பயிர் பாதுகாப்பு :: மஞ்சள் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைப்புள்ளி :ஃபிள்ளோஸ்டிக்டா ஜின்ஜிபெர்ரி

விதைநேர்த்தி:

  • விதை கிழங்குகளை 0.3 % காப்பர் ஆக்ஸி குளோரைடு கொண்டு 30 நிமிடங்கள் ஊர வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் அல்லது போர்டோ கலவை 1% அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைட் 0.25% அல்லது  ரிடோமில் 0.1% கொண்டு நனைக்க வேண்டும்
  • விதை நேர்த்தி செய்ய சூ. புளூரசன்ஸ் 10 கிராம் / கிலோ மற்றும் டி. விரிடி  4 கிராம் / கிலோஅல்லது சூ. புளூரசன்ஸ் மற்றும் டி. விரிடி  மண் பயன்பாட்டில் 2.5 கிலோ / எக்டர் என  50 கிலோ தொழு உரத்தில் கலந்து நடவு செய்த 150 நாட்களில் பின் மேலுரமாக பயன்படுத்தலாம்.
மேலாண்மை:
  • 0.25 % காப்பர் ஆக்ஸிகுளோரைட் அல்லது 0.2% மேன்கோசெப் தெளித்தன் மூலம் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த முடியும்.

Image Source

https://www.plantvillage.com/

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016