Seed Certification
விதை கிராமத் திட்டம்
விதை கிராமம்

விதை சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்துதல்:

அறுவடைக்கு பின் விதைகளை கையாலுவது முக்கியமானதாகும், மற்றும் தரமுள்ள விதை இரகங்கள் சந்தைகளில் உபயோகிக்கக் கூடியதாகும். இந்த விதைகளை நன் முறையில் கையாலாவிட்டால், கூட்டு முயற்சி அனைத்தும் விணாகும். அதனால் விதை சுத்திகரிப்பு மற்றும் பெட்டியிலிடுதல் ஆகியவை விதை உற்பத்திக்கு முக்கியமானவையாகும். விதை சுத்திகரிப்பு மையங்கள் அடிப்படை வசதியுடன் இருக்க வேண்டும். இந்த இடங்களில் போக்குவரத்து வசதியுடையதாக இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு விதை சுத்தகரிப்பு மையங்களுக்கான உள்கட்டமைப்புகள்.

  • விதை தோட்டம் மற்றும் சுத்தப்படுத்தும் கருவி
  • பை தைக்கும் கருவி, பொருள் எடுத்து செல்லும் வண்டி, அளவுகோள் மற்றும் அறைகலன்
  • வீட்டு உபயோகிக்கும் கருவிகளுக்கான கட்டமைப்பு
  • விதை சேமிப்பு கட்டமைப்பு
  • விதை கதிரடித்தல் மற்றும் உலர்த்தும் களம்
  • தகவல் மையம்
விதை தேவை, சந்தை நிலவரம், வேளாண் சந்தை அட்டவனை, வானிலை முன் அறிவிப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகிய அனைத்து தகவல்கள் இணையதளம் வழியாக தெரிந்துக் கொள்ளும் படியாக தகவல் மையம் இருக்க வேண்டும்.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam