விதைச்சான்று :: அங்ககச் சான்றளிப்பு |
|
அங்ககச் சான்றளிப்பு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன வேளாண்மையால் மண்ணில் வாழும் நுண்ணுயிர் மட்டுமின்றி மண்ணின் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேளாண் உற்பத்தி குறைந்து விவசாயிகள் கடனாளியாக ஆக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. நவீன விவசாயம் நமது மண், நீர் மற்றும் காற்று ஆகியவற்றையும் மாசுபடுத்தி மக்களின் சுகாதாரமான சூழ்நிலையையும் பெரிய அளவில் பாதித்துவிட்டது. நவீன வேளாண்மையின் பாதிப்பினால் “அங்கக வேளாண்” முறைகளை விவசாயிகள் மட்டுமின்றி உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் மத்தியல் வரவேற்பு அதிகரித்துள்ளது. அங்கக வேளாண் உற்பத்தி முறையினால் மட்டுமே சுகாதாரமான, சுவையான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு மற்றும் வளமான மண், மாசற்ற நிலம், நீர், காற்று ஆகியவற்றை உருவாக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அங்கக உற்பத்திப் பொருட்களுக்கு உள்நாட்டு சந்தையில் மட்டுமின்றி வெளிநாட்டு சந்தையிலும் அதிக தேவை இருப்பதால் வேளாண் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க வழிவகை உண்டு. ஆ) அங்ககச் சான்றளிப்பு கட்டண விபரம் சான்றிதழ் பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்திற்கான பதிவு கட்டணம் முறையே ரூ .25 மற்றும் ரூ .5, 000, 000 தொடர்புக்கு விதைச் சான்றிதழ் இயக்குநரகம், |
|
Updated on: Feb, 2016 | |
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016. | |