த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மீலியா துபியா (Melia dubia)- தொழில்துறை மரம் |
பயன்கள்
மரங்கள் பேக்கிங் பெட்டிகள், சிகார் பெட்டிகள், பலகைகள், விவசாயக் கருவிகள், பென்சில்கள், நெருப்புப்பெட்டிகள் மற்றும் கட்டுமரம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
இம்மரம் இசைக்கருவிகள் , தேயிலை பெட்டிகள் மற்றும் ஓட்டு பலகை செய்ய ஏற்றது.
இது ஒரு நல்ல எரிபொருள் மரமாக உள்ளது (கலோரிக் மதிப்பு: 3,400 - 4,100 கலோரி)
இம்மரத்தின் பழங்கள் கசப்பாக இருக்கும்.
சந்தை மற்றும் வர்த்தகம்
மரத்தினை தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
குறைந்தபட்சம் 20 அங்குல சுற்றளவு அளவு கொண்ட ஒட்டு பலகை ரூ 7500/ டன்.
மர கூழ் மற்றும் ஒட்டு பலகை தொழிற்சலைகளில் இம்மரத்தின் தேவை அதிகமாக உள்ளது. |
|