Seed Certification
தக்காளி :
தரமான தக்காளி விதை உற்பத்தி முறைகள்

பருவம்

நவம்பர் - மார்ச்; ஜூன் - ஜூலை

விதையளவு

300 கிராம் / ஹெக்டர்

விதை நேர்த்தி

  • 1000 பிபிஎம் ஜெலட்டின் அல்லது  2% KNO3 அல்லது 200 பிபிஎம் சாலிசிலிக் அமிலம் (12 மணி இரட்டை மடங்கு திரவத்தில் ஊற வைத்தல்) அதை தொடர்ந்து கார்பென்டாசிம் பூச்சு (2 கிராம் / கிலோ) + இமிடகுளோப்ரிட் (6 ஜி / கிலோ) + பாலிமர் (20 கிராம் விதை வலுவூட்டல் / கிலோ விதை தண்ணீர் 40 மில்லி) (அல்லது)
  • வெள்ளை சிகப்பு பூச்சு (6 கிராம் / விதைகிலோ) + சூடோமோனாஸ் (10 கிராம் / கிலோ) புளூரசன்ஸ், டிரைக்கோடெர்மாவிரிடி (4 கிராம் / கிலோ) + டிஏபி (4 கிராம் / கிலோ) + நுண்ணூட்டக்கலவையை (20 கிராம் / கிலோ) கொண்டு பூச்சு. (அல்லது)
  • 50 சதவீதம் தேங்காய்தண்ணீரை கொண்டு 12 மணி நேரம் விதைகளை ஊறவைக்கவும்.


நாற்றங்கால் சிகிச்சை

  • 15 நாட்கள் விதைப்பதற்கு முன் நாற்றங்காலை மீடம் சோடியதால் (28 மிலி / சதுரமீட்டர்) நனைக்கவேண்டும் (VYAPAM) .
  • காப்பர்ஆக்ஸிகுளோரைட் 2.5 கிராம் / லிட்டர் குலை நோய்கள் மற்றும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும்

நாற்று வயது

25 - 30 நாட்கள்

பயிர் இடைவெளி

கோ 1: 60 X 60 செ.மீ.
பிகேஎம் 1: 75 X 60 செ.மீ.
கோ 2: 80 X 75 செ.மீ.
பூசா ரூபி: 80 X 70 செ.மீ.
கோ 3: 60 x 30 செமீ


உரங்கள்

  • அடியுரம்: தொழுஉரம் - 25 டன் / எக்டர்
  • பரிந்துரைக்கப்படும் மொத்த உர அளவு-  100 கிலோ தழை சத்து: 75 கிலோ மணி சத்து: 100 கிலோ சாம்பல் சத்து/ எக்டர்
  • மேலுரம்: பூக்கும் பருவத்தில் 75 கிலோ தழைச்சத்து

இலைவழித் தெளிப்பு

  • நடவுசெய்த 65 -75  நாட்களில் நாப்தலின் அசிடிக் அமிலத்தை 20 பிபிஎம் என்ற விகிதத்தில் தெளிக்கும் போது காய் பிடிப்பு அதிகரிக்கும்



அறுவடை

  • பூ மலர்ந்த நாளிலிருந்து 30 முதல் 35 நாட்களில் விதை முதிர்ச்சிஅடைகிறது.
  • முழுமையாக பழுத்த, முதிர்ச்சியடைந்த, சிவப்பு நிறமுள்ள மற்றும் ஆரோக்கியமான பழங்களை மட்டும் அறுவடை செய்யவேண்டும்.

விதை பிரித்தெடுத்தல்

  • நன்கு முதிர்ச்சியடைந்த பழங்கள் நசுக்கி கூழ் செய்யது 25 முதல் 30 மில்லி ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை ஒரு கிலோ கூழுடன் சேர்க்க வேண்டும்
  • 30 நிமிடம் கழித்து விதைகளை 3 முதல் 4 முறை கழுவி பின் நிழலில் உலர்த்த வேண்டும்
  • பின்பு விதைகளை மிதமான வெயிலில் காய வைத்து வியின் ஈர பதத்தை 7-8 சதத்திற்கு கொண்டு வர வேண்டும்

 


Harvesting Seed extraction

தரம்பிரித்தல்

 பிஎஸ்எஸ் 12 X 12 கம்பிவலை (2.1 மிமீ) சல்லடைகளை கொண்டு விதைகள் தரம்பிரிக்கபடவேண்டும்.

விதை மகசூல்

150 கிலோ  விதை/ எக்டர்

விதை சேமிப்பு

7 லிருந்து 8 சதவீத ஈரப்பதத்திற்கு உலர்திய விதைகளைக் கார்பென்டாசிம் 50% WP (2 கிராம் / கிலோவிதை) அல்லது ஹலோஜனைக் கொண்டு நேர்த்தி செய்யலாம். இவ்வாறு நேர்த்தி செய்த விதைகளை 12 மாதம் வரை அலுமினியம் பைகளின் வைத்து சேமிக்கலாம்.


தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam