கொண்டைக் கடலை - தரமான விதை உற்பத்தி முறைகள்
நிலத்தேர்வு
- விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
- விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றிலும் 5 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
|
|
நிலத் தேர்வு |
|
|
|
வயல்வெளித் தோற்றம் |
பூக்கும் நிலை |
காய் உருவாதல் |
விதைப்பு முன் விதை நேர்த்தி
- விதைகளை 1 சதவீத பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில், ஒரு பங்கு கரைசலில் 3 பங்கு விதை என்ற அளவில் 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்துப் பின் நிழலில் உலர்த்தி விதைகளை விதைப்பிற்குப் பயன்படுத்துதல் வேண்டும்.
- பயறு வண்டு தாக்கிய விதைகளை விதைப்பிற்குப் பயன்படுத்துதல் கூடாது
அறுவடை
- விதைகள் பூத்த 35-40 நாட்களுக்குள் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன்.
- பயிரில் 70 முதல் 80 சத காய்கள் பழுப்பு நிறம் அடைந்தவுடன் பயிரினை அறுவடை செய்யலாம்
|
முதிர்ந்த நிலை |
விதைச் சுத்திகரிப்பு
- விதைகள் இரகங்களுக்கு ஏற்றவாறு 13/64”(5.3மி.மீ) அல்லது 68/64”(7.2 மி.மி) வட்ட கண் அளவு கொண்ட சல்லடைகளைக் கொண்டு சலித்து நல் விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.
- விதைகளை 8 முதல் 10 சத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்.
விதை நேர்த்தி
- விதைகளை திரம் அல்லது கார்பென்டசிம் மருந்தினை ஒரு கிலோவிற்கு 2 கிராம் என்ற அளவில் 5 மி.லி.தண்ணீருடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். (அல்லது)
- விதைகளுடன் ஹாலோஜன் கலவையை (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை) ஒரு கிலோவிற்கு 3 கிராம் என்ற அளவில் கலந்தும் விதை நேர்த்தி செய்யலாம்.
|
விதைச்சேமிப்பு
- விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
- விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
- விதையின் ஈரப்பதத்தினை 8 சதவிதத்திற்கும் குவைாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்கும் சேமித்து வைக்கலாம்
|
|