மையால் விதைகளில் இருந்து பிரிந்துவிடும். இரப்பர் வார் தொடர்ந்து மேல் நோக்கி செல்வதால் குப்பைகளைப் பிரித்து விடும். அப்பொழுது, விதைகள் சரிவின் கீழ் வந்து சேகரித்துக் கொள்ளும். சுழல் பிரிப்பான் விதைகளை அவற்றின் வடிவம் மற்றும் உருளும் திறனைக் கொண்டு பிரிக்கின்றது. இக்கருவி இதனில் சுழல் வடிவ நடுநிலை அச்சினைச் சுற்றி உலோகத் தாள் கீற்றுகள் பொருத்தப்பட்டிருக்கும். இக்கருவி செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும். திறந்த வெளித் திருகு சுமைக் கொண்டு செல்லும் கருவி போல இருக்கும். உள்புற சுழல் வழியே விதைகளை அனுப்பவேண்டும். உருண்ட விதைகள் சரிவின் வேகமாகவும் தட்டையான மற்றும் கோணல் வடிவமுள்ள விதைகள் மெதுவாகவும் சரிந்துசெல்லும. விதைகளின் வேகத்தைப் பொருத்து அவை உருளும் கோளப்பாதை அதிகரித்து, உள் சுழலில் இருந்து வெளிச் சுழலுக்கு விதைகள் வந்து சேரும். வேகம் குறைந்த விதைகள் உள்புறச் சூழலில் இருந்து வெளிச் சூழலுக்கு விதைகள் வந்து சேரும். வேகம் குறைந்த விதைகள் உள்புறச்சூழலில் சேகரிக்கப்பட்டுவிடும்.
மிதவை பிரிப்பான் மிதவை தன்மையானது முழுமையடைந்த மற்றும் முழுமையடையாத விதைகளின் அடர்த்திக் கொண்டு மாறுபடும். இவ்விரு விதைகளின் இடைப்பட்ட அடர்த்திக் கொண்ட திரவம் பயன்படுத்தப்படும். அந்தத் திரவத்தின் ஒப்பு அடர்த்தியைக் கொண்டு, முழுமையான விதைகள், மூழ்கிவிடும், ஆனால் முழுமையடையாத விதைகள் மிதக்கும். |
|
Updated On: Jan, 2016 | |
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016. | |