முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள் |
|||||||
வானிலை |
|||||||
தேனீ வளர்ப்பு சாதனங்கள் 1. தேனீப் பொட்டிகள் தேனீ வளர்ப்பிற்கு வேண்டிய மிக முக்கியமான சாதனம் தேனீப் பெட்டிகளாகும். அடுக்குத் தேனீக்களை மட்டுமே செயற்கை முறையில் மரச் சட்டங்களுள்ள பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். ஒவ்வொரு மரச்சட்டத்திலும், ஒரு மேல் கட்டை, ஒரு அடிக் கட்டையுடன் இரண்டு பக்கக் கட்டைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டியினுள் தரப்படும் இந்த மரச்சட்டங்களில் தேனீக்கள் அடுக்கடுக்காக அடைகளைக் கட்டுகின்றன. ஒவ்வொரு ஆடையும் மரச் சட்டத்துடன் தனித்து வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. மரச் சட்டங்களுக்கு இடையேயும் சுற்றிலும் போதிய இடைவெளி தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் தேனீக்கள் அடையில் அமர்ந்து வசதியாகத் தங்கள் பணிகளைச் செய்ய முடியும். இந்த இடைவெளி தேனீ இடைவெளி எனப்படும். இந்தச் சந்து மிகச் சிறிதாக இருப்பதால் தேனீக்கள் இதில் அடை கட்டுவதில்லை. பெரிதாக இருப்பதால் தேன் பிசின் கொண்டு மூடுவதுமில்லை. தேனீப் பெட்டிகளை வடிவமைக்கும் பொழுது, சரியான தேனீ இடைவெளி கிடைக்கும் வண்ணம் பெட்டியும் மரச் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். பெட்டிகள் மற்றும் சட்டங்களின் அளவுகள் ஒரு நூல் அளவு கூடக் கூடவும் விடாது, குறையவும் விடாது. தேனீ இடைவெளி கூடுதலாக இருக்கும் பொழுது தேனீக்கள் அடைகளை ஒழுங்காகக் கட்டாது. தேவையற்ற உதிரி அடைகளையும் இணைப்பு அடைகளையும் கட்டும். மேலும் சட்டங்களைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும். அதனால் பெட்டியை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்களை கொட்ட நேரிடும். இத்தகைய அடைகளில் சேமிக்கப்பட்ட தேன் மெழுகும் வீணாகின்றது. தேனீக்களின் இனத்திற்கு ஏற்பவும் தேனீக்கு உணவு கிடைக்கும் அளவைப் பொறுத்தும் தேனீப் பெட்டிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். பொதுவாக உருவில் சிறிய ……………………………………………சட்டங்கள் கொண்ட பி.ஐ.எ.ஸ் பெட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் நியூட்டன் பெட்டியை விடச் சிறிய பெட்டிகளில் இந்தியத் தேனீக்கள் சிறப்பாக வளர்க்கப்படுகின்றன. இப்பெட்டிகள் மார்த்தாண்டம் பெட்டிகள் எனப்படும். அளவில் சிறியதாக இருப்பதால் இப்பெட்டிகளைத் தேன் சேகரிப்பிற்காகப் பல இடங்களுக்கும் நெடுந்தொலைவு எளிதாக எடுத்துச் செய்ய இயலும். இப்பெட்டியில் புழு அறையில் ஆறு சட்டங்கள் இருக்கும். குறைவான மதுர வரத்துள்ள இடங்களுக்கும் ஏற்றது. இப்பெட்டி எளிய வடிவமைப்பும் குறைவான விலையும் உள்ளதால் தேனீ வளர்ப்பிற்கு அதிக அளவு தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றது. தேனீப் பெட்டிகள் நன்கு விளைந்த மரப்பலகைகள் கொண்டு செய்யப்பட வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில் தான் தேனீக்களால் சீரான வெப்ப நிலையைப் பராமரிக்க இயலும். பச்சை மரப் பலகைகள் கொண்டு தேனீப் பெட்டிகள் செய்தால் நாளடைவில் பெட்டியின் பாகங்கள் வளையும். அதனால் பெட்டியில் தேனீக்களும் அவற்றின் எதிரிகளும் புகுந்து