1980 ஆம் ஆண்டில், இந்தியாவில் சிறியாட்சி நிகழ்ச்சிகள்
ஆரம்பமானது, இந்த நிகழ்ச்சியானது, 1980 ஆம் ஆண்டில் வண்ணத் தொலைக்காட்சி,
தூர்தர்ஷனினால் வாங்கப்பட்ட போது ஆரம்பித்து, அதில் 1982ல் ஆசியா விளையாட்டு
நிகழ்ச்சி முதலில் காண்பிக்கப்பட்டது. அதன் பின், தேசிய அளவில், விரைவாக
நிகழ்ச்சியை வழங்க அங்கங்கு ஒளிபரப்பு கருவிகள் நிறுவனப்பட்டது. அந்த
நேரத்தில், தூர்தர்சன் மட்டும் இந்தியாவின் ஒரே தேசிய ஒளிபரப்பு. 1991 ஆம்
ஆண்டு, பிரதமர் நரசிம்மராவ் இருந்தபோது மத்திய அரசு பொருளாதாரம் மற்றும் சமூக
மாற்றங்களை கொண்டு வந்த புதிய திட்டத்தின் படி, இந்தியாவில் தனியார் மற்றும்
வெளிநாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய குறைந்த அளவு ஈடுபடுத்தப்பட்டது.
பின், தொன்னூறாம் ஆண்டின் ஆரம்பத்தில், வெளிநாட்டு
தொலைக்காட்சி ஒளிபரப்பான சி.என்.என், ஸ்டார் தொலைக்காட்சி ஆரம்பித்து
அதன்பின் ஜீ தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்தியா
வீடுகளுக்கு செல்லும் அளவிற்கு முன்னேறியது. இவ்வாறாக முன்னேறினாலும், சந்தை
நிலைத்து நிற்பதற்காக பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டு, வேளாண்மை நிகழ்ச்சிகள் குறைந்த அளவே வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில், வேளாண் நிகழ்ச்சிகள் கீழ்க்கண்ட
தொலைக்காட்சி ஒளிப்பரப்பில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. |