சான்றிப்பிற்குத் தேவையான பயிர்ரகங்களின் தகுதிகள்
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் இரகங்களில் மட்டுமே சான்றுவிதை உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு ரகங்களைப் பற்றிய தகவல்களை பெற அருகில் உள்ள விதைச் சான்று உதவி இயக்குநர் மற்றும் விதை சான்று அலுவலர்களை அணுகவும்.
விதை இருப்பு:
விவசாயி மற்றும் விதை உற்பத்தியாளர் தமக்குத் தேவையான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வல்லுநர் விதையைப் பெறுவதற்கு இந்திய விதை குழுவையும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரகங்களைப் பெறுவதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினையும் விதைச் சான்று அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். |