செல்லப் பல நுழைவு வழிகள் உண்டாக்கும். மேலும் மழைத் தண்ணீர் பெட்டிக்குள் புக நேரிடும். தேனீக்களால் தங்களைத் தங்கள் எதிரிகளிடமிருந்து சரிவரத் தற்காத்துக் கொள்ள இயலாது. பெட்டிகளில் வெடிப்புகள் பிறவுகள் இல்லாமல் இருத்தல் அவசியம். மரம் அல்லது இரும்பாலான தாங்கிகளைப் பயன்படுத்தலாம். தாங்கிகளின் கால்கள் எறும்புகள் ஏறாமல் தடுப்பதற்காக நீருள்ள கிண்ணத்துள் இருக்க வேண்டும். தேனீபு் பெட்டியின் பாகங்கள் புழு அறை தேன் அறை உள் மூடி அல்லது சிகைப் பலகை மேல் மூடி அல்லது கூரை 2. அடை அஸ்திவாரத் தாள் அடை அஸ்திவாரத் தாள் தேன் மெழுகிலாலான அறுகோணப் பதிவுகளுடன் கூடிய மெழுகுத் தாள் ஆகும். அப்பதிவுகளின் மேல் தேனீக்கள் பணித் தேனீ வளர்ப்பு அறைச் சுவர்களை இருபுறமும் கட்டுகின்றன. இந்த அடை அஸ்திவாரத் தாளை சட்டங்களின் மேல் கட்டையின் உட் பகுதியில் பொருத்த வேண்டும். அடை அஸ்திவாரத் தாள் மீது அடை கட்டப்படும் பொழுது
3. தடுப்புப் பலகை தடுப்புப் பலகை மரத்தினாலான பலகை. இதனை அடைச்சட்டங்களுடன் புழு வளர்ப்பு அறையில் தொங்க விடலாம். வலுக் குன்றிய கூட்டங்களில் உள்ள காலி அடைகளை நீக்கிய பின்னர், இறுதி அடையை ஒட்டி இத்தடுப்புப் பலகையை வைக்க வேண்டும். இதனால் தேனீக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புழு அறையில் கொள்ளளவு குறைக்கப்படுகின்றது. அவ்வாறு இப்பலகையை ஒரு நகரும் சுவராகப் பயன்படுத்தலாம். மேலும் கூட்டின் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் தேனீக் கூட்டங்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கவும் இப்பலகை உதவுகிறது. 4. பணித் தேனீ நீக்கும் பலகை பணித் தேனீ நீக்கும் பலகை மரத்தாலான ஒரு பலகை. அதன் நடுவே ஒரு வழிப்பாதை ஒன்று உள்ளது. இதனைப் புழு அறைக்கும் தேன் அறைக்கும் நடுவே வைக்க வேண்டும். இரவு வேளையில் தேன் அறையில் உள்ள பணித் தேனீக்கள் இப்பலகையில் உள்ள ஒரு வழிப்பாதை மூலம் புழு அறைக்கு வந்து விடும். அவ்வாறு வந்த பணித் தேனீக்கள் மீண்டும் தேன் அறைக்குள் செல்ல இயலாது. எனவே இப்பலகை தேன் அறையிலிருந்து பணித் தேனீக்களை விரட்டப் பயன்படுகின்றது. 5. ராணித் தேனீ நீக்கி ராணித் தேனீ நீக்கி சீராகத் துளையிடப்பட்ட நாகத் தகட்டால் ஆனது. ராணித் தேனீ பணித் தேனீக்களை விட உருவில் பெரிதாக இருப்பதால் இந்நீக்கியில் உள்ள வழியே ராணித் தேனீயால் நுழைய இயலாது. இந்நீக்கியை புழு அறைக்கும் தேன் அறைக்கும் இடையில் வைக்க வேண்டும். இதனால் ராணித் தேனீ தேன் அறைக்குச் சென்று முட்டை வைப்பது தவிர்க்கப்படுகின்றது. ஆகவே தூய்மையான தேன் பெறவும் வழி பிறக்கின்றது. 6. வாயில் தகடுவாயில் தகடு சீராகத் துறையிடப்பட்ட ஒரு நாகத் தகடு ஆகும். இத்தகட்டை நுழைவு வழி முன் வைக்க வேண்டும். இந்த தகட்டில் உள்ள துறை அளவு சிறியதாக இருப்பதால் ராணித் தேனீயால் கூட்டை விட்டு வெளியேற முடியாது. இத்தகடு புதிதாகப் பிடித்த தேனீக் கூட்டத்திலிருந்து ராணி தப்பிச் செல்வதைச் தடுக்கவும் கூட்டம் பிரிவதைத் தடுக்கவும் உதவுகின்றது. 