த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றி கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. நவநீதம்

இடம்: காஞ்சிபுரம்

தொழில்: மட்டி சேகரிப்பவர்

 


மகளிர் மட்டி சேகரிப்பவர் (உயிர் ஊட்ட செயலி):

  • திருமதி நவீதம் காஞ்சிபுர மாவட்டத்தைச் சேர்ந்த கோவலத்தைச் சேர்ந்தவர். இவர் மட்டி சேகரித்து மட்டிகளைச் சந்தைப் படுத்துதலை முக்கியத் தொழிலாகச் செய்கின்றார்.
  • உணவகங்களுக்கும் பொரிப்பகங்களுக்கும் மட்டிகளை கொண்டு செல்கின்றார்
  • உணவகங்கள் மற்றும் பொரிப்பகங்களிடமிருந்து மட்டிகளுக்கான தேவை ஏற்பட்டால் இவர்கள் மட்டிகளைச் சேகரிக்க செல்வர்.
  • காலை ஆறு மணி முதல் மதியம் மூன்று மணி வரை இந்தத் தொழிலில் ஈடுபடுவர்
  • மட்டிகளைச் சேகரிக்கச் செல்லும்பொழுது மிக மெல்லிய ஆடைகளை உடுத்தி உணவு உண்ணாமல் உவர்நீருக்கு செல்வர்

மட்டி சேகரித்தலில் பெண்களின் ஈடுபாடு:

  • மட்டி சேகரிப்பதற்கு வெவ்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இடங்களைக் கண்டு கொண்டபிறகு வேறு இடங்களுக்கும் செல்வர்
  • திருமதி நவநீதம் மற்றும் அவர்களது குழுவினர் வரிசையாக உவர்நீர் கால்வாய்கள் அல்லது ஓடைகளுக்கு செல்வர்
  • நீச்சல் தெரிந்ததால் மேலோட்டமான பகுதிகளுக்கு நீந்தி மட்டிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிவர்
  • கரைக்கு வந்த பிறகு உணவை உண்பார்கள் சில சமையங்களில் வாந்தி வரும் என்பதனால் உணவை உட்கொள்ளாமல் வெறும் வயிற்றுடன் நீந்துவர்
  • கூர்மையான கடற்காய் கிளிஞ்சல்கள் பொதுவாக காலில் காயத்தை ஏற்படுத்தும்
  • காயங்களைப் பொருட்படுத்தாமல் இவர்கள் வேலை செய்வர்
  • உணவகங்களுக்கும் பொரிப்பகங்களுக்கும் மட்டிகளைக் கொண்டு செல்வதற்கு மோட்டார் பைக்குளில் ஒரு நாளைக்கு அறுபது கிலோ மீட்டர் செல்வர்
  • திருமதி நவநீதம், கிராமத்தில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறார்
  • கிராமப்புர கடலோர பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து போராடுகின்றார்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016