Seed Certification
அவரை

அவரை - தரமான விதை உற்பத்தி முறைகள்

நிலத்தேர்வு
  • விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
  • விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்த வயலைச் சுற்றி 5 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.

நிலத் தேர்வு

தழைப் பருவம் பூக்கும் நிலை காய் உருவாதல்

அறுவடை முன் விதைப் பாதுகாப்பு
  • காய்களை அறுவடை செய்யும் முன் (5-10 நாட்கள்) 0.07 சத மாலத்தியான அல்லது 0.07 சத எண்டோசல்பான் மருந்தினை இலைவழியே தெளித்தல் வேண்டும். இதனால் சேமிப்பில் பயிறு வண்டின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
  • காய்கள் வைக்கோலின் நிறத்தை அடையும் போது அறுவடை செய்தல் வேண்டும்.
  • செடியின் நுனியில் காணப்படும் முற்றாத காய்களையும், நோய் தாக்கிய காய்களையும் விதைக்காக எடுத்துக் கொள்ளுதல் கூடாது
  • விதைகளின் நிறம் அறுவடையின் போது சாக்லெட் நிறம் கொண்டதாக இருத்தல் வேண்டும் அல்லது இரகத்திற்கேற்ற நிறம்  கொண்டதாக இருத்தல் வேண்டும்

காய்களைப் பிரித்தல்
  • காய்களை 15 முதல் 18 சத ஈரப்பதத்திற்கு உலர வைத்து காய்களிலிருந்து விதைகளை, வளையும் மூங்கில் குச்சி கொண்டு அடித்தும், பயிறு வகைக் காய்களிலிருந்து விதைகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களின் மூலமாகவோ பிரித்து எடுக்கலாம்.
விதைச் சுத்திகரிப்பு
  • விதைகளை 18/64”(7.2மி.மீ) வட்ட கண் அளவு கொண்ட சல்லடை கொண்டு சலித்து தரம் பிரித்தல் வேண்டும்.
  • உடைந்த, நிறம் மாறிய, பூச்சி தாக்கிய மற்றும் பிஞ்சு விதைகளை விதைக் குவியிலிருந்து நீக்க வேண்டும்
விதை உலர்த்துதல்
  • விதைகளை 7-8 சத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்.

முதிர்ந்த விதைகள்

விதைநேர்த்தி

  • விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் மருந்தினை 5மிலி நீரில் கலந்து பின் நிழலில் உலர்த்த வேண்டும். (அல்லது).
  • விதைகளை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை) உலர் கலவையாகக் கலந்து வைக்க வேண்டும். (அல்லது).
  • விதை மற்றும் தானிய சேமிப்பு முறையாக விதைகளை ஊக்குவிக்கப்பட்ட களிமண், நொச்சி, அரப்பு இலைப்பொடிகள், பூச்சிக்காய் மற்றும் சீயக்காய் பொடிகள் (ஒரு கிலோவிற்கு 10 கிராம்) வேப்பெண்ணெய், நிலக்கடலை எண்ணெய் (ஒரு கிலோவிற்கு 10 மில்லி) போன்ற ஏதாவது ஒன்றுடன் கலந்து சேமிக்கலாம்.

விதைச் சேமிப்பு

  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதையின் ஈரப்பதத்தினை 8 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பறிகும் சேமித்து வைக்கலாம்

 


தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021.