7. ஆண் தேனீப் பொறிஆண் தேனீப் பொறி ஒரு மரத்தாலான காடியுடன் கூடிய கட்டை ஆகும். இப்பொறியை நுழைவு வழி முன் வைக்கும் பொழுது நுழைவுப் பாதையின் அளவு குறைக்கப்படுகின்றது. இதனால் பெட்டியை விட்டு வெளியே பறந்து சென்ற ஆண் தேனீக்கள் மீண்டும் உள்ளே வர இயலாது. ஆனால் பணித் தேனீக்கள் எளிதாக இப்பொறி வழியே சென்று வந்து தங்களின் பணிகளைச் செய்ய முடியும். 8. முகவலைமுகவலை கருப்பு நிற நைலான் கொசு வலையினால் ஆனது. தொப்பியுடன் கூடிய இதனைத் தலையில் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணியும் பொழுது முகத்திற்கும் திரைக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும். இதனை அணிவதால் தேனீக்கள் முகத்தில் கொட்டுவதும் தவிர்க்கப்படுகின்றது. 9. கையுறைகையுறை காடாத் துணி அல்லது மெல்லிய ரப்பர் அல்லது தோலினாலானது. புதிதாகத் தேனீ வளர்ப்பைத் துவக்கியவர்கள் தேனீக்களை முறையாக கையாள தெரிந்து கொள்ளும் வரை, கைகளில் தேனீக்கள் கொட்டி விடாமல் இருப்பதற்காக இதனை அணிந்து கொள்ளலாம். 10. புகைக் குழல்புகைக் குழல் மிகவும் அவசியமான ஒரு கருவி. புனல் வடிவிலான மூடியுடன் கூடிய ஒரு டப்பாவினுள் சாக்குத்தூள், காகிதச் சுருள், மரப்பட்டைத் துண்டுகள், தேங்காய் நார், காய்ந்த இலை போன்றவற்றை இட்டு எடுக்கும் புகை உண்டாகின்றது. இப்புகை டப்பாவின் அடியில் இணைக்கப்பட்டுள்ள துருத்தியை அழுத்தும்பொழுது மூடியில் உள்ள துவாரம் வழியே வெளிப்படுகின்றது. புகை தேனீக்களிடம் ஒரு வித பய உணர்வை ஏற்படுத்துகின்றது. புகையால் பயந்த தேனீக்கள் சிறிது தேனைக் குடித்தவுடன் அமைதியாகி விடுகின்றன. இதனால் தேனீக்களில் கொட்டும் தன்மை வெகுவாகக் குறைகின்றது. மெழுகு மூடி சீவும் கத்தி நீளமானது. இரு புறமும் கூர்மையானது. மரக் கைப்பிடி உடையாது. இக்கத்தி கொண்டு தேனடைகளின் மெழுகு மூடிகளைச் சீராகச் சீவலாம். 12. தேனீ புருசுதேனீக்களைத் தேன் அடைகளிலிருந்து அப்புறப்படுத்தவும் தேனீக் கூட்டங்களைப் பிரிக்கும் சமயத்தில் தேனீக்களை புழு அடைகளிலிருந்து நீக்கவும் தேனீ புருசு உதவுகின்றது. இதன் கைப்பிடி மரத்தால் ஆனது. இதன் குச்சங்கள் மிருதுவானவை. 13. தேன் எடுக்கும் கருவிதேன் எடுக்கும் கருவி உருளை வடிவினாலான ஒரு பாத்திரமாகும். இப்பாத்திரம் பித்தளை, நாகத்தகடு அல்லது எவர்சில்வரால் ஆனது. இதனுள் ஒரு வலைப் பெட்டியுள்ளது. அவ்வலைப் பெட்டியினுள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட தேனடைச் சட்டங்களைச் செங்குத்தாகச் செருகி வைக்கலாம். மேலும் இவ்வலைப் பெட்டி இரண்டு பல்சக்கரங்கள் மூலம் ஒரு கைப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியைச் சுற்றும் பொழுது மைய விலக்கு விசை காரணமாக அடையிலிருந்து தேன் துளிகள் சிதறி விழுகின்றன. பிரித்து எடுக்கப்பட்ட தேன் இக்கருவியின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு சிறு குழாய் மூலம் வெளிவரும். இக்கருவியைப் பயன்படுத்துவதால்
|
|||||||
திருந்திய நெல் சாகுபடி |
|||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
|||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
|||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
|||||||
வல்லுனரை கேளுங்கள் |
|||||||