சுகாதாரம் : விதைக்கிடங்கின் பராமரிப்பு வழிகள்
- கிடங்கு தூய்மையாகவும், உலர்வாகவும் இருக்கவேண்டும்.
- விதைப் பைகளை நேரிடையாக தரையில் இருக்கக்கூடாது. மரப்பலகைகளின் மேல்தான் அடுக்கவேண்டும்.
- அடுக்கும் உயரம் 6-8 பைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
- வெவ்வேறு விதைக் குவியல்களை தனித்தனியே வைக்கவேண்டும். மாலத்தியான் 50 இசி (11300 இராசயனம் : நீர்) 5 லிட்டர் சதுர மீட்டர் (அ) 0.25 சதவிகிதம் நுவான் 1 லிட்டர் 100 கனசதுர மீட்டர் என்ற அளவில் கிடங்கில் தெளிக்கவேண்டும்.
- வாரத்திற்கு வாரம் இரசாயனங்களை மாற்றி தெளித்தல் நல்ல பலனைத்தரும்.
- விதைக் குவியல்களை அலுமினியம் பாஸ்பைட் @ 3 கிராம் / கன சதுர மீட்டர் செலுத்தவேண்டும். இது வருமுன் காக்கும் நடவடிக்கையாகவோ (அ) சிறிய அளவில் தாக்கியுள்ள பூச்சிகளுக்கோ பொருந்தும்.
- மாதத்திற்கு ஒர முறை விதைத் தரத்தை ஆய்வு செய்யவேண்டும்.
- விதை ஆய்வு முடிவுகளின் படி, ஈரப்பதத்தை நீக்கச் சூரிய ஒளியில விதைகளை உலர்த்த வேண்டும். அப்படிச்செய்வது கிருமி மற்றும் பூச்சித் தாக்குதலை நீக்கும்.
- விதை ஆய்வு முடிவுகளின் படி, ஈரப்பதத்தை நீக்கச் சூரிய ஒளியில் விதைகளை உலர்த்த வேண்டும். அப்படி செய்வது கிருமி மற்றும் பூச்சித் தாக்குதலை நீக்கும்.
- தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு புதிய விதைக் குவியல்களை பழையனவற்றிலிருந்து தள்ளி வைக்கவேண்டும்.
- பூஞ்சாணக் கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லியின் பிணைப்பு (எ.கா) திரம் 2 கிராம் / கிலோ + கார்பரில் 200 மிகி / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- ஒவ்வோர் விதைக் குவியல்களையும் மேற்பார்வையிடுதல் அவசியம்.
- மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காற்றோட்ட வசதியை அதிகரிக்கப் பைகளை மீண்டும் மாற்றி அடுக்கவேண்டும்.
- சாக்குப் பைகளுக்கு பதிலாக நெய்யப்பட்ட பாலித்தீன் பைகளை உபயோகிப்பது விதைகளின் வாழ்நாளை அதிகரிக்கும்.
- பூச்சிக்கொல்லிகள், பூஞ்சாணக் கொல்லிகள், உரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவை ஆகியவற்றை விதைகளுடன் சேமிக்கக்கூடாது.
- ஒவ்வொரு குவியலுக்கும் குறியீடு செய்து தகுந்த ஆவணங்களை பராமரிக்கவேண்டும்.
- சிறிய அளவிலான ஒரு ஏக்கர் (அ) ஒரு எக்டர் விதை பைகள் சேமிப்து சுலபமாக கையாள்வதற்கும், மேற்பார்வையிடுதலுக்கும் வசதியாக இருக்கும்.
|