விதை சேமிப்பு :: கொள்கலன்கள் |
|
விதைச்சேமிப்பு கொள்கலன்கள் சேமிப்பு முறைகள் சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் சேமித்தல் ஈரப்பத கட்டுப்பாட்டில் உலர் சேமிப்பு மென்தோல் விதைகளைக் குறைந்த ஈரப்பதம் (48 சதவிகிதம்) மற்றும் அடைக்கப்பட்ட கொள்கலனில் (அ) ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட அறையில் சேமித்தால் அவற்றின் வீரியம் நீண்ட காலம் குறையாமல் இருக்கும். சமன்படுத்தப்பட்ட சுற்றுப்புற ஈரப்பதத்தில் சேமிப்பதைக் காட்டிலும் இம்முறை சிறந்ததாகும். குளிர் நிலை மேலும் சாதகமானது ஆகும். ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டில் உலர் சேமிப்பு விதைக்கும் காலவறை அதிகமுள்ள மென்தோல் பயிர் விதைகளுக்கு இம்முறை பயனளிக்கும். இவ்விதைகள் அதிக அளவிலான காடு வளர்ப்பு திட்டங்களுக்கு உபயோகப்படுகின்றன. 4-8 சதவிகிதம் ஈரப்பதம் மற்றும் 0.5 டிகிரி செ வெப்பநிலையில் சேமிப்பது விதைகளின் வீரியம் 5 வருடங்கள் மற்றும் அதற்கும் மேலாக பராமரிக்கப்படுகின்றது. நீண்டகால மரபணு பாதுகாப்பிற்கான உலர் சேமிப்பு மென்தோல் விதைகளின் மரபணு பாதுகாவலுக்கு தேவையான வெப்பம் -18 டிகிரி வெப்பநிலையில் மற்றும் ஈரப்பதம் 5-11 சதவிகிதம் ஆகும். வெப்பம் மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தாத ஈரநிலை சேமிப்பு கடிதோல் விதைகளை குளிர் காலத்தில் சில மாதங்கள் சேமிக்க இம்முறை உகந்ததாகும். விதைகளை தளத்தில் குவியல்களாகவும், ஆழம் குறைந்த குழிகளிலும், நல்ல வடிகால் வசதியுடைய மண்களிலும் (அ) காற்றோட்ட வசதியுள்ள கிடங்குகளிலும், சேமிக்கலாம். அவற்றின் மேல் இலைகள், ஈரமண், மக்கு (அ) காற்றடைவெளி பொருட்கள் கொண்டு மூடாக்குகள் போடவேண்டும். ஈரப்பத சேமிப்பின் போது ஏற்படுமட் அதிக சுவாச அளவினால் உண்டாகும் வெப்பத்தை குறைப்பதற்கு, குளிர்ந்த ஈரப்பதம் மற்றும் காற்றோட்ட வசதியை இம்முறையில் பயன்படுத்தப்படுகிறது. குவியல்களை அடிக்கடி கிளறி விடுதல் வெப்பம் உண்டாவதைத் தடுக்கும். வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட ஈரநிலை சேமிப்பு மிகக்குறைந்த வெப்பநிலையான உறைவு நிலைக்கு அதிகமாகவோ (அ) குறைவாகவோ விதைகளை சேமிப்பது இம்முறையாகும். ஈரமான ஊடகம் எ.கா மணல், மக்கு அல்லது இவற்றின் கலவையை விதைகளில் கலந்து (1:1 விதை மற்றும் ஊடகம்) வைப்பதன் மூலம் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்படும். குளிர்நிலைப் பயிர்களின் தடித்தோல் விதைகளுக்கு இம்முறை பொருந்தும்.
உறைவுநிலை சேமிப்பு விதைகளை திரவ நைட்ரஜனில் -196 டிகிரி செ வெப்பநிலையில் சேமித்தல் வேண்டும். எளிமையாக கையாளுவதற்கும் பாதுகாப்பிற்கும். விதைகள் வாயு நிலையில் உள்ள திரவ நைட்ரஜனில் -150 டிகிரி செ வெப்பநிலையில் உறையவைக்கவேண்டும். இந்த உறை நிலையில் அனைத்து வளர்சிதை மாற்ற நிகழ்வுகளும் செயலற்ற நிலையை அடைந்து விடும். உயிரணுக்கள் அனைத்தும் திரவ நைட்ரஜனில் இருந்து எடுத்து பின் உறைநிலையை அகற்றும் வரையில் மாறாத நிலைமையில் இருக்கும். இந்நிலையில் வினையியல் நிகழ்வுகள் குறைந்த அளவில் நடைப்பெற்று விதையின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தும். வணிக ரீதியாக விதைச்சேமிப்பிற்கு இம்முறை சாத்தியமற்றதாக இருந்தாலும், சிறப்புமிக்க விதைக்கருவூல சேமிப்பிற்கு மிகவும் பொருத்தமானதாகும். சேமிப்புக் கொள்கலன்கள் ஈரம் புகும் அடைப்பான் (எ.கா) பருத்தி பைகள், காகித அட்டைப்பெட்டிகள், அட்டைப்பெட்டிகள்.
ஈரம் புகா அடைப்பான் மென்தோல் விதைகளை தேவைப்படும் ஈரப்பதத்திற்கு உலர்த்திய பின்னர், விதைகளை அடைக்கப்பட்ட ஈரம் புகா அடைப்பான்களில் சேமிக்கலாம். இப்படிச் செய்வது விதைகளில் ஈரப்பதம் அதிகரிக்கும் தேவையைக் குறைக்கிறது. ஈரம் புகா அடைப்பான்களைக் குறைந்த வெப்பநிலையில் சேமிப்பது நீண்ட காலச் சேமிப்பிற்கு உதவும். இம்முறையில் ஆக்ஸிஜன் வாயுவை காலச் சேமிப்பிற்கு உதவும். இம்முறையில் ஆக்சிஜன் வாயுவை தடுக்கும் நிலை ஏற்படுத்தப்படுகிறது. தடித்தோல் விதைகளுக்கு இம்முறை பொருந்தாது.
ஈரம் தடுக்கும் அடைப்பான்
விதைச் சேமிப்பின் சுகாதாரம் / கிடங்கின் சுகாதாரம்
சேமிக்கும் பொழுது விதையின் வீரியம் கட்டுப்பாடு
பேராசிரிய மற்றும் தலைவர் விதை மையம் தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோயமுத்தூர்-641003. தொலைபேசி எண்:0422-661232. மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in |
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015. | |