Seed Certification
கொள்ளு
நிலத்தேர்வு
  • விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்ருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
  • விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 10 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
நிலத் தேர்வு

தழைப் பருவம் பூக்கும் நிலை காய் உருவாதல்

பருவம்
  • அக்டோபர் –நவம்பர்
விதைப்பு முன் விதை நேர்த்தி
  • விதைகளை ஒரு கிலோவிற்கு 2 கிராம் என்ற அளவில் கேப்டான் பூஞ்சாண் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.

பயிர் மேலாண்மை

  • பயிர் வெளிறிய காணப்பட்டால் ஒரு லிட்டர் நீருக்கு 6 கிராம் என்ற அளவில் மக்னீசயம் குளோரைடு கரைசலை விசைத் தெளிப்பான் மூலம் 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும்


அறுவடை
  • வினையியல் முதிர்ச்சி அடைந்த விதைகளைக் கொண்ட காய்கள் மஞ்சள் கலந்த மரப்பட்டை நிறத்தினைக் கொண்டு இருக்கும். 70 முதல் 80 சத காய்கள் முற்றியவுடன் பயிரை அறுவடை செய்தல் வேண்டும்.
  • சரியான நேரத்தில் காய்களை அறுவடை செய்தல் வேண்டும். முதிர்ந்த காய்கள் மழை அல்லது அதிக ஈரப்பதம் கொண்ட சீதோஷ்ண நிலையில் விடப்படும் போது காய்களின் நிறம் அடர் மரப்பட்டை அல்லது கருப்பு நிறமாக மாறும். இதனால் விதையின் தரம் பாதிக்கப்படும்.
விதைச் சுத்திகரிப்பு
  • விதைகளை 8/64”(3.2மி.மீ) வட்ட கண் அளவு கொண்ட சல்லடைகளைக் கொண்டு சலித்து தரம் பிரிக்க வேண்டும்.
  • நிறம் மாறிய விதைகள் குறைந்த சேமிப்புத் திறனைக் கொண்டு இருக்கும்

காய் முதிர்ந்த நிலை

விதைச் சேமிப்பு

  • புதிய விதைகள் 50 முதல் 55 சதம் வரை கடினத்தன்மை கொண்டு இருக்கும். ஆனால் 2 மாத சேமிப்பில் கடினத்தன்மை 4 முதல் 6 சதமாகக் குறைந்து விடும்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணி பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 7 முதல் 8 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்த வைக்கலாம்.
  • விதையின் ஈரப்பதத்தினை 7 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்கும் சேமித்து வைக்கலாம்

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021.

Fodder Cholam