மகளிர் நண்டு விவசாயி (FRP கூண்டுகளில் நண்டுகளைத் தடிமனாக்குதல்)
- திருமதி. அருள்செல்வி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட சுய உதவிக் குழுவில் தலைவராக உள்ளார். இவர்கள், நண்டுகளை கண்ணாடிக் கூண்டுகளில் தடினமாக்கும் வேலை செய்கின்றனர்.
- 6 – 9 கண்ணாடிக் கூண்டுகளில் நண்டுகளைத் தடினமாக்குகின்றனர். ஒவ்வொரு கண்ணாடிக் கூண்டிலும் 500 – 700 கிராம் எடையுள்ள ஆறு நண்டுகளை இருப்புச் செய்கின்றனர்.
- கூண்டுகளின் நான்கு பக்கத்திலும் துகள்களைப் போடுவதனால் தண்ணீர் உள்ளே வெளியே செல்வது எளிதாக இருக்கும்.
- இறங்கும் மையங்களில் சேகரிக்கப்படும் குப்பை மீன்களை, நண்டுகளின் உடல் எடையின் 10 சதவீதம் உட்டப்படுகின்றது.
- கையால் நண்டுகளை அறுவடை செய்து உயிருடன் ஏற்றுமதியாளர்களுக்கு விற்கப்படுகின்றது.
- 500-1000 கிராம் எடையுடைய தண்ணீர் நண்டுகள், ரூ. 180-220/கிலோ விலைப் போகின்றது. 700-1000 கிராம் எடையுடைய கடினப்படுத்தின நண்டுகள், ரூ. 500-800/கிலோ விலைப் போகின்றது.
|