நாட்டுக் கோழி வளர்ப்பு :
- கால்நடை வளர்ப்புத் துறை, திருச்சி மாவட்ட சுய உதவிக் குழுப் பெண்களுக்கு, கொல்லைப்புற நாட்டுக் கோழி வளர்ப்பைப் பற்றினப் பயிற்சியை அளித்து வருமானம் மட்டும் வாழ்வாதாரத்தை அதிகரித்துள்ளனர்.
- இறைச்சிக் கோழியை ஒப்பிடும் பொழுது நாட்டுக்கோழியினால் வரும் வருமானம் அதிகமாக இருப்பதாக சுய உதவிக் குழுப் பெண்கள் கூறுகின்றனர்
- நட்டுக்கொழியின் சுவைதான் நாட்டுக்கோழி வளர்ப்பின் ஒரு கவர்ச்சிகரமான அம்சம் என்றே கூறலாம்
- முத்தரசனல்லூரில் உள்ள ஜீவா மற்றும் சங்கம் சுய உதவிக் குழுக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் 250 நட்டுக்கொழிகளை தங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் வளர்க்க முடிந்தது என்று கூருகின்றனர்
- திருமதி ஜீவா, “செப்டம்பர் 29 ல் நாட்டுக்கோழிக் குஞ்சுகள் எங்களுக்கு கிடைத்தது. இப்பொழுது, அவை, 1 கிலோ 300 கிராம் வரை வளர்ந்துள்ளன. எங்களுக்கு எப்பொழுதெல்லாம் பணம் தேவைப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அவற்றை சந்தைகளில் விற்று பணத்தை சம்பாரித்துக் கொள்வோம்” என்று கூறுகிறார்.
- “நாங்கள் நாட்டுக்கோழி வளர்பிற்கென்று ஒரு சதுர அடி இடைவெளியில் ஒரு கொட்டகையை கட்டினோம். இடைவெளி, ஒரு சதுர அடிக்கும் மேல் இருக்கலாம். மேலும், கிராமத்தில் வேலையில்லாதப் பெண்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு ஒரு தலை சிறந்த வாழ்வாதாரமாக இருக்கும்” என்று திருமதி. ஜீவா கூறுகின்றார்.
- வியாழக்கிழமைகளில், ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் ஆர். மோகனா ரஞ்சன், இணை இயக்குனர், கால்நடைப் பராமரிப்புத் துறை ஆகியோர், நாட்டுக்கோழிப் பண்ணையைப் பார்வையிடுவர். ஒவ்வொரு அலகிற்கும், ரூ. 1,29,000 தருவதாக மாவட்ட ஆட்சியாளர் கூறினார். இதில், 50௦ % வங்கிக் கடனாக இருக்கும். இதற்கென்று, மாநில அரசு 25% மானியமாகத் தருகின்றது. மேலும், வேளாண்மை மற்றும் கிராம மேம்பாடு தேசிய வங்கி, 25 % மானியமாகத் தருகின்றது.
- 2012 – 13 ல், ஒரு அலகிற்கு, ரூ. 1,17,000 மானியமாக 35 பெண்களுக்குத் தரப்பட்டது. 2012 – 13 ல், 240 பெண்களுக்குத் தரப்பட்டது. இந்த வருடம், மானிய விலை ரூ. 1,29,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த வருடத்தின் இலக்கு, 160 பயனாளிகளை உருவாக்குவதுதான்.
- வயதானவர்களுக்கு, கொழுப்பில்லாமலிருக்கும் நாட்டுக்கோழி சிறந்த உணவாக இருக்கின்றது. நாட்டுக்கொழி மற்றும் நாட்டுக்கோழி முட்டைகளில் புரதச் சத்து அதிகம் இருப்பதனால் கிராமப்புற மக்களின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். நகர்ப்புறத்தில், உணவகங்களில் நாட்டுக்கோழி உணவு என்று தனியாகவே வாடிக்கயாளர்களுக்குத் தருகின்றனர்.
|